Saturday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எச்சரிக்கை: பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க!: – ஒரு அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

அடிக்கடி பெப்ஸி, கோக், மேகி, கேஎப்சி சிக்கன் சாப்பிடாதீங்க: ஒரு அதிர்ச்சி மற்றும் எச்சரிக்கை ரிப்போர்ட் ! குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடு ம் மேகி நூடுல்ஸ், கேஎப்சி சிக்கன், பெப் ஸி குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் கல ந்து உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட் டுள்ளது. இந்த நிறுவனங்களின் தயாரிப் புக்களையும், இன்னும் சில பிரபலமான நிறுவனங்களின் உணவுப் பொருட்க ளையும் புது டெல்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மை யம் ஆய்வக சோதனைக்கு தேர்ந்தெடுத்து சோதனை செய்ததில் இந்த பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அவசர உணவுகள்

இரண்டு நிமிடத்தில் தயாரித்து விட லாம் என்று விளம்பரப்படுத்தப்படுகி றது. மேகி, டாப் ராமன் நூடுல்ஸ். இதன் சுவை குழந்தைகளை அதி கம் கவர்கிறது என்பது உண்மைதான். புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த இந்த நூடுல்ஸ்சினை ரசித்து சாப்பிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்த நூடுல்ஸ் உணவுப் பொருட்களில் உட லுக்கு தீங்கு விளைவிக்கும் டிரான்ஸ் கொழுப்பு வகையும், உப்பு, சர்க் கரையும் அதிகம் கலந்துள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ப்ரைடு சிக்கன்

மெக் டொனால்ட்ஸ் ஃபுட்ஸ், கே.எப்.சி பிரைட் சிக்கன் ஆகிய நிறுவனங் கள் தங்களின் விளம்பரத்தில் கொழுப்பற்றது, எந்தவித கலப்படமும் இன்றி இயற்கையானது மற்றும் 100 சதவீதம் சத்தானது என்று பல்வே று பொய்களைக்கூறி விற்பனை செய்கின்றன ர்.

இந்த நிறுவனங்களின் தயாரிப்புக ளை சோத னை செய்த போது அதில் அளவுக்கு அதிகமாக டிரான்ஸ் என்ற கொழுப்பு வகை, உப்பு மற்றும் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதா க தெரிந்திருக்கிறது.

இந்த உணவுப் பொருட்களை குழந்தைகளும் இளம் வயதினரும் அதிக ம் விரும்பி சாப்பிடுவதால் அதிகம் பேர் ஒபிசிடி, நீரிழிவு போன்ற வியா திகளுக்கு ஆளாகின்றனர். என வே இதுபோன்ற கலப்பட உணவு பண்டங்களை தவிர்க்க முயல வேண்டும் என்று ஆரோக்கிய வாழ்விற்கு அறிவுரை கூறியிரு க்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த உணவுப் பொருட்களில் கலக்கப்படும் டிரான்ஸ் கொழுப்பு இதயத் தில் உள்ள வால்வுகளின் படிந்து பாதையை குறுகலாக்குகி றது. இதனால், விரைவிலேயே அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவ ற்கான வாய் ப்பை மிக சிறிய வயதிலேயே உருவாக்குகிறது என்றும் எச்சரிக்கின்றனர் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வகத் தினர்.

குளிர்பானங்கள்

பெப்சி, கோகோ கோலா போன்ற குளிர்பானங்களில் பூச்சி மருந்து அதிக ம் கலக்கப்படுவதாக 2003 ம் ஆண்டிலேயே இந்த ஆய்வு மையம் எச்சரித்தது. தற் போது மெக்டொனால்டு, கே எப்சி உணவக ங்களில் அவர் களின் தயாரிப்பு உணவுக ளோடு இலவசமாக இதுபோன்ற குளிர்பா னங்கள் வழங்கப் படுகின்றன.

நஞ்சை விலை கொடுத்து வாங்கி இலவச இணைப்பாக உடலுக்கு தீங் கு விளைவிக் கும் குளிர்பானங்களை பருகுவதை இளை ய தலைமுறையினர் தவிர்க்க வேண்டும் என்பதே ஆய்வாளர்களின் அறிவுரையா கும்.

முகநூலிலிருந்து. . .

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: