Saturday, July 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறந்த லேப்டாப் வாங்க . . .

சிறந்த லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்க வேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.

SONY
HP
DELL
SAMSUNG
THOSHIBA
LENOVA
ACER

VA10

சரி இனி நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந் தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்து கொள் ளுங்கள்.  Laptop Configuration & Processor

Processor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமா க பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக Intel Core i3 என்பதா கும். எனவே நீங்கள் விலை கூடுதலா ன ஒரு லேப்டாப்பை வாங்க வேண்டுமென்றால் முதலில் நல்ல ஒரு பிராண்டை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த Processor ஐ

Intel Core i7
Intel Core i5
Intel Core i3

என்ற வரிசையில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொ ள்ளுங்கள். இந்த மூன்று வகையான Core வரிசை யில் உள்ள Processor களில் ஒன்று உங்கள் பட்ஜெட்டுக்கு விலை கூடு தல் என்று நீங்கள் நினைத்தால் இவைகளை விட தரம் குறைந்த Intel Core 2 Duo அல்லது Intel Dual Core என்ற Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இதை விட தரம் குறைவான Processor ஐ நீங்கள் தேர்ந்தெடுத்தால் அது இன்றை ய நவீன டெக்னாலஜிக்கு பொரு த்தமா னதாக இருக்காது.

Intel® Core™ i7-640M Processor 2.80 GHz

அடுத்ததாக இங்கு மேலே காண் பதுபோல் இந்த Processor உடன் 2.80 GHz என்று குறிப்பிடு இருப்ப தை போல நீங்கள் வாங்கும் லேப்டாப்பிலும் ஒரு நம்பருடன் GHz என்று குறிப்பிட்டு இருக்கும். இந்த நம்பரையும் நீங்கள் கவணமாக பார்க்கவேண்டியது மிக அவசியம். ஏனென்றால் இந்த 2.80 GHz என்பதை விட 2.00 GHz அல்லது 1.60 GHz என்பதன் Processor வேகம் மிக குறைவானது. 2.00 GHz லேப்டாப் மாட லை விட 2.80 GHz லேப்டாப் மாடலின் விலை குறைவானதாக இருக்கு மேயானால் வேறு எந்த டெக்னாலஜி இதில் இல்லை என பார்க்க வேண் டியது அவசியம். 

RAM

அடுத்ததாக மிக முக்கியமான விசயம் RAM. நீங்கள் கம்ப்யூட்டரை திறந்த பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட புரோகிராம்களை பயன்படுத்தும் பொழுது கம்ப்யூட்டரின் வேகம் குறைந்துவிடாமல் பாதுகாப்பதில் இந்த RAM மிக முக்கிய பங்கு வகுக்கிறது. அதனால் இன்றைய அட்வாண்ஸ் புரோகிரா ம்களை பயன்படுத்த நினைக்கும் நீங்கள் குறைந்தது 2 GB RAM இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். (4 GB RAM இருந்தா ல் சிறந்தது) இதில் இன்னொரு முக்கியமான விசயம் DDR3 என்ற அட்வாண்ஸ் டெக் னாலஜி கொண்ட RAM நீங்கள் வாங்கும் லேப் டாப்பில் பொருத்தப்பட்டுள்ளதா என கேளு ங்கள். (பொதுவாக விலை குறைந்த லேப்டா ப் வாங்கும்பொழுது அதில் DDR2 RAMமட்டுமே பயன்படுத்தப்படுகிறது).

HARD DISK

அடுத்தாக நீங்கள் கவனிக்க வேண்டிய து இந்த ஹார்ட் டிஸ்க். பொது வாக கம்ப்யூட்டரை பற்றிய விபரங்கள் அதி கம் அறியாதவர்கள் கம்ப்யூட்டரின் இயங்கும் வேகம் அதில் பொருத்தப்ப டும் ஹார்ட் டிஸ்கின் அளவை பொரு த்துதான் உள்ளது என தவறாக என்னு கிறார்கள். கம்ப் யூட்டர் இயங்கும் வேகத்திற்கும் இந்த ஹார்ட் டிஸ்கின் அளவுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. ஆனால் இன்றைய மென்பொருள்க ளின் அதிவேக வளர்ச்சியின் காரணமாக நாம் ஹார்ட் டிஸ்க் அளவி லும் கொஞ் சம் கவணம் செலுத்த வேண்டி உள்ளது.

நீங்கள் கோரல்ட்ரா, போட்டோசாப் போன்ற போட்டோ டிசைனிங் மென் பொருள் மற்றும் வீடியோ டிசைன் செய்யும் மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து பயன்படுத் துபவராக இருந்தால் மற்றும் உங்களுக்கு விருப்பமான ஆடியோ வீடி யோ பைல்களை உங்கள் லேப்டாப் பில் காப்பி செய்து வைத்து பயன்ப டுத்தும் பழக்கம் உள்ளவராக இருந் தால் உங்கள் ஹார்ட் டிஸ்கின் அள வு குறைந்தது 320 GB இருக்க வேண்டும்.

ஆடியோ வீடியோ கம்ப்யூட்டரில் காப்பி செய்ய தேவை இல்லை என் றால் 160 GB போதுமானது. எனக்கு எந்த தேவையும் இல்லை மைக்ரோ சாப் ஆபீஸ் மட்டும் தான் பயன்படு த்துவேன் அடுத்ததாக நான் இண் டெர்நெட் பயன்படுத்துவேன் அதோடு யூடுப் பயன்படுத்துவேன் என்று நீங்கள் சொல்பவராக இருந்தால் உங்க ளுக்கு 80 GB ஹார்ட் டிஸ்க் என்பதே மிக அதிகம். பொதுவாக இந்த ஹார்ட் டிஸ்குகளில் நீங்கள் பார்க்க வேண்டிய இன்னொரு விசயம் அத ன் வேகம். SPEED 7200 RPM அல்லது SPEED 5400 RPM போன்றவை மிக சிறந்தது. இதனை விட நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் ஹார்ட் டிஸ்க் ஸ்பீடு குறைந்ததாக இருந்தா ல் அங்கு இருப்பதில் எது கூடுதலாக RPM என்பதை தேர்ந்தெ டுங்கள்.

DVD DRIVE

நீங்கள் மேலே குறிப்பிட்டது போன்று பிராண்டட் லேப்டாப் வாங்கும் பொழுது DVD டிரைவை பற்றி அதிக கவணம் எடுக்க தேவை இல்லை. ஏனென்றால் பிராண்டட் லேப்டாப்புக ளில் அதற்கு பொருத்தமான தர மிக்க DVD டிரைவ் பொருத்தி இருப்பார்கள். இந்த டிரைவில் SuperDrive 8x(DVDR DL/DVDRW/CD-RW) என்பது போன்ற குறிப்பு இருக்கிறதா என பார்த்துக் கொ ள்ளுங்கள்.

GRAPHIC CARD

பொதுவாக விலை குறைந்த லேப்டாப் அல்லது டிஸ்கவுண்ட் விலைக ளில் கிடைக்கும் லேப்டாப்புகளில் இந்த கிரபிக் கார்டு இணைந்திருப்பது இல்லை. கீராபிக் கார்டு இணைக்கப்பட்டுள்ளது என்று அந்த லேப்டாப் குறிப்பில் எழுதப் பட் டிருந்தால் அது மற்ற லேப்டாப்பை விட விலை கூடுதலாகவே இருக்கும். நீங் கள் வீடியோ அனிமேசன் மற்றும் போட் டோசாப், கோரல்ட்ரா டிசைனிங் செய்பவராக இருந்தால் மற்றும் வீடியோ கேம் அதிகம் பயன்படுத்துபவராக இருந் தால் உங்களுடைய லேப் டாப்பில் கிரா பிக் கார்டு இணைந்திருப்பது மிக அவசியமான ஒன்று. அல்லது உங்கள் லேப்டாப்பில் அதிக தெளிவுமிக்க வீடியோ (HD High Definition Video) பட ங்களை பார்க்கவேண்டும் மற்றும் ஸ்டீரியோ இசையுடன் தெளிவான ஆடியோ பாடல்களை கேட்க வேண்டு ம் என்ற ஆர்வம் கொண்டவராக நீங்க ள் இருந்தால் இந்த கிராபிக் கார்டு இணைந்துள்ள லேப்டாப் நீங்கள் வாங் குவது சிறந்தது.

இந்த கிராபிக் கார்டு இணைந்த லேப் டாப்பை நீங்கள் வாங்கும்பொழுது இன்னொரு முக்கியமான விசயத்தையும் பார்க்கவேண்டியது அவசிய ம். அதாவது இந்த கிராபிக் கார்டு Dedicated Graphic அல்லது Integrated graphics (shared memory) என இரண்டு வகைகளில் லேப்டாப்பில் பொ ருத்தப்படுகிறது. இதில் Dedicated Graphic என நீங்கள் வாங்கும் லேப் டாப்பில் எழுதப்பட்டிருந்தால் இதுவே சிறந்தது.

இந்த Dedicated Graphic Card உங்கள் லேப்டாப்பில் இணைக்கப்பட்டிருந் தால் நீங்கள் அதிக கெபாசிடி உள்ள ஒரு வீடியோ கேம் விளையாடும் நேரத்தில் அந்த வீடியோ கேமுக்கு தேவையான மெமரியை இந்த Dedi cated Graphic Card கொடுப்பதால் கம்ப்யூட்டர் எந்த விதத்திலும் வேகம் குறைவது இல்லை. கம்ப்யூட்டர் மெமரி அப்படியே இருக்கும். இதனால் வீடியோ கேம் இயங்குவதில் தடை எதுவும் ஏற்படாது.

ஆனால் Integrated graphics (shared memory) என்று குறிப்பிட்டுள்ள லேப்டாப் நீங்கள் வாங்கினால் இந்த வீடியோ மெமரி உங்கள் கம்ப்யூட் டரின் வேகத்தில் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதால் அதிக கெபாசிடி உள்ள வீடியோ கேம் விளையாடும்பொழுது கம்ப்யூட்டர் மெமரி குறை ந்து கம்ப்யூட்டர் எரர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அதனால் நீங்கள் 3D வீடியோ கேம் போன்ற அதிக கெபாசிடி உள்ள கிராபிக் பயன்படுத்துபவ ராக இருந்தால் உங்கள் லேப்டாப்பில் Dedicated Graphic Card இணைந் துள்ளதா என பார்த்துக் கொள்ளுங் கள். போட்டோசாப், கோரல்ட்ரா மற் றும் சின்ன சின்ன கிராபில் சாப்ட் வேர்கள் பயன்படுத்துபவராக இருந் தால் Integrated graphics (shared memory) உள்ள லேப்டாப் வாங்கினா ல் போதும்.

Operating System ( OS)

விலை அதிகம் உள்ள லேப் டாப் வாங்க நினைக் கும் நீங்கள் இந்த ஆப ரேடிங் சிஸ்டத்தில் கவனக் குறைவாக இருந்து விடா தீர்கள்.  ஏனென்றா ல் எல் லாம் சரியாக இருந்து ஆபரேடிங் சிஸ்டம் சரி இல்லை என்றால் லேப் டா ப் பயன்படுத்துவதே சிரமம் என்று ஆகிவி டும்.  இப்பொழுதெல் லாம் அட்வான்ஸ் லேப்டாப்களில் Widows 7 ஆபரேடிங்க் சிஸ்டம்தான் இன்ஸ்டால் செய்து விற்பனை செய்கிறார்கள். ஆனால் இந்த Windows 7 ல் பல வித்தியாசம் இருக்கிறது.

Windows 7 Ultimate
Windows 7 Professional
Windows 7 Home Premium
Windows 7 Home Basic
Windows 7 Starter version

இப்படி விண்டோஸ் 7 வெரிசனில் பல வகை உண்டு. இதில் Windows 7 Ultimate மற்றும் Windows 7 Professional இவை இரண்டும் மிகச்சிறந்தது என்றாலும் இந்த வெரிசன் இணைக்கப் பட்ட லேப்டாப்புகள் மற்றவற்றை விட விலை மிக அதிகமாக இருக்க லாம். இருப்பினும் இதற்கு அடுத்த தாக மிக சிறப்பாக செயல்படக் கூடிய Windows 7 Home Premium வெரி சனையாவது நாம் வாங்குவ து மிக சிற ந்தது. மேலும் இதில் 64 Bit என்ற வெரிசனை தேர்ந்தெடு ங்கள். Windows 7 Home Premium 32 Bit ஐ விட Windows 7 Home Premium 64 Bit கிராபிக் மென்பொருள் பயன டுத்துவ தற்கு மிக சிறந்தது.

Widows 7 Home Basic மற்றும் Windows 7 starter Version இவை இரண் டிலும் நீங்கள் எந்த வித நவீன மென்பொருளையும் ( Software) சிறப்பு டன் பயன்படுத்த முடியாது.

அடுத்ததாக புதிய வகை லேப்டாப் புகளில் மைக் வெப் கேம் அனைத் தும் இணைந்தேதான் வருகிறது .இருப்பினும் இவை உள்ளனவா என பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் லேப்டாப்பை LCD அல்லது LED T.Vயில் HDMI வீடியோ கேபிள் மூலம் இணைத்து பயன்படுத்த விரும்பினால் நீங்கள் வாங்கும் லேப்டாப்பில் HDMI Port உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.Memory Card Slot, Front Mic, Audio, SRS Speaker System இவை இணைந்ததா என பார்த்துக் கொ ள்ளுங்கள். இது தவிர நீங்கள் வாங்கும் லேப்டாபுக்கு இலவசமாக கிடைக்கும் மவுஸ் மற்றும் லேப் டாப் பேக் கிடை க்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!

********************************************************************************************************

AANINFOTECH

CALL NOW 9840398311

சிசிடிவி கேமராவை பற்றிய விரிவான தகவல்களுக்கு மேலுள்ள‍ வரியினையோ அல்ல‍து இந்த வரியினை சொடுக்குக (கிளிக் செய்க•)

 

One Comment

Leave a Reply