Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வருமான வரி விலக்கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம்

நாம் சம்பாதிக்கும் பணத்திற்கு அரசாங்கத்துக்கு வரி கட்ட வேண்டு ம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வரி கட்டுபவர்களுக் கு தங்களின் வருமானத்தைப் பொறுத்து சில வரி விலக்குகளு ம் உள்ளன என்பதையும் நாம் அறி வோம். ஆனால் அந்த வரி விலக் கை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்கள் மிகவும் அவசியம். அதை சரிவர பாதுகாக்காமல் போனால் வரி விலக்கு நமக்கு கிடைக்காமல் போய்விடும்.

வருமான வரி கட்டுபவர்கள் தங்கள் முதலீடுகளின் முறையான ஆதாரங்களையும் செலவுக்கான விவரங்களையும் தாங்கள் வே லை செய்யும் நிறுவனத்திடம் ஒப்ப டைக்க வேண்டும். அதனை உங்கள் நிறுவனம் CBDT-யிடம் (நேர்முக வரி களின் மத்திய குழுமம்/ சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்சஸ்) சமர்பித்து விடுவார்கள்.

இந்த ஆதாரங்களை குறிப்பிட்ட நேர த்திற்குள் சமர்பிக்க தவறினால் நீங் கள் வருமான வரி விலக்குகளை அனுபவிக்க முடியாது.

நீங்கள் கொடுக்கும் ஆதாரங்களின் மீது உங்கள் நிறுவனத்திற்கு திருப்தி இல்லையென்றால் அதனை ஏற்றுக் கொள்ளாது. அப்படி ஏற்றுக் கொள் ளப்படா விட்டால் உங்களால் வரு மான வரி விலக்குகளை அனுபவி க்க முடியாது. ஏனென்றால் ஒவ் வொரு நிறுவனமும் தங்கள் பணியாளர்கள் சமர்பிக் கும் முதலீட்டு ஆதாரங்களை கட்டாயம் சரிப்பார்க்க வேண்டும் என்று சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட்டாக்சஸ் கட்டாயப்படுத்துகிறது.

உங்கள் முதலீட்டுக்கு தேவை யான அனைத்து ஆதாரங்களும் இல்லை யென்றால் உங்கள் நிறுவனம் அந்த முதலீட்டை வருமான வரி விலக்குக் கு எடுத்துக் கொள்ளாது. அப்படி ஏதும் நடந்தால் வரி விலக்கை பெற நீங்கள் உங்கள் வருமானவரி விவர அறிக்கையை வருமான வரித்துறையிடம் சமர்பிக்கும்போது உங் கள் முதலீட்டுக்கான அனைத்து ஆதரங்களையும் ஒப்படைக்க வே ண்டும். இருப்பினும் அந்த கடைசி நேரத்தில் சமர்ப்பித்தால் உங்கள் வேலை அவ்வளவு எளிதில் முடி யாது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்த பிறகு வரிவிதிக்கப்பட்ட வர் சீராக்குதலுக்கான(ரெக்டிபிகேஷன்) மனுவை வருமான வரித்துறை அதி காரிகளிடம் ஒப்படைக்க வேண்டு ம். இந்த மனு அளித்த அந்த மாதத் தின் கடைசியிலிருந்து 6 மாத காலத்திற்குள் ரெக்டிபி கேஷனுக் கான உத்தரவு பிறபிக்கப்படும். இந்த பிழை நீக்குதலை வருமான வரித்துறை அதிகாரிகளோ அல் லது வருமான வரித் துறையின் முறையீட்டு துறையின் ஆணை யரோ செய்வர்.

ஆதலால் சரியானா ஆதாரங்க ளை குறிப்பிட்ட நேரத்திற்குள் சமர்ப்பித்தல் எவ்வளவு முக்கிய ம் என்பதை அறிந்திருப்பீர்கள். அப்படி செய்தால் தான் வருமான வரி விலக்கு கிடைக்கும்.

சரியான ஆதாரங்களை முறையாக பராமரிக்க இன்னும் சிலவற் றை தெரிந்துக் கொள்ளுங்கள்.

கீழ்கூறிய சில ஆதாரங்கள் வருமான வரி சட்டம், பிரிவு 80 சி-இன் கீழ், வரி விலக்குக்கு தகுதி பெரும்:

ஆயுட்காப்பீட்டின் தவணைத்தொகை:

ஆதாரம் – தவணைத் தொகை ரசீது. இதில் காப்பீடு பெறுபவரின் பெயர், காப்பீடு செய்யப்பட தொகை மற்றும் பணம் செலுத்திய தேதி இடம் பெற வேண்டும்.

ப்ராவிடன்ட் பண்ட் (பி.எஃப்):

ஆதாரம் – ப்ராவிடன்ட் பண்ட்டுக்கு அளித்த தொகைக்கான ரசீது. இதில் கடந்த வருடம் ப்ராவிடன்ட் பண்ட் டுக்கு பங்களித்த மொத்த தொகை யையும் குறிப்படப்பட்டிருக்க வேண் டும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ் (நேஷ னல் சேவிங் சர்டிபிகேட்/ என். எஸ். சி):

ஆதாரம் – இந்த சான்றிதழே ஆதார மாக விளங்கும். முதலீட்டாளரின் விவரங்கள் இந்த சான்றிதழில் சரி யாக இருக்குமாறு பார்த்துக் கொள் ளுங்கள்.

பிக்சட் டெபாசிட் (எப்.டி.):

ஆதாரம் – ஐந்து வருட பிக்சட் டெபாசி ட்டின் சான்றிதழ். இதில் வைப் பீட்டாளரின் விவரங்கள் அடங்கி யிருக்க வேண்டும்.

வீட்டுக் கடனை திருப்பிச் செலுத்து தல்:

ஆதாரம்: உங்கள் வீட்டுக்கட னின் அசல் தொகையை திருப்பி கொடுக் கும் போது பெரும் ரசீது.

ஓய்வூதிய நிதி (பென்ஷன் பண்ட்):

ஆதாரம் – லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷ னின் பென்ஷன் திட்டத்தின் கீழோ அல்ல து மத்திய அரசாங்கத்தின் பென்ஷன் திட் டத்தின் கீழோ செலுத்திய தொகைக்கான ரசீது.

மேற்கூறிய ஆதாரங்களைத் தவிர, வரு மான வரிக்கு உட்பட்ட செலவுகளுக்கான முறையான ஆதாரங்க ளை பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பல குறிப்பீடுகளின் படி இந்த ஆதாரங்களை குறைந்தது எட்டு வருடங்களுக்காவது பாதுகா க்க வேண்டும். அதனால் வருமான வரிக்கு உட்பட்ட ஆவணங்களை மிகவும் பத்திரமா க பாதுகாக்க வேண்டும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: