Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“ர‌கசியத் திருமணம்” முடித்த‍ கையோடு அமெரிக்காவிற்கு தப்பியோடிய நடிகை அஞ்சலி!

அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக் காவில் செட்டிலாகி விட்டார்’ – இதுதான் இன்றைய தேதியில் சென்னை, ஹைதராபாத் சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவ காரம். ‘மதகஜராஜா’ பட புரமோஷனுக்காக விஷால் ஒருபுறம் தேட, இயக்குநர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கின் சம்மனை சேர்ப்பிக்க நீதிமன்றம் மறு புறம் தேட, எங்கு தான் இருக்கிறார் அஞ்சலி? விசாரித்தால், தமிழக அரசியல் அதிரடிப் புள்ளியின் மருமகனை இரண் டாந்தாரமாக திருமணம் முடித்து அமெரிக்காவி ல் செட்டிலாகிவிட்டதாகக் கிசுகிசுக்கிறார்கள். இது தொடர்பாக ஏகப்பட்ட வதந்திகள். பதில் சொல்வதற்கு அஞ்சலி யும் ஊரில் இல்லை. அவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

சினிமா-அரசியல் அறிந்தவர்கள், ஆந்திர நண்பர்கள் எனப் பலரிடமும் விசாரித்ததில் கிடைத்த செய்தி இது… ”அவர் இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப் பட்டவர் தான் அவரின் மருமகன். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. காதலில் உருகியிருக்கிறார்கள். இந்த விஷயம் அரசல்புரசலாக அரசிய ல் புள்ளிக்கும் அவரின் மகனுக்கும் தெரியவந்தது. ‘அரசியல்ல இருக் கோம். இதெல்லாம் வெளிய தெரிஞ்சுதுன்னா, நம்ம குடும்பத்துக்கே அசிங்கம்’ என மரு மகனைத் தடுத்தார்கள். மாமனாருக்குப் பயந்து அஞ்சலியுடனான காதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் அந்த மருமகன்.

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்குப் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் மாயமானார் அஞ்சலி. ஐந்து நாட்கள் கழித்து ‘பெங்க ளூருவில் இருந்தேன்’ என்று திரும்பி வந்தார். ஆனால் யாருடன் இருந் தேன் என்ப தைப்பற்றி அவர் மூச்சுவிடவில்லை. அரசிய ல் மருமகனுடன்தான் அவர் தங்கியிருந்திரு க்கிறார். இவர்கள் நெருக்கமாக இருந்தா லும் கூட, காதல், கல்யாணம் அளவுக்கு இறஙகுவா ர்கள் என அரசியல் குடும்பத்தார் எதிர்பார்க்க வில்லை. ஒருகட்டத்தில் இருவரும் அடுத்தடு த்து சந்திக்கச் சந்திக்க கடும்கோபம் கொண்டு இருவரையும் எச்சரித்து ள்ளார் அரசியல் புள்ளி. ஆனால் மருமகன்-அஞ்சலி ஜோடி மசியவில் லை. மிரட்டலுக் கும் கலங்கவில்லை. மகள், மகன் என அரசியல் புள்ளி யின் குடும்பமே கெஞ்சி கதறியிருக்கிறது. ஆனால் இருவரும் காதலில் விடாப்பிடியாக நிற்க, அரசியல் புள்ளி க்கு வேறு வழி தெரியவில்லை. நண்பர் ஒருவ ரின் உதவியுடன் மகளும் மருமகனும் குடும் பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட னர். இப்போது இந்தப் புதுப்புயல்” என்கிறார் மருமகன் குடும்பத்தை நன்கறிந்த அரசியல் புள்ளி.

சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். ”சித்தி பாரதிதேவியின் கெடுபிடி யான கட்டுப்பாட்டில் இருந்தால், இனி எங்கும் நகர முடியாது என்பது அஞ்சலிக்கே நன்றாகத் தெரியும். அதனால் கட த்தல் நாடகமாடி, சித்தி யைவிட்டுப் பிரிந்திருக் கிறார். பிறகு ஆந்திராவில் சொந்த வீட்டில் இருந்தவர், மீண்டும் மரும கனுடன் நெருக்கமாகியிருக்கிறார். அவரின் ஆலோசனையின்படியே அஞ்சலி மேற்கொண்டு எந்தப் படங்களிலும் கமிட் ஆகவில்லை. இந்த நிலையில்தான் இருவரும் அமெரிக்கா சென் றுவிட்டதாகக் கூறுகிறார்கள். அஞ்சலிக்கு உடல்நலக் குறைவு உண்டு. அதற்காக சென்னை அண் ணா நகரில் ஒரு பிரபல மருத்துவரிடம் தொ டர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடை யில் அவர் காணாமல் போன சமயத்தில் பெங்களூருவில் இருந்து 18 முறை அந்த டாக்டரிடம் இருந்து பேசி, தான் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்த மருந்துகள்கூட மரு மகனின் ஆட்கள் உதவியு டன் சென்னையில் இருந்தே வாங்கி அனுப்ப ப்பட்டுள்ளன. இந்தத் தக வல் ஆந்திர போலீஸ் விசாரணையின்போது தெரியவந்தது” என்கிறா ர்கள் பூடகமாக.

‘கோல்மால்’ தெலுங்கு படத்தை தயாரித்த கிஷோர், ”பொதுவா தெலுங் கு தயாரிப்பாளர் கள் தன் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைக ளுக்கு பிரச்னை என்றால், அதை தன் பிரச் னையாக பார்ப்பார்கள். அப்படி அஞ்சலி எங்கள் படத்தில் நடித்தபோது அவருக்குப் பிரச்னை வந்தது. அதை தற்காலிகமாக சமாளித்து எங்க ள் படத்தில் நடிக்க வைத்தோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதற்கடுத்து அவர் எங்கள் தொடர்பிலே யே இல்லை” என்றார்.

‘மதகஜராஜா’ படத்தை தெலுங்கில் டப்பிங் செ ய்து ‘நடராஜு தானே ராஜு’ அதாவது என்.டி.ஆர். என்ற பெயரில் வெளி யிடுகிறார் விஷால். அவரும் அஞ்சலியைத் தேடி வருவதாக தகவல் கிடைக்க, அவரிடம் பேசினோம். ”எங்க இருக்காங்கன்னே தெரிய லைங்க. அவங்களோட குரல் ஆந்திர ரசிகர்களுக்கு நல்ல பரிட் சயம். அதனால என்.டி.ஆர் படத் துக்கு அவங்க டப்பிங் பேசினாத் தான் சரியா இருக்கும்னு தேடி னோம். இதுவரைக்கும் அவங்க சிக்கவேஇல்லை” என்றார் வருத்தமா ன குரலில்.

அஞ்சலிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள களஞ்சியம், ” சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தொட ர்ந்த வழக்கில் ஆஜராகச் சொல்லி அவருக்கு அனுப்பிய மூன்று சம்மன்களுமே திரும்ப வந்து விட்டன. விலாசமற்றவர் என முடிவு செய்து தமிழ், தெலுங்கு நாளிதழ் களில் நிதி மன்றத்தில் ஆஜராகச்சொல்லி விளம்பரம் தரச்சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்தவாரம் அந்த விளம்பரம் தர உள்ளோ ம்” என்றார் கோபமான குரலில்.

எது எப்படியோ, சினிமா புகழ், மீடியா வெளி ச்சம், படப்பிடிப்பு பரபரப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அஞ்ச லி அமைத்துக்கொண்டார் என்றே தோன்கிறது

செய்தி – தமிழ்ஸ்டார் ஷாட்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: