தமிழ்த்திரை ரசிகர்களுக்கு ஓர் இனிப்பான செய்தி! தமிழில் மீண்டும் நடிகை அஞ்சலி!, அதுவும் பேயாக (கங்காவாக) வலம் வரவிருக்கிறார்.
ஆம்! சில மாதங்களுக்குமுன் நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தென்னிந்திய திரையுலகையே பரபரப்பை ஏற்படுத்தி, தலைமறைவாக இருந்தார். பின்பு மனம் மாறிய நடிகை அஞ்சலி, தனது சித்தியுடன் ஏற்பட்ட சமாதானத்தை அடுத்து ஐதராபாத்தில் முகாமிட்
டுள்ளார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட் டேன் என்றும் இனி சென்னைக்கே வரவே மாட்டேன் என்றும் கூறி வந்தார். ஆனால் ‘சி ங்கம்–2’ திரைப்படத்தில் டைரக்டர் ஹரியின் வற்புறுத்தல் காரணமாக ஒரு குத்து பாடலு க்கு குலுக்கல் ஆட்டம் ஆடினார். அதனை தொ டர்ந்து
தற்போது லாரன் சின் ‘முனி–3’ திரைப் படத்திலும் நடிக்க ஒப்பு தல் அளித்துள்ளார். இத்திரைப்படம்மூலம் சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் படத்தில் அஞ்சலி நடிக்கிறார். ஏற்கனவே ‘முனி’, ‘காஞ்ச னா’ படங்கள் ஹிட்டானதால் முனியின் 3–ம் பாக மாக ‘கங்கா’ என்ற பெயரில் இந்த படத்தை தமிழ், தெலுங்கில் ஆகிய இருமொழிக ளிலும் லாரன்ஸ் எடுக்கிறார். பேய் படமாக தயாராகிறது. இதில் டா ப்சி, கோவை சரளா, தேவதர்ஷினி போன்றோரு ம் நடிக்கின்றனர். தமிழில் விஷாலுடன் அஞ்சலி நடித்த ‘மதகஜராஜா’ படமும் செப்டம்பர் 6–ல் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.