Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“கச்சத்தீவை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை” என்பதா! – இலங்கை மந்திரிக்கு வைகோ கடும்கண்டனம்!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

இந்தியாவில் ஒரு அரசு இருக்கிற தா? துணைக் கண்டத்தின் அனைத் து மக்களுக்குமான அரசு இருக்கிற தா? குறிப்பாக, தமிழ்நாட்டு மீனவர் கள், இந்தியக் குடிமக்கள் என்ற எண்ணமாவது, அரசுக்கு உள்ளதா? என் பது தான் எழுகின்ற கேள்விகள் ஆகும். ஆதவன் கீழ்த்திசையில் தின மும் உதிப்பதுபோலத்தான், தமிழக மீனவ ர்களை இலங்கைக் கடற் படையினர் தாக் குவதும், சுடுவதும், கொல்வதும், சிறை பிடிப்பதும், சித்திரவதை செய்வதும், இல ங்கைச் சிறைகளில் அடைப்பதும், நாள் தவறா மல் நடக்கிறது.

இலங்கை அரசோடு இந்திய அரசு, ஒட்டி உறவாடிக் கும்மாளம் போடுவ தால்தான், இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தாக்குகின்ற ஒரு சமயத் திலாவது இந்தியக் கடற்படை, அதைத் தடுக்க முற்பட்டதே கிடையாது. இது இந்தியக் கடற்படையா? சிங்களவனுக்குக் கைக்கூலி வேலை செய்யும் கங்காணிப் படையா?

25–ந்தேதி, பாம்பனுக்கு அருகில், நமது கடல் எல்லைக்கு உள்ளேயே மீன் பிடித்துக் கொண்டு இருந்த, 35 மீனவர்களை, 26–ந்தேதி காலையில் சிங்களக்கடற்படை கைதுசெய்து, இலங்கையில் நீர்க்கொழும்பு சிறை யில் அடைத்து உள்ளனர். நேற்று ( ஆகஸ்ட் 27) புத்தளம் நீதிமன்றத்தி ல் அவர்களைக் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர். அப்போது, ‘இந்திய அரசின் சார்பில், தூதரகத்தின் இருந்து யாராவது வந்து இருக்கிறார்க ளா?’ என்று நீதிபதி கேட்டபோது, ‘எவரும் வரவில்லை’ என்று, சிங்கள அரசு வழக்கறிஞர் கூறி உள்ளார். மீண்டும் சிறையில் அடைக்கப் பட்ட னர்.

இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், ஈழத்தமிழர்களுக்கு என்றுமே உதவியது இல்லை. சிங்கள அரசுக்கு எடுபிடி வேலை தான் செய்து வந்து உள்ளது. இந்திய நாட்டைச் சேர்ந்த குடி மக்களான, தமிழக மீனவர்க ளைப் பாதுகாக்க, எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பது புல னாகிறது.

இலங்கை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இந்தியப் பிரதமரைச் சந்தித்தபின் செய்தியாளர்கள் கேட்டபோது, கச்சத்தீவு முடிந்து போன பிரச்சினை; அதை மீண்டும் தருவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; அதே போல மீனவர்களை விடுவிக்க வும் முடியாது; சட்டப்படி இலங் கை நீதிமன்றம் நடவ டிக்கை மேற்கொள்ளும் என்று, இந்திய அரசின் கன்னத்தில் அறைந்தாற் போல், ஆணவத்தோடும், திமி ரோடும் எப்படிச் சொல்ல முடி ந்தது?

இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளி அல்லவா இந்திய அரசு? அதுதான், அந்த அமைச்சரை அப்படிப் பேச வைத்தது. எனவே, தமிழக மீனவர்களை உடனே விடு வித்து மீட்டுக் கொண்டு வர, இந்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை மேற்கொ ள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொ ள்கிறேன். இவ்வாறு வைகோ கூறி உள் ளார்.

செய்தி ராஜசேகரன்

Leave a Reply