Saturday, February 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: “அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையா?”

முகம் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணி ல் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகு குறிப்புகள் அனைத்தும் இங்கே!

மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பி ட்டு வரலாம்.

தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய் த்து சிறிதுநேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப் படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளி களுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம் பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர் த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொட ர்ந்து சாப்பிட்டு வரலாம்

உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யு ங்கள். இது கண்களின்கீழ் உள்ள கருவளை யத்தையும் நீக்க வல்லது.

மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.

முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத் தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக் காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரை த்து தேய்த்து வந்தால் வழவழப்பு அதிகரிக்கும்.

முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவி வரலாம்.

படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய் விட்டு அரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.

முகப்பரு இருக்கிறதா? கவலை விடுங்கள். சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர சில நாட்களில் முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

முகப்பரு நீங்க‌

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சை ச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடை யும்.

உதடு வெடிப்பு நீங்க: பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந் து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.

வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குரு மறைய சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் போதும்.

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையி ன் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.

முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், தழும் புகள் மற்றும் முகப்பருக்கள் நீங்க அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காய விட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும்.

முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.

சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ சூட்டினால் முகத்தில் வரும் சிறு சிறு கட்டிகள் வரவே வராது.

பற்களில் மஞ்சள் நிறமா? கரிசலாங் கண் ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்க ள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

ப‌ளபளக்கும் பற்களுக்கு. ..

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவ தில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால் மஞ் சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாக பளீரிடும்.

தீப்புண்ணால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் குறை ய பெரு நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து தினமும் சாப்பிட்டு வாருங்கள். தழும்புகள் மறைந்து அழகு கூடும். இரத்த்த்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தும் ஆற்றல் கொண்டது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

%d bloggers like this: