Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“அஜித்துடன் நான் . . .!” – நடிகை பிந்து மாதவி

பெரியஎதிர்பார்ப்பு இருக்கு, இருந்தும் விஜய், அஜித் லெவலுக்கு யோசி க்கவில்லை…. மாஸ் ஹீரோக்களுடன் நடிப்பதுதானே ஹீரோயின்களி ன் சினிமா டிரெண்ட்…?

“நான் நடிக்க வந்ததே பெரிய கதை. “சினிமாவுக்கு போறேன்’னு சொன் னதுக்கே என் அப்பா, அம்மா ஷாக் ஆகிவிட்டார்கள். கெஞ்சிக் கூத்தாடி 2 வருடங்களு க்குப் பின்புதான் சம்மதம் வாங்கினேன். அப்படி கிடைத்த வாய்ப்பை, நான் தவறாகப் பயன்ப டுத்தி விடக்கூடாது என்பதில் கவனமா க இருக்கிறேன். “நல்ல சினிமாக்களில் நீ இருக்கணும்னுதான் அப்பா ஆசீர்வா தம் செய்தார். மாஸ் ஹீரோக்களின் வாய்ப்புகள் வராமல் இல்லை. இருந்தும், நல்ல கதையில் நடி க்க வேண்டும் என்பதற்காக வே நான் நிறைய வாய்ப்புகளைத் தவிர்த்துவிட் டேன்.

சினிமாவில் சின்சியராக இருக்க வேண் டும் என்பதை தவிர வேறேதும் எனக்கு ஆசை இல்லை. “வெப்பம்’, “கழுகு’, “சட்டம் ஒரு இருட்டறை’, “கேடி பில்லா கில்லாடி ரங்கா’ வரைக்கும் எல்லா படங்களுக்குமே இங்கே அடையாளம் இருக்கிறது. அந்தப் படங்களி ல் நான் இருந்திருக்கிறேன். யாருக்கும் தெரி யாத படங்களில் ஒன்றும் நான் நடிக்கவில் லையே?

அடுத்து “தேசிங்கு ராஜா’. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். பிடிக்கிற மாதிரியான படங்களில் இருப்பதுதான் எனக்கும் பிடிக்கும். பெரிய ஹீரோக்களோடு நடிக்க வாய்ப் பு வரும் போது பார்த்துக்கொள்ளலாம். எனக்கு என் வளர்ச்சி மட்டுமே முக்கியம் இல்லை. நடிப்பதில் உள்ள திருப்தியும் முக்கியம்.”

இவ்வளவு பிடிவாதமான பேச்சு பேச தைரியம் வேண்டும்… விஜய், அஜித், விக்ரம், சூர்யா இவங் க சில பேர்தான் சூப்பர் ஸ்டார் ரேஸிஸ் இருக்கா ங்க… இவர்களில் யார் கூட நடிக்க ஆசை…?

“அஜித்… எனக்கு ரொம்பவே அவரைப் பிடிக்கும். அவரின் உழைப்பு, எளிமை பற்றியெல்லாம் சினி மாவில் சிலாகித்து பேசாதவர்களே இல்லை. அதனால் அஜித்துக்கு நான் தீவிர ரசிகை. அஜித் படம் வந்தால், ஏதோ ஒரு தியேட்டரில் முத ல் ஷோவில் விசிலடித்து படம் பார்க்கும் கூட்டத் தில் நானும் இரு ப்பேன்.அந்தளவுக்கு அஜித் பிடிக் கும்.  அஜித்து டன் நான் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்கவே எனக்கு ஆசை. மற்றபடி “எல்லா ஹீ ரோக்களும் பிடிக்கும்; எல்லோருடனு நடிக்க ஆசை’ என்று ஜால வார்த்தைகள் பேச தெரியாது.

விஜய் சாரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். “சட் டம் ஒரு இருட்டறை’ ஷூட்டிங்கின் போது, ஸ்பா ட்டுக்கு வந்து நின்றார். அத்தனை சர்ப்ரைஸ் . அன்றைக்குத்தான் டூயட் ஷூட் நடந்தது. ஒவ் வொரு ஸ்டெப்பாக நான் டான்ஸ் ஆட, விஜய் சார் முன்னாடி நின்று பார்த்துக் கொண்டிரு ந்தார். அவரைப் பார்த்தபோ து, எனக்கு உதற ஆரம்பித்து விட்டது. “சார். நீங்க இருந்தா டான்ஸ் ஆட முடியலை’ன்னு சொன்னேன். “அதெ ல்லாம் சும்மா.. ஆடுங்க’ன்னு  சிரித்து க் கொண்டே சொன்னார். அதன்பின் என் டான்ûஸப் பார்த்து விட்டு சூப்பர் ன்னு பாராட்டினார். என் சினிமாவாழ் வில் மறக்கமுடியாத வார்த்தை அவை .”

“தேசிங்குராஜா’ பட ஸ்டில்கள் அவ்வளவு லவ்லியா இருக்கே…?

“ஆமாம், நிறைய பேர் அப்படித்தான் சொன்னாங்க… படத்திலும் விசே ஷம் இருக்கிறது. விமல், சூரி என பக் கா காமெடி பேக்கேஜ் படம். நான் தாம ரை என்ற பாத்திரத்தில் நடித்திருக்கி றேன். படத்தைப் பற்றி இன் னொரு ஸ்கூப் நியூஸ் சொல்லுகிறேன். நான் ரஜினி சாரின் தீவிர ரசி கையாக வருகி றேன். ரஜினி சார் படம் வந்தாலே, டிக் கெட் கவுண்டரில் ஏறி, குதித்து டிக்கெ ட் எடுக்க அதகளம் செய்யும் பெண்ணாக வருகிறேன். உண்மையில் அது மாதிரி பொண்ணுதான் நான். எப்போதும் ஒரு திமிர் இருக்கும். அதை அப்படியே சினிமாவுக்காக நடிக்கு ம் போது நன்றாக இருந்தது. நான் ரொம்ப ஜாலியாக நடித்த கேரக்டர்.”

உங்கள் ரோல் மாடல் யார்…?

“அனுஷ்கா பிடிக்கும். அவங்க ஸ்க்ரீனில் வந்து நின்றாலே ஒரு பரபர ப்பு வந்து விடும். சூப்பர் ஹீரோயின். உயரம், கலர், சிரிப்பு என எல்லா மே பிடிக்கும். ஹீரோக்கள் ஒவ்வொருத்தருக்கும் அனுஷ்கா கூட படம் நடிக்க ஆசை இருக்கிறது. அதுதான் அனுஷ்காவி ன் வெற்றியின் ரகசிய ம். எனக்கு இது ஆச்சரியமாக இருக்கிறது.”

உங்க சினிமா லட்சியம் என்ன…?

“எல்லாப் படங்களிலும் நடித்து விட் டு போக ஆசை இல்லை. ஆனால் பிந்துமாதவி நடித்தால் அந்தப் படம் கொஞ்சம் ஸ்பெஷலாக மாற வேண்டும். ஹீரோயின் தாண்டி எல்லோரையும் கவர்ந்திழுக்க வேண்டும். உதாரணத்துக்கு அனுஷ்கா.

“வெப்பம்’ படத்தில் கால் கேர்ள் பாத்திரத்தில் வந் தேன். முதல் படத்திலேயே எப்படி இந்ததைரி யம் என்றார்கள்… இதில் என்ன இருக்கு.. . நான் எல்லோரையும் போல், நாலு டூயட்டுக்காக நடிக்க வரவில்லை. எனக்கென ஒரு இடம் வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறேன்.

புராண படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. அது போல் நடனத்தை மையமாக வைத்து உருவாகு ம் படத்தில் முழுக்கவே நடனம் ஆடி நடிக்க வே ண்டும். இதுவெல்லாம்தான் என் லட்சியங்கள். பார்ப்போம் நடக்குதா என்று.”

பிந்து சாகர் எனப் பெயரை மாற்றப் போறீங்கன்னு சொன்னாங்களே…?

(தெற்றுப்பல் சிரிப்பு மறைகிறது). “”என் அண்ண ன் சாகர். அவன் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். ஒரு நாள் அம்மாவிடம் இருந்து போன். “அண்ணன் ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டான். சீக்கிரம் வா’ன்னு அழு துகொண்டே சொன்னார்கள். அலறிடித்துக் கொ ண்டு ஓடினேன்.

என் அண்ணன் இறந்து ஒருவருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அம்மா “சாகர்… சாகர்…’ன்னு சொல் லி உருகுறாங்க. அதனால்தான் சாகரை என் பெயரில் சேர்த்துக்கொள்ள முடிவுசெய்துவிட்டே ன். இது என் குடும்பத் துக்கான ஆறுதல்.

அவன் பெயரில் ஒரு டிரஸ்ட் உருவாக்கப் போகிறேன். ஏழை குழந்தை களின் கல்விக்காக நிறைய உதவிகளை அந்த டிரஸ்ட் மூலம் செய்ய வேண்டும். என் அண்ணன் ஐ.ஏ.எஸ். படிக்க நினைத் தான். அதனால் அந்த டிரஸ்ட் மூலம் நிறைய ஐ.ஏ.எஸ்.களை உருவாக்கப் போகிறேன்.”

ஹன்சிகா, காஜல் என ஹீரோயின்கள் எல்லோருக்கும் இப்போது லவ் ஜூரம்…? உங்களுக்கும் அப்படி எதாவது மேஜிக் நடந்ததா…?

“எல்லோரிடமும் ஈஸியாக பழகி விடுவேன். அவர்கள் எப் படிப்பட்ட கேரக்டர்களாக இரு ந்தாலும், ஃப்ரெண்ட் பிடித்து விடுவேன். அப்படிப்பார்க்க போ னால் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ்.

காதல் பற்றி எனக்கு நிறைய புரிதல் இருக்கிறது. அது தவ றான இடத்தில், தவறான ஆளி டம் வந்து விடக் கூடாதென தெளிவாக இருக்கிறேன்.

காதல் கல்யாணத்தில் இருக்கிற நம்பிக்கைகள் சில இடங்களில் நடக்கு ம் விஷயங்களைப் பார்க்கும்போது, உடைந்துபோகிறது. சிலரைப் பார்க் கும்போது, காதல் அற்புதம் எனத் தோன்றுகிறது. அது எப்படிப்பட்டது என்பதை அனுபவித்தால்தான்தெரியும். அந்தப் பக்குவம் என் வயதிலு ம், மனதிலும் வரும் போது, காதல் பற்றி நிறைய பேசலாம். அதுவரைக் கும் நான் சினிமாவைக் காதலிக்கிறேன். ஓ.கே.வா…?

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply