Tuesday, April 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா???

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன ” என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது அரசாங்கம் மேற்குலக பொருளாதாரங்களி ன் சரிவினால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்க வேண்டும் என ஊக்க நடவ டிக்கைகள் அறிவித்தது.

2008ஆம் ஆண்டின் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்ட மிக கடுமையான விளைவுகளை, சில முக்கிய நடவடிக்கைகளின் முலம் நாம் தவிர்த்தோம். ஆனால் நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்பு கண க்கு பற்றாக்குறை போன்ற விஷியங்களில் நம்மை பாதித்தன” என சிதம்பரம் கூறினார். நிதி பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதன் விளை வாக தற்போது நிதிப் பற்றாக்குறையை சீரமைக்கும் பாதையில் வேக மாக சென்று கொண்டி ருக்கிறோம் என்று அவர் கூறினார்.

“ஆகஸ்ட் 2012 மற்றும் மே 2013க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நாண யப் பரிமாற்ற விகிதம் குறிப்பிடத்த க்க அளவில் நிலையாக இருந்தது. ஆனால் மே 22 முதல் ரூபாயின் மதிப்பு சரியத் தொடங்கியது” என்று நிதி அமைச்சர் கூறினார். “வளரும் நாடுகளின் பொருளாதாரங்கள் அ னைத்தும் இந்த நாணய மாற்று விகித பிரச்சனையை தற்போது எதிர் கொண்டுள்ளன.” என்று கூறிய அவர்,

எதிர்காலத்தில் ரூபாய் மதிப்பு எவ்வா று இருக்கும் என்று கணிக்க மறு த்து, “நாம் பொறுமையாக இருக்க வேண் டும், மேலும் உறுதியாகவும், தெளிவா கவும் முடிவுகளை எடுக்க வேண்டும். நம்முடைய பொருளாதார அடிப்படை களை பலப்படுத்த வேண்டும்” என்று ம் கூறினார்.

“ரூபாய் அதன் உண்மையான மதிப்பை அடையும் என்று நான் உறுதி யாக இருக்கிறேன்” என்று அவர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார்.

இவரை உண்மையிலே நம்பலாமா பாஸ்???

நம்பித்தானே ஆகவேண்டும்! வேற வழி . . . ! ! ! ! ! ! ! ! ! ! ! ! ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?  ? ? ? ? ? ? ? ? ? ? ? ? 

news from tamilgoodreturns

One Comment

  • mani

    few days back TRAI announced that it is going to reduce the SPECTRUM price y 60%. why? since MNC not willing to accept the base price (another way 2,3,4 G scam) and TRAI is not willing to offer the same to BSNL ) to enable VODOFONE TATA AIRTEL AIRCEL AND OTHERS TO BENIFIT BUT NOT THE INDIAN PUBLIC

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: