Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு (இயற்கை முறையில்) – உச்சி முதல் உள்ள‍ங்கால் வரை

நகம் பளபளக்க

பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவ தோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.

முகத்தைப் பராமரிக்க

ன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள்.

பயற்றம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச் சாற் றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.

கழுத்தை பராமரிக்க

நிறையப் பெண்கள் செய்யும் தவறே இதுதான்.. அழகாக முகத்தை பரிமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட் டார்கள். இதனால் கழுத்து கருத் துப்போய் முகம் மட்டும் பொலி வாக காட்சி தரும்.

சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறுது வெங்காயச்சாறு, ஆலிவ் எண் ணெய் இரண்டு சொட்டு, இவற்று டன் சிறிதளவு பயத்த மாவு கலந் து கழுத்தை ச்சுற்றி பூசிவிடுங்க ள். ஒரு பத்து நிமிடம் கழித்து கழு த்திலிருந்து தாடை நோக்கி இலே சாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவி ல் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.

சருமத்தைப் பராமரிக்க

சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, பதிலா க தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.

ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையி ல் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற் கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப் பாக காட்யளிக்கும்

இளநீரும் ஒரு மிகச்சிறந்த க்ளென்சிங் பொருள். எனவே நீங்கள் தேங் காய் உடைக்கும்போது வெளியேறும் நீரை வீணாக்காமல் அவற்றை முகத்தில் தடவிக்கொள்ளலாம்.

எண்ணெய் பசை உள்ள சருமத்தை உடைய வர்கள் எலுமிச்சை சாற்றில் சில துளிகள் பால் சேர்த்து கலந்து, கலவையில் பஞ்சி னை நனைத்து சருமத்தை துடைக்காலம்.

வறண்ட சருமத்தை உடையவர்கள் பாலுட ன் தேன் கலந்து பயன்படுத்தலாம்.

முகப்பரு போக்க

முகப்பருவை நீக்க ஜாதிக்காயை நீரில் ஊறவைத்து அரைத்துக் கொ ள்ளுங்கள்.

அதனுடன் சந்தனத் தூளைக் கலந்து முகப் பரு, முகப்பரு தழும்புகளின் மீது தடவி வர முகப்பருக்கள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

இரண்டு ஸ்பூன் புதினா சாற்றுடன், ஒரு ஸ்பூ ன் பயிற்ற மாவைக்கலந்து முகப்பரு தழும்புகளின்மீது பூசிவர முகப் பரு தழும்புகள் நீங்கும்.

முகம் பொலிவு பெற

பாதாம் பருப்பை ஊறவைத்து பாலுடன் சேர்த்து நன்றாக அரைத் தெடுங்கள். பேஸ்ட்போல ஆக்கிக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் பூசுங்க ள்.30 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவுங்கள்

முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தி ல் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவாக இருக் கும்.

முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமிச் சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவ தற்கு பதிலாக, இந்த பழங்களை கொண்டு மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலி வுறும்

கடலை மாவை காலையில் குளிக்கப் போகும் முன் இதை ஒரு கைப் பிடி எடுத்து நீரில் குழநைத்து முகத்தி ல் தடவுங்கள். அரைமணி நேரம் ஊறிய பிறகு குளித் துவிடுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைப் பின்பற்றினாலே உங்கள் முகம் பளபள க்க ஆரம்பித்து விடும்.

வெள்ளிக்காய்துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத் து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரை த்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பள பளப்பை காண முடியும்..

வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத் தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவ ளையங்களும் நீங்கிவிடும்.

முகத்தை தினமும் நான்கு முதல் ஐந்து முறை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் பொலி வாக இருக்கும்.

முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்க மாம்பழம், பப்பாளி, எலுமி ச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற வை மிகவும் சிறந்த பழங்கள். கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற் கு பதிலாக, இந்த பழங்களை கொண் டு மாஸ்க் போட்டு வந்தால் முகம் பொலிவுறும்.

கூந்தல் உதிர்வதை தடுக்க

எலுமிச்சையின் சாற்றினை தயிருடன் சேர்த்து கலந் து, தலைக்கு மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் சுத்த மாக பொடுகின்றி இருக்கும். மேலும் கூந்தல் உதிர்த லும் தடைபடும்.

நன்றி – தமிழ் குறிஞ்சி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: