ஒரு நாட்டில் போர் நடந்து கொண்டி ருந்தது.
அரசாங்கம் “குடிமக்கள் அனைவ ரும் தம் சக்திக்கு ஏற்ப யுத்த நிதி வழங்க வேண்டும்” என்று ஒரு உத்தரவு போட் டது.
ஒரு பெரும் பணக்காரர் மட்டும் ஒரு பைசா கூட தராதது ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டது.
உடன் ஒரு அதிகாரி அந்தப் பணக்காரரிடம் பேசி நிதி வாங்கி வர அனுப்பப் பட்டார்..
“அய்யா, தாங்கள் இதுவரை நிதிதரவில் லை என்பது அரசு ஆய்வில் தெரிய வந்து ள்ளது.. எனவே…”
“நிறுத்துங்கள்.. என்னய்யா பெரிய ஆய்வு..? என்னுடைய தாய் அடுத்த வேளை சோற்று க்கில்லாமல் பட்டினி கிடந்து செத்தாளே.. அதை ஆய்வு செய்தீர்களா..??”
” வருந்துகிறேன் அய்யா.. ஆனால்…”
” என் தந்தை புற்றுநோயால் அவதிப்பட்டு தர்ம ஆஸ்பத்திரியில் தரையில் கிடந்து செத்தாரே.. அதைக் கண்டுபிடித்தீர்களா உங்கள் ஆய்வில்..?”
” மன்னிக்கவும் அய்யா.. இது….”
“நான் இன்னும் முடிக்கவில்லை.. என்னுடைய தம்பி கடனாளி ஆகி குடும்பத்துடன் விஷம் குடித்தானே .. அது தெரியுமா உங்க ளுக்கு..?”
” தெரியாது அய்யா..”
” அவ்வளவு அவஸ்தைப்பட்ட அவர்களுக்கே நான் ஒரு பைசா தரவில்லை .. உங்களுக்கு தருவேனா..? போய் வாருங்கள்..
– Sri Ram on facebook
Maha Kanjanin Kadhai. Super.