Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சேலை உடுத்தி நடிக்காமல், மாடர்ன் டீச்ச‍ராக நடித்துள்ளேன்!” – நடிகை ரம்யா நம்பீசன்

நடிப்பு, பின்னணி பாடுவது என்று இருவழிப் பாதையில் பயணித்து வருபவர் ஆண்ட்ரியா பாணி அவருக்கு அடுத்த‍ படியாக நடிகை (பாடகி) ரம்யா நம்பீசன் இருக்கிறார். அவர் நடித்த‍ பீட்சா திரைப்படம் வெற்றி அடைந்த்தை தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்தாலும் விமலுடன் நடித்து வரும், ரெண்டாவது படம் படம் தனது திரையுலக வாழ்க்கை யில் முக்கியத் திருப்ப‍த்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் இருக்கும் ரம்யா நம்பீசனிடம் இதுகுறித்து சில கேள்விகள் கேட்கப்ட்ட‍ போது, . .

இந்த ரெண்டாவது படம் என்ற இந்த திரைப்படத்தில், இதுவரை நான் நடிக்காத டீச்சர் வேடத்தில் நடிக்கிறே ன். வழக்கமான டீச்சர்களை போ ன்று, குடை பிடித்தபடி கதர் சேலை உடுத்தி நடிக்காமல், மாடர்னான டீச்சராக நடித்துள்ளேன். மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் விஜய லட்சுமிக்கும், எனக்கும் ஈகோ போர் வெடித்த தாக கூறப்படுவது சுத்த‍ பொய், அவ ரை, எனக்கு போட்டி யாக கருதவில் லை. அவரை எனது சக நடிகையாக வும், தோழியாகவும் மட்டுமே கருதுகிறேன்.

நாங்கள் இரண்டு பேரும் இணைந்து நடித்த போது கூட, ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பி வைத் துக் கொண்டு இருக்காமல், இயல்பாக சிரித்து பேசிக் கொண்டு தான் இருந்தோம். சக நடிகைகளுடன் சண் டை போடுவதற்கு, நான் ஒன்றும் சண்டை கோழி கிடையாது., சிலிர்க்கிறார், ரம்யா.

Leave a Reply