Wednesday, May 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று எம்.பி. ஆகும் நடிகை ரம்யா!

கன்னடத்தில் முன்னணி நடிகையாக உள்ளார் ரம்யா, தமிழில்  குத்து படத்தின் மூலம் அறிமுகமானார். பின் கிரி, பொல் லாதவன், தூண்டில், சிங்கம்புலி உள்ளி ட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.  இவர்,  கர்நாடக காங்கிர ஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொ ண்டார்.  மாநில இளைஞர் காங்கிரசில் பொறுப்பு வகித்து வரும் இவர் சில மாத ங்களுக்கு முன்பு நடைபெற்ற‍ கர்நாடக சட்ட மன்ற தேர்தலில் ரம்யா வீதி வீதியாக சென்று தேர்தல் பிரசாரம் செய்தார். முன்னாள் மந்திரிகள் சிவகுமார், ரோஷ ன்பேக், ஹாரீஸ், காதர், தினேஷ், குண்டு ராவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் தொகுதிகளில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டார். இவர்கள் அனைவருமே வெற்றிக்கனி பறித்தனர். இதனால் நடிகை ரம்யா வின் மவுசு கூடிவிட்ட‍து. இதன் காரணமாக இவ ருக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. யாகும் ஆசை வந்த‍தால், கர்நாடக மாநில த்தில் நடைபெற்ற எம்பி இடைத்தேர்தலில், போட் டியிட்டார். தொகுதி முழுவதும், தான் வெற்றி பெற‌ சூறாவளி பிரச்சாரம் மேற் கொண்டார். தற் போது தேர்தல் முடிந்து முடிவும் வெளிவந்துள் ள‍து. இதில் ந‌டிகை ரம்யா 47 ஆயிரம் ஓட்டுகள் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இன்னும் சில தினங்களில் ரம்யா எம் பியாக பதவி ஏற்க உள்ளார்.  மேலும் தொடர்ந்து சினிமாவிலும் நடிக்க‍ப்போவதாகவும் அறிவித் துள்ளார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: