Monday, May 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

விவேகானந்தரும், விலைமாதுவும்!

கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல் லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள். ‘உல் லாசம்’ என்பதற்கு இன்னொரு உள் அர்த்த மும் உண்டு என்பதை அறியாத விவேகா னந்தரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு அவர் களுடன் சென்றார். இவர்கள் சென்ற வண் டி ஒரு மாளிகையின் முன்பாக நின்றது. எல்லாரும் இறங்கினார்கள். மாளிகைத் தோட்டத்தில் விருந்து பாட்டு, கூத்து. என் று கலகலப்பாக நேரம் சென்றது.

விவேகானந்தருக்கு இந்த நிகழ்ச்சி அந்நியமாக பட்டதால் தனியாக ஒரு அறைக்குச் சென்று படுத்து விட்டார். இதைப் பார்த்த அவரின் நண்பர்கள் ஒரு நடன மாதைக் கூப்பிட்டு அவரின் அறைக்கு அனுப்பி வைத்த னர். அவள் எதற்காக வந்திருக்கிறா ள் என்பதை அறியாத விவேகான ந்தரும் அவளுடன் சரளமாக பேசலா னார். அவளும் தன் வாழ்க்கையின் அவலங்களை எடுத்துச் சொல்ல இவரும் அக்கரையுடன்கேட்டப்படி அவ்வப்போ து ஆறுதலான வார்த் தைகளைச் சொன்னார்.

இவரின் ஆறுதல், அனுதாபம் அவளை உசுப்பி விட்டது. தன்னு டைய இச்சையை அவள் பச்சை யாகவே சொல்லிவிட்டாள். அவளது இந்த பேச்சைக் கேட்ட விவேகானந்தர், அவளிடம் மயங்க வோ, அல்ல‍து அவளைக் க்ண்டு நடுங்கிப் போகவோ இல்லை. அதற்கு பதிலாக விவேகானந்தர் சிறிது நேரம் அமைதி காத்தார். அந்நேரத்தில் அவரது கண்களுக்கு. ராம கிருஷ்ணரும், பவதா ரினியும்தான் தெரிந்தனர். “மன்னித்துக்கொள் தாயே ! நான் அவசரமாக வெளியே போகவேண்டும்” என்று வெளியேறி விட்டார். விவேகானந்தரின் நண்பர்களிடம் திரும்பிச்சென்ற அந்த பெண். ” உங்கள் வேடிக்கை க்கும் ஒரு அளவு இல்லையா. போயும் போயும் ஒரு சாமியாரிடம் என்னை அனுப்பி வைத்தீர்க ளே” என்று கடிந்து கொண்டாள் என்பது தான் அந்த நிகழ்வு.

இதிலிருந்து நாம் தெளிவாகத் தெரிந்து கொள் ளவேண்டியது என்ன வென்றால் ஒரு இலக் கை நோக்கி நாம் நடந்து செல்லும்போது இடையில் சில மலிவானவை நமது மனதை கெடுத்துவிடப் பார்க்கும். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: