Wednesday, June 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னைப் பற்றி அறிய எனது மின்னஞ்சலை தொடர்புகொள்ளுங்கள்!” – நடிகை அஞ்சலி!

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் கோடம்பாக்கத்தை காலி செய்து கொண்டு ஐதராபாத்தில் குடியேறிய நடிகை அஞ்சலி குறித்து தற்போது கோலிவுட்டில் பரபரப் பாக பேசப்பட்டு வருகிறது.

‘மதகஜராஜா’ படத்திற்கு டப்பிங் பேச மறுத்தாக வும்,அரசியல் பிரபல புள்ளியின் மருமகனை திருமணம் செய்துவிட்டு அமெரிக்காவிற்குச் சென்று விட்டதாகவும் என்பதுதான் அது. இவை எதற்கும் பதில் அளிக் காத அஞ்சலி தற்போது அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அறி க்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘‘கற்றது தமிழ் படம் துவங்கி இன்று வரை பல்வேறு காலகட்டங்களில் என்னை ஆதரி த்து ஊக்கமளித்த அனைத்து ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி … சமீபத்தில் நான் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் நடித்த ‘மதகஜராஜா’ படத் திற்கு டப்பிங் பேச மறுப்பதாகவும் படம் சம்பந்தமான விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பதாகவும் செய்திகளும், அரசிய ல் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் இணைத்தும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அது முற்றிலும் தவறான தகவ ல் என்பதை தெளிவுபடுத்த விரும்புகி றேன்.

இனி வரும் காலங்களில் என்னைப் பற்றிய செய்திகள் உண்மையா? பொய்யா? என்பதையும் அந்த செய்திக‌ ளுக்கு விளக்கம் தேவைப்படும் எனில் என்னுடைய மின்னஞ்சல் newsfromanjali@gmail.com என்ற முகவரி க்கு தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கி றேன் நன்றி! வணக்கம்!’’ என்று ஐதராபாத்திலிருந்து தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் நடிகை அஞ்சலி.

thanks to tamilstar

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: