Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – கண்கள் அலங்களாரம்

கண்களை மட்டும் நன்றாக அலங்கரித்து விட்டாலே போதும்… பாதி அழகு வந்து விடும். எனவே உங்களைச் சொல்லும் கண்களை அழகாக அலங்கரித்துக் கொள்ளு ங்கள்.

ஒரு சிலருக்கு ஐ லைனர் கூட போடத் தெரி யாது. ஆனால் தெரியாது என்று விட்டுவிட வேண்டாம். வீட்டில் இருக் கும்போது போட்டு முயற்சி செய்து கொண்டே இருங்கள்.

நாளடைவில் நீங்களே பெரிய ஐ லைனர் கலைஞராக மாறி உங்கள் நண்பிகளுக்கு போட்டுவிட்டு சபாஷ் பெறுபவராக மாறுவீர்கள்.

சரி கண்களை எப்படி அலங்கரிப்பது என்று பார்ப் போம்.

உங்கள் கண்கள் பெரிய இமைகளைக் கொண் டிருப்பின்…

கண் இமைகளை சிறியது போன்று காட்டுவதற்கு இமைகளின் மேல் முனைப் பகுதியில் அழுத்த மான ஐ ஷேடோக்களை இடவும்.

பிறகு அதே வர்ணத்தின் இளம் நிறத்தை நடுப் பகுதியில் இட்டு மீண்டும் அழுத்தமான நிறத் தைக் கொண்டு முடியுங்கள்.

கண்ணின் முனைப்பகுதிகளில் ஐ லைனரை நன்கு அழுத்தமாக வைத்து கண்களின் அழகுக்கு அழகு சேருங்கள்.

சிறிய கண்களைக் கொண்டவர்கள்..

நன்கு அழுத்தமான வர்ண ஐ ஷேடோவைக் கொ ண்டு இமைகளின் மேற்புறங்களில் கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு இளம் நிற ஐ ஷேடோ வைக் கொண்டு நிரப்புங்கள்.

இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள்.

சிறிய கண்களும் தற்போது எடுப்பாகத் தோன் றும்.

உள்நோக்கி இருக்கும் கண்களுக்கு…

கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு, இமையின் முடிவில் அழுத்த மாக முடிக்கவும்.

இது உங்கள் கண்களை அழகாக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: