Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சம்பிரதாய உறவாக மாறிவரும் தம்பதிகளின் தாம்பத்தியம்! – பகீர் தகவல்!

கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவி ல் நேசமும், மனம் லயிக்கும் நெருக்க மும் இல்லாமல் போய்க் கொண்டிருக் கிறது. இருவருக்குமே இருக்கும் மன நெருக்கடியும், பிரச்சினைகளும், சோர் வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது. கணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போ ல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சி னைகள் எல்லையி ல்லாமல் போய்விடும்.

நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்க ளுக்குசெக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறை ந்து %கொண்டே இருக்கிறது. இதனால் அவர்க ளது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளா குகிறது. மேற்கண்டவர்களில் 29% பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலா னவர்கள் வேளையிலே மிகவும் சோர்ந்து போ கிறார்கள். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவி ட்டால் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்து விடு கிறார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர் களுக்கு வந்து விடக்கூடாது என்பதற் காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள் வதால் அவர்களையே அவர்கள் ஏமா ற்றி க்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வு களையும் மழுங் கடிக்கிறார்கள் என்பது அவ ர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப் படி திருப்தியில்லாமல் உறவு வைத்து க்கொள்வதாலும், அதிக நாட்கள் இடை வெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனை வி இருவருக்குமே உறவில் எந்த சுக மும் இல்லாமல் போய் விடும். முடிவி ல் ஆசையே குறைந்துபோய் `திருப்தி தராத இந்த உறவு நமக்குள் தேவை யா?’-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கி விடுவா ர்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது”.

நேரமின்மை:

கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின் மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலை யை முடித்துக்கொண்டு வேக வேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழைய வே ண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய் யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடி வெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என் று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக் கொண்டிருக்கும். அதன் சந்தேகத் தை தீர்த்துவைக்கவேண்டும்.

இந்நிலையில் கணவர் வீடு திரும்பு வார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவ ன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவி ஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனை த்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக் கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்ற ன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோ ர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார் கள். கணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமி ல்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப் பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள்படு க்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கி விடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சட ங்கு போல் ஆகிவிடுகிறது. இதில் குறிப்பி டவேண்டிய இன்னொரு விஷயமும் இரு க்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல் பாடுகள் பிடிக்காமல் இரு ந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.

பலகீனநிலை:

வேலையில் ஏற்படும் மனநெருக்கடியு ம், பொருளாதார சிக்கலும் ஆண்க ளுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத் துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்களு க்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சி ல் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்க ளுக்கு செக்ஸ் பலகீனங்கள் இரு ந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல் லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக் கும் சிகிச்சைகள் உள்ளன.

திருமணத்திற்கு முந்தைய உறவுகள்:

திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவி ல் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடிக்கு உள் ளாகுவதும் திருமணத்திற்குப்பிறகு செக்ஸ் மீது ஒரு வித வெறுப்பை யும், பலகீனத்தையும் உருவாக்குகிற து. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமணத்திற்கு முன்பு உறவு வைத்துக் கொள்ளும் போது அந் த உறவினை ஹோட்டல் அறையி லோ, தெரிந்த வீட்டிலோ வைத்துக் கொள்கி றார்கள். அப்போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந்த வர்கள் யாரா வது பார்த்துவிடுவார்களோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரிந்து விடுமோ என்ற கவலை போன்றவைகளுக்கு ஆட்படுகிறார்க ள். அந்த பயத்தால் அவர்களால் முழுமை யான உறவில் ஈடுபட முடியாது. அது அவர்களுக்கு ஒருவித தோ ல்வி மனப்பான்மையை தந்து விடும். அதையே நினைத்து மன நெருக்கடிக்கு உள்ளாகி திருமண த்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாம ல் தவித்துப் போகிறார்கள்.

உடற்கூறு அறிவின்மை:

ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வ ளவோ படித்தவர்களாகவும், பொது அறிவி ல் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற் கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்க ளைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்தி ருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர் களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இரு ப்பதாக கூறப்பட்டு வருகிறது.

பெண்களில் பலர் இப்போது வேலைக் குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும் பாலும் புடவையைத்தவிர இதர ஆடை களையே அணிகிறார்கள். அப் போது உள்ளாடை அணிகிறார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன்என்றால் கோடை காலத்தில் நன்றாக பெண்களு க்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக் காவிட்டால், உறவின் போது கணவருக் கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணி நேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.

ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப் போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள் ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப் பகுதி யின் தட்பவெப்பநிலை உடல் தட்ப வெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உட லோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெ ப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அத னால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போ ட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற் கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தி யான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கண வனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டி யது காலத்தின் கட்டாயம்

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: