Wednesday, January 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மெகா பிக்சல் ஸ்மார்ட்போன்

சிக்காகோ சன் டைம்ஸ் பத்திரிகை சமீபத்தில் இருபத்தெட்டு முழுநேர போட்டோகிராஃபர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டது. இனி முழுநேர போட்டோகிராஃபர்களுக்குத் தேவை யில்லை, ஐபோன் போட் டோகிராஃபர் களே போதும், அவர்கள் போட்டோக்க ளோடு வீடியோக்களும் எடுத்துத் தரு வார்கள் என்று முடிவுசெய்துவிட்டது அந்நிறுவனம். ஸ்மார்ட்போன்களும் ஐபோன்களும் வந்தபின்னர் ஏற்பட்டிருக்கும் முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஸ்மார்ட்போன் கேமராக்களின் அபாரத் தெளிவு, துல்லி யம், ஒளி… என்று ஏராளமான கார ணங்கள் அடுக் கப்படுகின்றன.
 
ஸ்மார்ட்போன்களுக்கு முன்னால், கேமராவின் திறனைக் கூட்டுவதில் நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. முதன்முதலில், 2000ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாம் சங் நிறுவனம் போனோடு சேர்ந்த கேமராவை அறிமுகப்படுத்தியது. 0.35 மெகாபிக்சல் தரம் கொண்ட அந்த கேமராபோனில், போன் தனி யாகவும் கேமரா தனியாகவும் இருந்தது. ஆனால் இரண்டு ஒரே பெட்டி யில் அடக்கப்பட்டிருந்தது, அவ்வள வுதான். ஆனால், 2002 நவம்பரில் அமெரிக்காவில் கேமரா போன் ஜுரம் ஆரம்பித்தது. சான்யோ எஸ்சிபி – 5300 என்ற மாடல் போன் அந்தக் காலத்திலேயே நானூறு டாலர் விலை கொண்டது. 0.3 மெகாபிக்சல் தான் அதன் கேமரா தரம். 2003 கடைசிக்குள் கேமரா போன் ஜுரம் அதிகமாக, உலக மெங்கும் கிட்டத்தட்ட எட்டு கோடி கேமரா போன்கள் விற்று த்தீர்ந்தன.
 
அதன்பிறகு ஒவ்வொரு பெரிய நிறுவனமும் தங்கள் செல்போனில் கேமராவின் பிக்சல் அளவை உயர் த்திக்கொண்டே வந்தன. முதலில் மூன்று மெகாபிக்சல், அப்புறம் வந்த ஐந்து மெகாபிக்சல் கேமராக்கள் ஆச்சர்யத்தோடு பார்க்கப்பட்டன. நோக்கியா என்95 தான் இந்த வரிசை யில் பெரிய கேமராவோடு வந்தது. அதன்பிறகு சட்டென ஸ்மார்ட்போ ன் அலை அடிக்க ஆரம்பித்தது. 2008 ல் சாம்சங் ஐ8510 முதல் எட்டு மெகா பிக்சல் கேமராவோடு வர, அதே நிறுவனம் 2009ல் 12 மெகா பிக்சல் கொ ண்ட போனை வெளியிட்டது. 2010ல் சோனி எரிக்ஸன் 16 மெகா பிக்ச லோடு கூடிய எஸ்006 போ னை வெளியிட்டு அசத்தியது. ஸ்மார்ட் போ ன்கள் படையெ டுப்பால், இந்தக் கேமரா போ ன் மோகம் கொஞ்சம் குறை ந்தாற் போலிருந்தது.
 
இது நடுவே ஹெச்.டி.சி.யும் எல்.ஜி. நிறுவனமும் 3டி போ ட்டோக்கள் எடுக்கும் கேமரா போன்களை 2011ல் வெளியிட்டன. ஆனால், எதிர்பார் த்த வரவேற்பு இல்லாமல் போகவே, அமைதியாக 3டி கேமரா போன்கள் காணாமல் போயின. இதற்குள் ஐபோன்களில் இருக்கும் கேமராக்களின் மீது காதல் ஏற்பட்டுவிட்டது. சமீபத்தில் ஹெ ச்.டி.சி. நான்கு மெகாபிக்சல் கேம ராவே போதும் என்று பேச ஆரம் பித்திருக்கிறது.ஆனால், நோக்கி யாவோ இந்தப் போட்டியை விடு வதாக இல்லை. சோனி எஸ்பெ ரியா இசட் இன்னொரு பக்கம் 13 மெகாபிக்சல் கேமராவோடு வெ ளிவந்து விட்டது. சாம்சங், 16 மெகாபிக்சல் கேமரா போனோடு வர, போட்டியை விடுமா நோக்கியா? நோக்கியா லூமியா 1020 என்ற அதன் சமீபத்திய மாடல், 41 மெகா பிக் சல் கேமராவோடு வந்திருக்கிறது. இது ஐபோன் 5 மாடல் எடுக்கும் போட்டோவோடு இன்னும் துல்லியமான து என்று சத் தியம் செய்கிறார் கள்.கேமரா போன்கள் வெறுமனே போட்டோ எடுப்பத ற்கு மட்டும்தான் என்று நினைத்துவிட வே ண்டாம். அதில் ஏற்பட்டிருக்கும் முன்னே ற்றங்கள் தான் ஆச்சர்யப்படுத்துகின்றன. பல ஸ்மார்ட் போன்களுக்கான கேமரா அப் ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டிருக்கின்ற ன. உதாரணமாக, கடைகளில் பொருள்கள் வாங்கும்போது, பார்கோடுக ளைப் படிக்க கேமரா போன் அப்ளிகேஷன் வந்திருக்கி றது. படங்களை எடுத்து அதை அப்படியே படித்து ஒரு மொழியில் இருந்து இன்னொ ரு மொழிக்கு மொழி பெயர்க்கும் அப்ளிகே ஷன்களும் வந்துவிட்டன. வங்கித் துறையில் கேமரா போன்களுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு சூப்பர். உங்கள் காசோலையை போன் கே மராவில் ஒளிப்படம் எடுத்து அதை அப்ப டியே வங்கிக்கணக்கில் சேர்க்க முடியுமா ம். இதன் இன்னொரு தொடர்ச்சிதான், கட் டணங்களுக்கான பில்களைச் செலுத்துவ திலும் ஏற்பட்டிருக்கிறது.நீங்கள் செலுத்த வேண்டிய பில்லை அப் படியே போ ட்டோ பிடித்து, அதன் தகவல்களை உள்வாங்கிக் கொண்டு, நேரடியாக வங்கியில் இருந்து அத ற்கு உண்டான தொகை உரிய நிறுவனத்துக்கு க் கட்டிவிட முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக் கிறது. நீங்கள் நேரே ஒரு குறிப்பிட்ட இடத்துக் குப் போய் தான் பில்லைக் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லாமல் போய் விட்டது. மொ பைல் போன் கேமரா வளர்ச்சி இன்னும் தொடரும்.
 
– ஆர்.வெங்கடேஷ்

Leave a Reply