Wednesday, November 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண் குழந்தைகளை வெறுப்பவர்களே! இது உங்களுக்கான வீடியோ

பெண் குழந்தை என்றதும் கருவிலேயே அழிப்ப‍வர்களே! பிறந்தது பெண் என்றதும், அதை கள்ளிப்பால் ஊற்றி கொல்பவர்களே! பிறந்து வளரும் பெண்ணை வெறுப்பவர்களே! தயவுசெய்து கீழுள்ள வீடியோவினை பாருங்கள். இது உங்களுக்கான காட்சி இது! இந்த வீடியோவினை பார்த்த‍பிறகாவது உங்களுக்கு புத்தி வருமா?

தனது கணவன் கைகால் பக்க‍வாத நோயால் பாதிக்க‍ப்பட்டு மரணப்படுக்கையில் படுத்து மாண்டுபோனாலும், விடா முயற்சியுடன் தனது 4 ஆண் பிள்ளைகளையும், 3 பெண்பிள்ளைகளையும் அவரது சக்திக்கு உட்பட்டு ஓரளவு படிக்க‍ வைத்து, திருமணம் செய்து வைத்துள்ளார். ஆனால் இன்றோ அவரது 4 ஆண் பிள்ளைகளும் இவரை, கவனிக்க‍வோ அல்ல‍து அன்பாக பேசவோ இல்லை. மேலும் அந்த நான்கு பிள்ளைகளும் தங்களது மனைவிகளுடன் சேர்ந்து இவரை வீட்டை விட்டே விரட்டியும், தமிழக அரசால் வழங்கப்படும் முதி யோர்களுக்கான ஓய்வூதிய த் தொகையை பிள்ளைகளே தடுத்தி நிறுத்தியுள்ள‍னர்.

ஆனால், இந்த தாயின் 3 பெண் பிள்ளைகளும் இவரை அன்போடு அரவ ணைத்து பராமரித்து வருகின்றனர். பாருங்கள் பெண்ப் பிள்ளைகளை வெறுப்பவர்களாக நீங்கள் இருந்தால் தயவுசெய்து திருந்துங்கள்

Leave a Reply