Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தயாரிப்பாளரின் பாராட்டு மழையில் நனையும் நடிகை அனன்யா!

பலவருடங்களுக்குமுன் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்த‍ திரைப்படம்தான் ‘இரவும் பகலும்.’, இதேபெயரில் மகேஷ், அனன்யா, ஜெகன், ஏ.வெங்கடேஷ் மற்றும் பலர் நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. இத்திரைப் படத்தை பாலா ஸ்ரீராம் இயக்குகிறார். தீனா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்கைடாட் பிலிம்ஸ் சார்பில் பால சுப்பி ரமணியம் பெரியசாமி தயாரிக்கிறார். பகலில் கல்லூரி மாணவராகவும், இரவில்திருடனாகவும் இருக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் காதலும், எதிர்பாராத சம்பவங்களை மையமாக வைத்து படத்தை உருவாக்கி வருகின்றனர்.

இத்திரைப்படம் குறித்து இயக்குனர் பாலா ஸ்ரீராம் கூறும் போது, ‘நடுத்தர வர்க்கத்து குடும்ப பாசம் மற்றும் நகைச் சுவையுடன் புதுமையான காதல் படமாக இது தயாராகிறது. கதை சொல்லும் பாணியில் புதிய முயற்சியை கையாண்டி ருக்கிறோம். நடிகை அனன்யா கதை கேட்டதும் மிகவும் பிடித்துபோய் ஒரே ஒரு ரூபாய் மட்டும் முன்பணம் பெற்று க்கொண்டு நடிக்க வந்தார். இதனால் மனம் உருகிப்போ ன தயாரிப்பாளர்களும் பட யூனிட்டும், அனன்யா மனது யாருக்கு வரும், அனன்யா ன்னா அனன்யாதான்பா என்று அனன்யாவை வானளவு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

 

Leave a Reply

%d bloggers like this: