Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: இருக்கும் அழகை சிறப்பாக வெளிப்படுத்த . . .

அழகு…

இந்த சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு. கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப்பொய் அழகு என கவிஞர் வைரமுத்து பாணியில் போரடிக்கா மல் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிடுவோம்.

பெண்கள் தங்களின் தோற்றத்திற்கேற்ப எப்படி ஒப்பனை செய்து கொண்டால், கூடுதல் அழகாக த்தெரிவார்கள் என்பதற்கு சில டிப்ஸ் தந்துள்ளோ ம். முடிந்தால் முயற்சித்துப் பாருங்கள்.

எப்படிதான் அழகுபடுத்திக்கிட்டாலும் இருக்கறதுதான் இருக்குங்க என்பது வேறு விஷயம்?! இருக்கும் அழகை சிறப்புடன் வெளிப்படு த்தலாமே!

அழகுபடுத்திக் கொள்ளுதல் என்பதே ஒரு தனி கலை. அக்கலையை எப்படி பெண்கள் கையாளு கிறார்கள் என்பதே முக்கியம். பெண்கள் முதலி ல் தங்களின் நிறத்திற்கேற்ப ஆடைகளின் நிறங் களைத் தேர்வு செய்ய வேண்டும்.

மாநிறம், வெளிர் சிகப்பு, நல்ல சிகப்பான தோற் றம் கொண்டவர்கள் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும், டார்க் ஆன புடவைகளை யோ, டார்க் சுடிதார் போன்ற ஆடைகளையோ அணிந் தால், தோற்ற ப்பொலிவு அதிகரித்து மிளிர்வர்.

சற்றே நிறம் கம்மியாக இருப்பவர்கள் அல்லது கருப்பாக இருப்பவ ர்களானால், பெரும்பாலும் லேசான வண்ணங்களிலான (லைட் கலர்) ஆடைகளைத் தேர்வு செய்தால் அவர்களின் தோற்றம் எடுப் பாகி தனி அழகு பிறக்கும்.

கூடிய வரை கருப்பாக இருப்பவர்கள் வெளிர் நீலம், வெளிர் பச்சை, வெளிர் ரோஸ், வைலட் போன்ற அதிகம் கலர் காம்பினேஷன் இல் லாத வண்ணங்களிலான ஆடைகளைத் தேர்வு செய்து அணிந்தால் அவர்களின் அழகு மேலும் அதிகரித்து மின்னுவார்கள்.

அழகைத் தரும் மேக்கப்

மேக்கப்-ஐ பொருத்தவரை நன்றாக சிவப்பு நிறம் உடையோர் முக த்தில் அதிக அளவில் பவுடர் பூச்சு செய்யத் தேவையில்லை. வழக்க மாக உபயோகிக்கும் சாதாரண பவுடர்களை அளவோடு பூசினாலே இயற்கையான அழகுட ன் எளிமையும் சேர்ந்து கூடுதல் அழகைத் தரும். ரோஸ் பவுடர் போன்ற காஸ்மெட்டிக்ஸ் மற்றும் உதட்டுச் சாயங்களை மேக்கப் என்ற பெயரில் சிவப்பான தோற்றம் கொண் டோர் அதிக அளவில் போட்டுக்கொண்டால் இருக்கு ம் அழகைக் கெடுத்து வைக்கும் என்பதை மறவாதீர்.

மாநிற தோற்றம் கொண்ட பெண்களைப் பொறுத்தவரை மேக்கப் பின் போது சற்றே அதிகமாக ரோஸ் பவுடரை பூசினால் பொலிவு பெறுவர்.

ஓரளவுக்கு மேல் பவுடர் பூச்சு அதிகரித்து விடாதவாறு கவனமாக மேக்கப் செய்தல் அவசியம்.

உதட்டுச் சாயத்தைப் பொறுத்தவரை, மாநி றம் கொண்டோர் தேவை ப்பட்டால் மட்டுமே போட்டுக் கொள்ளலா ம்.

சற்றே கருப்பாக இருக்கும் பெண் கள் அல்லது நன்றாகக் கருமை நிறம் கொண்டோர் பெரிய அளவில் கவலைப்படத் தேவையில் லை. ஏனெ ன்றால் சிகப்பான தேகத்தை க் கொண்டோரைப் போல கட்டு ப்பாடுகள் கிடையாது.

அவர்கள் ரோஸ் பவுடரை விரும்பினால் மட்டுமே பூசிக் கொள்ளலாம். இல்லையேல் சாதாரணமா க அன்றாடம் பயன்படுத்தும் முகப் பூச்சு பவுடரை குறிப்பிட்ட அளவில் எப்போதும் போல உபயோ கிக்க லாம்.

கருப்பு நிற பெண்கள் கூடுமான வரை உதட்டுச் சாயத்தைத் தவிர்த் தல் நலம்.

லிப்ஸ்டிக் கண்டிப்பாக வேண்டும் எனும்பட்சத்தில், லேசாக பட்டும் படாமலும் பூசிக் கொள்ளலாம். இந்த வழிமுறைகளைக் கடைபிடி த்தால் கருப்பே தனி அழகைத் தரும்.

அழகுக்கு அழகு சேர்க்கும் சூட்சுமங்கள் இவை தான். அழகு படுத்து கிறேன் பேர்வழி என்று கூறிக் கொண்டு இயல்பாக இருக்கும் இயற் கை அழகைக் கெடுக்கும் விதத்தில் தங்கள் தோற்றத்திற்கும், உரு வத்திற்கும் பொ ருந்தாத வகையில் சில பெண்கள் ஒப்பனை செய்து கொள்வர். அது அவரவர் மனோபாவத் தைப் பொருத்ததாகும்.

அழகு என்பது ஒவ்வொருவரின் மனதைப் பொருத்தது. அவரவர் எண்ணங்களுக்கும் ஏற்ப அழகின் நிலைப்பா டும், வரையறையும் வேறுபடும்.

இதையே “Beauty is different from different eyes” என்பர்.

ஒருவருக்கு அழகாகத் தெரிவது வேறு ஒருவ ருக்கு அசிங்கமாகத் தெரியலாம்.

எனவே அவற்றைப் பற்றியெல்லாம் நாம் கவ லை கொள்ளத் தே வையில்லை.

நம்மால் இயன்றவரை இயற்கையான அழகோ டு செயற்கை பொரு ட்களில் குறைந்த நம்பிக்கையும், நாட்டமும் கொள்வோம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: