Friday, February 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம். 

இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து… பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை நாம் அறிவோம். ஆனால், மக்கள் எண்ணத்தில் ஆதி காலத்திலிருந்து இன்றுவரை எப்படி உயிர் உருவாகிறது? என்ற சுவார ஸ்யமான தேடல் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

அந்தக் காலத்தில், விஞ்ஞான வளர்ச்சி இல்லாததினால் ஒரு பெண்ணி ன் உடம்புக்குள் நிகழ்வதை வெ ளியிலிருந்து தெரிந்துகொள்ள இயலாத நிலை இருந்ததால், கரு எப்படி உருவாகிறது என்பது தெ ரியாமல் இருந்தது. விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பல்லாயிரம் ஆண்டுகளாக ஆணும் பெண்ணும் செக்ஸில் ஈடுபட்டு, ஆணின் விந்தணு பெண்ணின் கருமுட்டையை சந் தித்துக்கரு உருவாகிறது என்பது தெரியாம லே இருந்தது என்பதே உண்மை!

ஒரு புது உயிர்பெண்ணின் கருவறையில் உருவாக வே ண்டும் என்றால் & ஆணின் பிறப்புறுப்புகள் சரியாக இரு ப்பதுடன், அதன் செயல்பா டுகளும் நன்றாக இருக்க வேண்டும். அதிலிருந்து போ துமான விந்து வெளியேறி, பெண்ணின் பிறப்புறுப்பில் சேரவேண்டும். இதற்கு பெண்ணின் பிறப் புறுப்பும் சரியாக அமைந்து, அதன் செயல்பாடும் நன்கு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான், விந்திலி ருந்து வெளியேறும் உயிரணு, கரு வாக உருமாற வாய்ப்பு ஏற் படும்.

ஆணின் பிறப்புறுப்பு இரண்டு வித மாக அமைந்துள்ளது. கண்ணுக்குப் புலப்படுவது மாதிரியான அமைப்பு. கண்ணுக்குத்தெரியாமல் உட்புறமா க அமைந்திருக்கும் உறுப்புகள். ஆண்குறி, விதைப்பை ஆகியவைக் கண்ணுக்குத் தெரியும் உறுப்புகள். கண்ணுக்குத் தெரியாமல் உட்புற மாக அமைந்திருப்பவற்றில், விதைக ள் உட்பட பல உறுப்புகள் உள்ளன.

கருவை உருவாக்க ஆணின் விந்தில் உள் ள உயிரணுவால் (Cell / Stem Cell) மட்டுமே முடியும். இந்த உயிரணு உள்ள விந்து, பெண்ணின் பிறுப் புறுப்புக்குள் செல்லப் பயன்படுவதுதான் ஆண் குறி.

[சமீப காலம்வரை, செக்ஸில் ஈடுபட்டால் மட்டும்தான் கரு உருவாக முடியும் என்ற நிலைமை இருந்தது. அதனால்தான் ஆண் குறிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கிற து. ஆண் குறியைப் பெண் குறிக்குள் செலுத்துவதற்காகவே இயற்கை, ஒரு விஷயத்தை உண்டாக்கியிருக்கிறது. அதுதான் செக்ஸ் இன்பம். ஆனால், இன்று மருத்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறி விட்டது. ஆண்குறியைப் பயன்படுத்தாமல்… செக்ஸில் ஈடுபடாமல் அவனுடைய உயிர ணு உள்ள விந்தை மட் டும் பயன்படுத்திக் கரு உருவாக்க பல வழி முறைகள் வந்து விட்டன. பெண்ணின் கரு ப்பையிலிருந்து கரு முட்டை வெளிவரும் சமயத்தில், ஆணி ன் விந்தை எடுத்து அதற் குள் செலுத்தி விடு வது ஒரு வழி. இதற்கு இன்ட்ராயுடிரியன் இன்செமினேஷன் (inter uterine insemination) என்று பெயர். இன்னொரு வழிமுறை, சோதனைக் குழாய் குழந்தை. இதில் ஆணின் உயிரணு, பெண்ணின் கரு முட்டை இரண்டையும் தனி யாக வெளியில் எடுத்து, சோதனைக் குழாயில் வைத் துக்கருவை உரு வாக்கி விடுகிறார் கள். ]

பொதுவாக ஒரு ஆண், பருவ வய தை அடைந்த பின்னர் அவனின் ஆண்குறி 3 முதல் 4 அங்குலம் (வி றைப்பு தன்மையில்லாதபோது) நீள மாக இருப்பதுடன், ஒரு அங்குலம் சுற்றளவு கொண்டிருக்கும். சாதார ண நிலையில் 4 அல்லது 5 அங்குலம் இருக்கும் ஆண் குறி, விறைப்புத் தன்மை அடையும்போது 7 அங்குலம் வரை நீளும். சுற்ற வு ஒன்றரை அங்குலமாகப் பெருக்கும். எல்லோ ருக்கும் பொதுவாகக் கட்டாயமாக இப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. இதுவொரு சராசரி அளவு. விதவிதமான உயரம், அதற்கே ற்ப விதவி தமான எடைகளில் ஆண்க ள் இருப்பதை போல அவர்களின் ஆண் குறியும் சிறிதாகவும் பெரிதாக வும் அமைந்திருக்கும். அதைப்பற்றி கவ லைப்பட வேண்டியதில்லை. ஏனெ னில், சாதாரணநிலையில் ஆண்குறி எந்த அளவில் இருந்தாலும், உண ர்ச்சிவசப்பட்ட நிலையில் விறைக்கு ம்போது எல்லோருக்கும் கிட்டத் தட் ட ஒரேஅளவுக்கு வந்துவிடும். அதே போல, ஆண்குறி விறைத்த நிலை யில் பெண் குறியின் கடைசி வரை உள்ளே போனால்தான் கரு உருவா கும் என்று கருதவேண்டாம். ஆண் குறியின் முனை சிறிதளவு உள்ளே போனால்கூட போதும்.

[ஒரு பெண்ணைத்திருப்திப்படுத்த விறைப்பு நிலையில் ஆண் குறியின் நீளம் இரண்டு அங்குலம் இருந்தா லே போதுமானது. ஏனெனில், பெண் ணின் பிறப்புறுப்பின் வெளிப்புற முன்பக்கத்தில் இரண்டு அங்குல த்தில் மட்டும்தான் உணர்ச்சி நரம்புகள் அமைந்துள் ளன. எனவே ஆண் குறி விறைப்பு நிலையில் இரண்டு அங்குலம் இருந்தாலே போ துமானது. அதற்குமேல் அதிகமாக இருப் பதால் கூடுதல் இன்பமோ, பயனோ கிடைக்கப் போவ தில்லை. பொதுவாக இயற்கை எல்லா ஆண்க ளையுமே போதுமான அளவுள்ள ஆண்குறியுட ன் தான் படைத்திருக்கிறது. ஆனால், பத்து லட்ச த்தில் ஒருவருக்கு விதி வசமாக மிகமிக சிறிய அளவிலான ஆண் குறி, பிறவிக் குறைபாடாக அமைந்துவிடலாம். இதற்கு மைக் ரோபீனிஸ் என்று பெயர்]

அடுத்து, விதைப்பையைப் பற்றி பார்ப்போம். ஆண் குறிக்கு கீழே விதை ப்பை அமைந்துள்ளது. மெல்லிய சதை வடிவில் சாதாரண நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த விதைப்பை, உணர் ச்சி வசப்படுகிற போது, அதாவது விறைப் பு நிலையில், உடம்போடு ஒட்டிக்கொள்கி ற மாதிரி சிறிது சுருங்கி விடும். இதற்குள் இரண்டு விதைகள் உள்ளன. பொதுவாக நமது உடம்பின் வெப்ப நிலை 98.6 டிகிரி ஃபாரன்ஹீட்டாகும். விதைப்பைக்குள் இருக்கும் விதை நன்கு வேலை செய்ய வேண் டும் என்றால், உடம்பின் வெப்ப நிலையைவிட 3 முதல் 4 டிகிரி ஃபாரன் ஹீட் குறைவாக இருக்க வேண்டும். எனவேதான், உட ம்புக்கு வெளியே பை போன்ற உறுப்பை படைத்து, அதற்குள் உடம்பின் பொது வெப்ப அள வைவிட குறைவான வெப்ப நிலையைப் படைத்து, அதில் விதைகளை வைத்திருக்கி ற து இயற்கை.

[விதைப்பைக்குப் போதுமான காற்று கிடைக்காமல் போகும் என்பதாலும், விதைப்பையின் வெப்ப நிலை அதிகரிக்கும் என்பதாலும்தான், வெப்ப மண்டலப் பிரதேசங்களி ல் வசிக்கும் ஆண்கள் இறுக்கமான ஆடைகளைக் அணியக் கூடாது என் று வலியுறுத்தப்படுகிறது. அப்படி யில்லாமல் இறுக்கமான உடைகளைத் தொடர்ந்து பயன்படு த்தினால், விதைப்பையின் வெப்ப நிலை உயர்ந் து உயிரணுக்களின் தரமும், செயல்பாடும் பாதி க்கப்படும் என்பது நிரூ பிக்கப்பட்ட உண்மை. அதனால்தான் மருத்துவர்கள் 24 மணி நேரமும் உள்ளாடைகளை அணியக்கூடாது என்றும், பருத்தி உடைகளும், தளர் வான உடைகளும் தான் உகந்தது என்றும் சொல்கிறார்கள். ]

விதைப்பையில் இரண்டு விதைகள் உள்ளன. ஒவ்வொரு விதையு ம் ஒன்றரை அங்குல நீளம் ஒரு அங்குல அகலத்தில் நீள்கோள வடிவில் அமைந்திருக்கும். ஒவ் வொன்றின் எடையும் ஒரு அவுன்ஸ் (சுமார் 28 கிராம்) இருக்கும். இது பருவமடைந்த ஆண்களுக்கு! எல்லோ ருக்கும் இடது பக்கத்தில் உள்ள விதை எடை சிறிது கூடுதலாகவும், சிறிது கீழிற ங்கியும் இருக்கும். இது ஏன் என்பதற்கா ன காரணத்தை மருத்துவ உலகம் இது வரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் யூகமாக, நடக்கும் போது இரண்டு விதை யும் இடிபடாமல் இருப்பதற்காகவும், அடிபட்டால் கசங்கி விடாமல் இருப் பதற்காகவும் இப்படி அமைக்கப்பட்டுள் ளது என்று சொல்லப் படுகிறது.

இந்த விதைகள், கரு உருவாக்கக்கூடிய உயிரணுக்களைத் தயார்செய்வது, ஆண் ஹார்மோன் எனப்படும் டெஸ்டா ஸ் டொரான் தயாரிப்பது என இரு வேலைக ளைச் செய்கிறது. கம்பீரமான குரல், மீசை, தாடி, அழ கான தோற்றம், தசைக ளின் வளர்ச்சி, செக்ஸ் எண்ணங்கள் அதற்கான தூண்டுதல்கள் போன்றவை இந்த ஆண் ஹார்மோனின் பரிசுதான்!

ஒவ்வொரு ஆணின் உடம்புக்குள்ளும் அடிவயிற்றில் இரண்டு சுரப்பிக ள், பை மாதிரி அமைந்திருக்கும். செமின ல் வெஸிக்கிள்ஸ் எனப்படும் சுரப்பி, சர்க்கரை நீரைப் போன்ற ஒரு திரவத்தை த் தயார் செய்கிறது. இந்தத் திரவம் விந்தி ன் ஒரு பகுதியாகும். அடுத்து, ப்ராஸ்டே ட்கிலாண்ட் என்பது சிறுநீர் பைக்குக்கீழ் அமைந்துள்ளது. இது ப்ராஸ்டேட் ஃப்ளூ ய்டு எனும் திரவத்தை உற்பத்தி செய்கி றது. இதுவும் விந்தின் ஒரு பகுதியாக மாறும்.

[ஆதிகாலத்திலிருந்தே, ஆணின் ஜனன உறுப்பில் உருவாகும் விந்துக்கு அதிகப் படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. எல்லா நாட்டு மக்களிடமும் இந் த மனோநிலை இருந்தது. ஒரு குழந்தை யை உருவாக்க மட்டுமே விந்து தேவைப் படும், மற்றபடி செக்ஸ் இன்பத்துக் கோ, செக்ஸ் செயல்பாட்டுக்கோ விந்து துளி கூட தேவையில்லை என்பதை மருத்து வ விஞ்ஞானம் நிரூபித்த பிறகுதான் விந்துக்குத் தரப்பட்ட முக்கியத் துவம் குறைய ஆரம்பித் தது.. ]

ஒரு ஆணின் உடலில் உள்ள விதை , செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ் டேட் என்ற மூன்று சுரப்பிகள் சுரக் கும் நீர்களின் கலவைதான் விந்து. இந்த விந்துவை உற்பத்தி செய்வதி ல் விதையின் பங்கு 1 சதவிகிதம், செமினல் வெஸிக்கில்ஸின் பங்கு 60 சதவிகிதம், பிராஸ்டேட்டின் பங்கு 39 சதவிகிதம்.

கருமுட்டையுடன் சேர்ந்து கருவை உருவாக்கும் திறனை உயிரணு பெற்றிருந்தாலும், அந்த உயிரணுவுக்கு சக்தி கொடுத்து, ஆரோக்கி யம் அளிப்பது செமினல் வெஸிக்கில்ஸ் திரவம்தான். அதுபோல விதையில் உருவாகும் உயிர ணு, விதைக்குள் வளைந்து நெளிந்து செல்லும் குழாய்களுக்குள் நீண்ட தூரம் நகர்ந்து, பின்பு பெண்ணின் பிறப்புறுப்பி லும் பயணம் செய்து கருப்பையை அடை ய அதற்கு சக்தியையும், ஆரோக்கியத் தையும் தருவது செமினல் வெஸிக்கி ல்ஸ் திரவத்தின் பணி. இதில் பிரக்டோஸ் என்கிற சர்க்கரை பொருள் இருப்பதால், கிட்ட த்தட்ட 6 கலோரி அளவு சக்தியை இது உயிரணு வுக்குத் தருகிறது.

அதுபோல், பெண்குறியின் பாதையில் அமிலங்கள் நிறைந்திருக்கும். வெளியி லிருந்து கிருமிகள் அப்பாதைக்குள் நுழைய முயற்சிக்கும்போ து இந்த அமிலங்கள் அக்கிருமிகளை அரித்து விடும். இதன்மூலம் பெ ண்ணின் கருப் பையையும், கருமுட்டையையும் கிரு மிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்ற து. ஆனால், இந்த அமிலம் கிருமிகளை மட்டுமல்ல, ஆணின் உயிரணு வையும் சிதைக்கும் சக்தி பெற்றது. ஆகவே உயிரணு இந்த அமிலங் களால் சிதைக்கப்படாமல், பெண்ணின் உறுப் புக்குள் போவதற்காக பிராஸ்டேட் சுரப்பி உதவுகிறது. அதாவது, அமிலத்தன் மைக்கு எதிரான காரத்தன்மை கொண்டதாக இந்தத் திரவம் இருக்கும். இதனால் அமில த்தன்மை உள்ள பாதையில் உயிரணு எந்த சேதமுமி ன்றி பயணிக்கும்.

விதை, செமினல் வெஸிக்கில்ஸ், பிராஸ்டே ட் மூன்றின் பணிகளையும் எவராலும் கட்டு ப்படுத்த முடியாது. ஒரு ஆண் பருவ வயதுக் கு வந்த நாள் தொடங்கி ஆயுளின் அந்தி வரைக்கும்… ஒரு நொடிகூட ஓய் வின்றி இவை மூன்றும் தங்கள் வேலையைச் செய்துகொண்டே இருக்கும். இவை இப்படிபணிபுரிவதால், ஒரு ஆரோக்கியமான ஆணின் விதை ஒரு நிமிஷத்துக்கு 50,000 உயிரணுக்கள் அல் லது ஒரு நாளில் ஏழு கோடியே இருபது லட்சம் உயிரணுக்களைத் தொடர்ந்து உற் பத்தி செய்கிறது. பிறக்கும்போதே ஜனன உறுப்பில் கோளாறு, பிறப்புறுப்பில் தொற் று நோய்கள், பிறப்புறுப்பில் அடிபட்டு கா யம் ஏற்படுவது இந்த மூன்று நிலையில் மட்டும்தான் இதன் பணி பாதிக்கப்படலா ம்.

வேளாண் துறையில் விதை மற்றும் மண் இந்த இரண்டின் முக்கியத் துவத்தை நாம் அறிவோம். இந்த இரண்டும் ஒரு பயிர் வளர, அடிப்படையான விஷயங்கள். அதேபோல்தான், ஒரு உயிர்வளர விதை என்ற உயிரணு வும், அதைத் தாங்கிச் சுமந்து வளர் க்கக் கூடிய கர்ப்பப் பை என்ற நில மும் தேவை!

ஆணின் விதையிலிருந்து உருவா கும் உயிரணுவில் தலை, உடம்பு, வால் என மூன்று பகுதிகள் உள்ள ன. தலைப்பகுதி கிட்டத்தட்ட வேல் வடிவத்தில் அமைந்திருக்கும். இந் தத் தலைப் பகுதியில்தான் ஒரு மனிதனின் பரம்பரைத் தன்மைகள் பொதித்து வைக்கப்பட்டிருக்கின் றன. குறிப்பிட்ட அந்த மனிதனின் குணம், நிறம், பரம்பரை நோய்கள் போன்ற அனைத்தும் உயிரணு வின் தலைப் பகுதியில் தான் அடங்கியி ருக்கும். ஒவ்வொரு உயிரணுவின் தலைப் பகுதியி லும் 23 குரோமோ சோம்கள் இரு க்கும் (பெண்ணின் கருமுட்டை யிலும் 23 குரோமோசோ ம்கள் இருக்கும்).

உயிரணுவின் உடல் பகுதியை, உயிரணுவின் பவர் ஹவுஸ் என் று தான் சொல்லவேண்டும். ஆண்குறியிலிருந்து வெளியேறும் ஒரு உயிரணு. பெண்ணின் பிறப்புறுப்புப் பாதையிலும், பெலோபியன் குழா ய்களிலும் நீச்சலடித்துக் கருப்பைக் குள் செல்ல வேண்டும். இப்படி முழு வீச்சுடன் முண்டியடித்து நீந்தி செல்வ தற்கான சக்தியை உயிரணுவு க்குத் தருவது, உயிரணுவின் உடல் பகுதி தான்.

பெண்ணின் பிறப்புறுப்புக்குள் உயிர ணு நீந்திச்செல்லப் பயன்படுவது, அதன் வால்பகுதி. தலைப்பிரட்டை எனப்படுகிற தவளைக்குஞ்சு மாதிரி தான், உயிரணுவின் வடிவம் ஏறக் குறைய இருக்கும். வாலின் உதவி யுடன் நீந்தும் உயிரணு மணிக்கு 5முதல் 7அங்குலம் ரை நீந்த முடியும்.

[தவளைக் குஞ்சை கண்ணால் பார்ப்பதுபோல், உயிரணுவைப் பார்க்க முடியாது. மைக்ராஸ்கோப் மூலம்தான் பார்க்க முடியும். 17&ம் நூற்றா ண்டு வரை உயிரணுவைப் பற்றி யாருக்கும் சரியாகத் தெரியாததற்குக் காரணம், மைக்ராஸ்கோப் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததுதான். அதே நூற்றாண்டில் டென்மார் க்கை சார்ந்த விஞ்ஞானி லீவன் ஹுக், மைக்ரா ஸ்கோப்பைக் கண்டுப் பிடித்த பிறகுதான் மருத்து வ உலகில் பல அற்புதங்களை, பேருண்மைகளை க் கண்டறியும் வாய்ப்பு கிட்டியது. தான் கண்டுப் பிடித்த மைக் ராஸ் கோப்பிலேயே முதன்முதலாக உயிர ணுவைப் பரிசோதித்து, உயிர ணு என்பது இப்படித்தான் இருக்கும் என்று உலகின் கூரையில் நின் று கூவினார் லீவன் ஹுக்! ]

ஆணின்விதையில் உருவாகும் உயிரணு, உருவா கும்போதே இன்னொரு உயிரை உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்குத் தகுதியோடும், பக்குவ மாகவும் இருப்பதில்லை. படிப்படியாக வளர்ந்துதான் அது ஒரு பக்குவ நிலைக்கு வருகிறது. பக்குவப்பட்ட ஒரு உயிரணு உருவாகக் கிட்டத்தட்ட 60 முத ல் 72 நாட்கள் வரை ஆகும். அத்தகைய உயிரணு, ஆணு றுப்பிலிருந்து வெளிவந்த பிறகு 72 மணி நேரமே உயி ருடன் இருக்கும். அதன் பிறகு இறந்துவிடும். பக்குவ ப்பட்ட உயிரணு ஏதோ காரணங்க ளால் வெளி வர முடியாவிட்டால் (உதாரண மாகக் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்திருந்தால்), அது அங்கேயே இறந்துவிடு ம். இறந்த உயிரணுவில் உள்ள பொருட்கள் உடலுக்குள்ளேயே ஜீரணிக் கப்பட்டு விடும்.

பெண்ணின் ஜனன உறுப்பு:

ஆண் ஜனன உறுப்பு போலவே, பெண் ணின் ஜனன உறுப்பிலும் கண்ணு க்குத் தெரியும் உறுப்புகள், கண்ணுக்குத் தெரியாத உள் உறுப்புகள் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதழ்கள் மற்றும் யோனி மலர் எனப்படும் கிளிட்டோரிஸ், வெஸ் டிபியூல் போன்ற பகுதிகள் கண்ணுக்குத் தெரிப வை.

இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மே ல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண்டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ் கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு சதை க் கதவாக இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறு ம் சதைக்கதவு மட்டுமல்ல. ஏராளமான உணர்ச்சி நரம்புகள் இவற்றி ல் பின்னிப் பிணைந் துள்ளன். ஒரு பெண் ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இத ழ்களுக்குப் பெரும்பங்கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரி த்தால், அதற்குள் இருப்பதுதான் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள்பகுதி. இதில்சிறு நீர் துவாரம் மற்றும் பெண் குறி யின் உள்பாதை இரண்டும் இருக்கும்.

பெண்ணின் ஜனன உறுப்பில் கண் ணுக்குத் தெரியாமல் உள்ளே இருக் கும் பகுதிகளில் பெண்குறி உள் பாதை, கர்ப்பப்பையின் வாசல், கர்ப் பப்பை , பெலோபியன் டியூப், கரு முட்டை பை ஆகியவை அடங்கும்.

பெண்பிறப்புறுப்பின் உள்பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்ப ப்பை வாசல் வரை அமைந்திருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூரத்தில் அமைந்திருப்பது கன்னித்திரை.

[பெண் பிறப்புறுப்பின் உள்பாதை, பெண்ணுக்குப் பெண் வித்தியாசப் படும். சராசரியாக சாதாரண நி லையில் பெண்குறியின் உள் பாதையின் நீளம் மூன்றிலிருந்து ஐந்து அங்குலம் வரை இருக்கும். ஆனால், இந்த உள்பாதை தேவை க்கேற்ப நீளும் தன்மை கொண் டது. சில பெண்கள், ஆண் அளவு டன் ஒப்பிட்டுக் கவலை கொள் வார்கள். இந்தக் கவலையைத் தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்கள் திருமணத்துக்குப் பின்னர் வெ ஜினிஸ்மஸ் என்கிற செக்ஸ் பிரச்னைக்கு ஆளாகிறார்கள். இது போன் ற உணர்வில் உள்ள பெண்களுக்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச்னை வரும். ஆனால், இது தேவை இல்லாத கவலை. பத்தாவது மாதம் ஒரு குழந்தையே இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது என்பதை பலரும் அறிவதி ல்லை. ]

அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளிபோன்ற திரவம் உற்பத்தி யாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தியான சளிப்படலமாக அமைந்திருக்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப்படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும்.

[கருமுட்டை வரும் நாளில் மியூக்கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரந்து வரும் விஞ்ஞான உண்மையை வெள்ளைப்படுதல் என்று சில பெண் கள் தவறாக புரிந்துகொள்கின்றனர். ]

கண்ணுக்குத் தெரியாமல் பெண்ணின் உடலுக்குள் அமைந்துள்ளவை:

கர்ப்பப்பை, கருமுட்டைப் பை, கருமுட்டை. கர்ப்பப் பைக்கு ஆங்கிலத் தில் யூட்ரஸ் (UTERUS) என்று பெயர். கர்ப்பப் பையின் பரப்பளவு, நம் ஒரு கையை இறு க்கி மூடும்போது கிடைக்கும் பரப் பளவு போன்றது தான். முக்கோ ண வடிவில் இருக்கும் கர்ப்பப் பை, சாதாரண நிலையில் 3 முத ல் 4 அங்குல நீளமும், 2 அங்குல அகலமும் உடை யது. அதே சமயம், கருவுற்ற காலத்தில் இதன் நீளம் 12 முதல் 13 அங் குலமாகவும், அகலம் 8 முதல் 10 அங்குலமாகவும் விரி வடையும். முக்கோண வடிவத்தி ன் கூர்பகுதியில் கர்ப்பப் பையின் வாசல் இருக்கும். கர்ப்பப்பையி ன் சுவர்கள் அடர்த்தியாகவும் நீளு ம் தன்மை உடைய தாகவும் இரு க்கும். குழந்தை பிறந்தபிறகு மீ ண்டும் அது இயல்பான நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் இப்படியொரு நீட்சித்தன் மையுடன் உள்ள து.

கர்ப்பப் பையின் சுவர்கள் மூன்று அடுக்கு களைக் கொண்டிருக்கும். உள் ளே இருக்கும் அடுக்குக்கு எண்டோமெட்ரியம் என்று பெயர். கரு உரு வானதும் அது வளர்வதற்கு ஏதுவாக சற்று பருத்து, ஒரு குஷன் போல் பயன் தரும் இந்த அடுக்கு. ஒருவேளை கரு தரிக்க வில்லை என்றா ல் இறந்த கருமுட்டை, உப்பலான எண்டோமெ ட்ரியத்தின் துகள்கள் எல்லா ம் மாதவிடாய் சமயத்தில் ரத்தத்துடன் கலந்து வெளி யேறி விடும். ஒவ்வொரு மாதமும் எண்டோமெட்ரியம் உப்பலாகும். கரு உருவாகவில்லை என்றால், கழிவுகள் மாதவிடாயின்போது வெளிவந்துவிடும். இது ஒரு சுழற் சியாகவே நிகழும். பெண் பருவம டைந்திருந்த நாளிலிருந்து மெனோ பாஸ் (மாதவிடாய் முற்றிலும் நிற் கும் வயது) வரை இது நடக்கும்.

அடுத்து, பெலோப்பியன் டியூப். இது கர்ப்பப் பையின் மேல்புறம், இட து மற்றும் வலது பக்கத்தில் இரு குழாய்களாக இருக்கும். ஒவ்வொரு ஃபெலோப்பியன் குழாயும் 4 அங்குல நீளம், 2 மில்லிமீட்டர் குறுக் களவு கொண்டது. இதனுள்ளே சிறுசிறு நூல் மாதிரி சீலியா என்பது அமைந் திருக்கும். கருமுட்டையைக் கொஞ்சம் கொஞ் சமாக நகர்த்திக் கர்ப்பப் பைக்குக் கொண்டு வருதற்காக இந்த சீலியாக்கள் மர வட்டையின் கால் களைப் போல் அசைந்து கொண்டேயி ருக்கும்.

[பெண்களுக்கான குடும்பக் கட்டுப்பாடு ஆபரே ஷன் செய்யப்படும் போது இந்த ஃபெலோப்பி யன் டியூப்பைதான் வெட்டித்தைப்பார்கள்]

கரு முட்டைப் பை:

ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு கருமுட் டைப்பை கர்ப்பப் பைக்கு இடது புறமும், வலதுபுறமும் அமைந்தி ருக்கும் இவை சிறிய நீள் வட்ட வடிவில் ஒன்றரை அங்குல நீளம், ஒரு அங்குல அகலமும் உடையவை. ஒரு பெண் குழந்தை பிறக்கும்போ தே, கரு முட்டைப்பை இருக்கும். அதில் பக்குவப் படாத சுமார் இரண்டு லட்சம் கரு முட் டைகள் இருக்கும். இந்த லட்சக்கணக் கான கருமுட் டையில் (பருவம் எய்திய நாளி லிருந்து மெனோபாஸ் வரைக்கும்) ஏறக்குறைய 300 முதல் 500 கரு முட் டைகளே பக்குவத் துக்கு வருகின்றன. மீதி உள்ளவற்றை உடம்பே ஜீரணித்து விடும்.

ஒவ்வொரு மாதமும் இடதுபுற அல்லது வலது புற கருமுட்டைப் பை யிலிருந்து பக்குவமடைந்த ஒரு கருமுட்டை, பையிலிருந்து வெளி பட்டு சீலியாக்களால் நகர்த் தப்பட்டு கருப்பைக்குள் வரும். இப்படி ஒவ் வொரு மாதமும் கருமுட்டை வெ ளிப்படுவதற்கு ஓவலேஷ ன் என்று பெயர். லத்தீன் மொழியில் முட்டைக்கு ஓவம் என்று பெயர். இக் கருமுட்டை வெளியேறு தல் ஒவ்வொரு பெண்ணுக் கும் பருவமடைந்த நாளிலிருந்து மெனோபாஸ் வரை 4 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ந்து நிகழும். கருமுட்டையைப் பக்குவமடைய வைப்பது, அதை நான்கு வாரத்துக்கு ஒரு முறை வெளிவர வைப்பது போ ன்றவற்றை ஈஸ்ட்ரோஜன் எனப்படு ம் பிரத்யேக பெண் ஹார்மோன் செய்யும். பொதுவாக ஒரு பெண்ணு க்கு 45 வயதிலிருந்து ஈஸ் ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்று விடுவ தால்தான் அந்த வயதில் மாத விடாய் நின்று விடுகிறது.

கருமுட்டை கருப்பைக்குள்போனதும் அந்தமாதமே அப்பெண் கருவா கிவிட்டால், அந்த முட்டை எங்கிருந்து வெளிப்பட்டதோ அங்கே ப்ர ஜஸ்டெரோன் (Progesterone) எனும் ஹார்மோன் உருவாகி, மேற் கொண்டு அடுத்த கரு முட்டை வெளிவராமல் பார்த் துக் கொள்ளும்.

[கர்ப்பத் தடை மாத்திரைகளி ல் இருக்கும் ஹார்மோன் மருந்துகள், வாய்வழி உள்ளே சென்று ப்ரஜஸ்டெ ரோனை உருவாக்கி, முட்டை வெளியேறாமல் பார்த்துக் கொள்ளும். இவ்வாறாகத்தான் இந்த மாத் திரைகள் கர்ப்பம் அடையாமல் பார்த்துக்கொள்கின்றன. ]

கருமுட்டை:

ஆணின் உயிரணுவில் இருப்பது போலவே பெண்ணின் கருமுட் டையிலும் 23 குரோமோ சோம்க ள் இருக்கும். பரம்பரை குணங்கள், நிறம், பரம்பரை நோய்க்கூறுகள் எல்லாம் இதில்தான் பொதிந்திருக்கும். கரு முட்டையின் குறுக்களவு ஒரு மில்லிமீட்டர். குண்டூசி தலை அளவு தான் இருக்கும். பையிலிரு ந்து முட்டை வெளியாகி ஏறக்கு றைய 24 மணிநேரம் வரை உயிரு டன் இருக்கும்.

கரு எப்படி உருவாகிறது:

ஒருமுறை உடல் உறவு கொள்ளு ம்போது 380 முதல் 480 மில்லியன் உயிரணு பெண்ணுறுப்புக்குள் செல் லும். இந்த உயிரணுக்கள் பெண் குறிபாதை, கர்ப்பப்பை வாசல் என பலவற்றில் பயணித்து ஃபெலோப்பி யன் டியூப்புக்குள் செல்ல கிட்டத்தட்ட மூன்றிலிருந்து ஐந்து மணிநேரம் ஆகும். இதனால், 480 மில்லி யன் உயிரணுவில் சுமார் 3000 உயிரணுக் கள் மட்டுமே டியூப்புக்குள் செல்லும். இவற் றிலும் பல, அசைந்து கொ ண்டேயிருக்கும் சீலியாக்களை எதிர் கொள்ள முடியாமல், இறந்துபோய் சில நூறு உயிரணுக்களே எஞ்சி நின்று கருமுட்டைக்கு அருகில் போய் நிற் கும். இந்த சில நூறு உயிரணுக்களில், ஒரே ஒரு உயிரணு மட்டுமே கடைசியில் கருமுட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று விடும். ஒரு உயிரணு வந்தவுடன் கருமுட்டை மூடிக்கொள்ளும். இத ன் மூலம் இன்னொரு உயிரணு உள்ளே வருவது தடுக்கப்படுகிறது. கரு முட் டையிலிருக்கும் 23 குரோமோசோம் களும், உயிரணுவில் இருக்கும் 23 குரோமோ சோம்களும் சேர்ந்து (23 ஜோடி) 46 குரோ மோசோ ம்களாகி உயிர் உருவாகிறது.

கருமுட்டையை உயிரணு துளைக்கு ம்போது, உயிரணுவின் தலைப் பகுதி யில் இருக்கும் 23 குரோமோசோம்க ளை மட்டும் (நியூக்ளியஸ்) கருமுட்டைக்குள் செலுத்திவிட்டு, உயிர ணுவில் வாலும் உடலும் இறந்துபோய் திரும்பிவிடும். உயிரணு கருமுட்டை யை மோதும்போது, உயிரணுவின் தலைப்பகுதியில் அக்ரோசின் எனும் ரசா யனம் வெளிப்பட்டு கருமுட்டையின்  சுவரை அரித்து சிறிய துளையை ஏற்ப டுத்தும்.

[ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கத் தேவை யான அளவில் உயிரணுக் கள், ஆரோக்கியமான உயிரணுக்கள் ஓர் ஆணிடம் இருக்க வேண் டும். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் தனது விந்து கெட்டியாக இருக்கிறது என் றோ, நீர்த்துள்ளது என்றோ… நினைத்து கொண்டு சிலர் போலி டாக்டர்களிடம் சிகிச்சைக்கு சென்று ஏமாறுகின்றனர். விந்து கெட்டியாக இருப்பதற்கும், நீர்த்து இருப்பதற் கும் நாம் சாப்பிடும் உணவு, நம் உடலில் உள்ள நீர்சத்து, உடல் ஆரோக்கியம் போன்றவைதான் காரண ம். ஆகவே விந்து கெட்டியாக அல்லது நீர்த்துப் போயிருப்பது ஒரு குறைபாடு அல்ல. ஆரோக்கியமான உயிர ணு அதில் உள்ளதா என்பதே முக்கி யமானது.. ]

உயிர் எப்படி வளர்கிறது:

கருமுட்டையுடன் விந்தின் உயிரணு இணைந்ததும் கரு உருவாகிறது. ஆரம்ப த்தில் கருவுக்குள் ஒரே ஒரு செல்தான் இருக்கும். அடுத்த 24 மணி நேரத்தில் அந்த ஒரு செல், இரண்டு செல் ஆகிவிடு ம். அடுத்த டுத்து, அவை பன்மடங்காகப் பெருகி நான்காவது நாளில் பல ஆயிரம் செல்கள் சேர்ந்த ஒரு பந்து மாதிரி ஆகி விடும். இந்தப் பந்து க்கு மாருலா என்று பெயர். இந்த மாருலா, நான்காம் நாள் ஃபெலோப்பியன் டியூ ப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்குள் வந்துவிடும். ஏழாம் நாள் கர்ப்பப் பையில் உப்பிக்கொண்டிருக்கும் உள் சுவரான எண்டோமெட்ரியத்தில் இந்த மாருலா அமர்ந்துவிடும். அங்கே படிப் படியாகப் பத்தாவது மாதம் வரை வளரும்.

இது இயற்கையாக, இயல்பாக எல்லோருக்கும் நடைபெறும் கருத்த ரித்தலாகும்.

ஆனால், வெகு சில பெண்களுக் கு நான்காவது நாள் ஃபெலோப்பியன் டியூப்பிலிருந்து, மாருலா நகரா மல் அதற்குள்ளேயே கருவாக வளரும். இதற்கு எக்டோபிக் பிரகனன்சி (ectopic pregnancy) என்று பெயர். இது தாயின் உயிருக்கே ஆபத்தா கி விடும் கர்ப்பம். ஏனெனில், கர் ப்பப்பைக்கு இருக்கிற விரிந்து கொடுக்கிற தன்மை, பெலோப் பியன் டியூப்புக்கு இல்லை என்ப தால்தான் இந்த ஆபத்து.

கரு எப்படி ஆணாகவோ பெண் ணாகவோ மாறுகிறது: உடலில் உள் ள ஒவ்வொரு செல்லிலும் 23 ஜோடி குரோமோசோம்கள் இருக்கும். இதில் 22 ஜோடி குரோமோசோம் களின் வேலை பரம்பரை குணம், நிறம், நோய்க்கூறு போன்றவற்றை நிர்ணயிப்பது. எஞ்சியுள்ள ஒரு ஜோ டி, அதாவது 23&வது ஜோடிதான் பாலி னத்தைத் தீர்மானிக்கும் குரோமோ சோம் (chromosome). ஆணின் உயிர ணுவில் உள்ள 23 குரோமோசோ மில் 50 சதவிகிதம் எக்ஸ் குரோமோசோ ம்களாகவும், 50 சதவிகிதம் ஒய் குரோ மோசோம்களாகவும் இருக்கும். பெ ண்ணின் கருமுட்டையில் உள்ள 23 குரோமோசோ மில் 100 சதவிகிதமும் எக்ஸ் குரோமோசோ ம்கள் மட்டுமே இருக்கும். ஆணின் உயிர ணுவில் உள்ள ஒய் குரோமோசோம் பெண்ணின் கரு முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோமுடன் சேர்ந்தால் எக்ஸ்&ஒய் ஆகி, ஆண் குழந்தை உரு வாகும். உயிரணுவில் உள்ள எக்ஸ் குரோ மோசோம் பெண்ணின் கரு முட்டையில் உள்ள எக்ஸ் குரோமோசோ முடன் சேர்ந்தால் எக்ஸ்& எக்ஸ் ஆகி பெண் குழந்தை உருவாகும்.

[ஒரு பெண்ணின் வயிற்றில் பெண் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பது ஆணின் உயிர ணு என்பது தெரியாத பலர், பெண்ணிடதில் குறை உள்ளதாக அவர்களை கொடுமைக்கு ஆ ளாக்குகின்ற னர். முழுக்க முழுக்க பெண், ஆண் என்பதைத் தீர்மானிப்பது ஆணின் உயிரணுதா னே தவிர, பெண் அல்ல!.. ]

குழந்தை பிறக்காமை அல்லது குழந்தை உருவாக்க இயலாமை ஏன் ஏற்படுகிறது? :

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமைக்கான காரணங்கள் தற்காலிகமாக இருந்தால் அத ற்கு பெயர் இன்பெர்டிலிட்டி. அதுவே நிரந்த ரமான வையாக இருந்தால் அதற்கு ஸ்டெரி லிட்டி என்று பெயர். ஒரு வேளை, குழந்தை பிறக்காமைக்குக் காரணங்கள் நிரந்தரமான வையாக இருந்தாலும், இன்றைய நவீன மருத்துவத்தில் நல்ல சிகிச்சை முறைகள் உள்ளன. உதாரணமாக, ஆணுக்குத் தீர்க்க முடியாத குறைகள் இரு ந்தால் டோனர் இன்செமினேஷன்… பெண்ணுக்கு சரோகேட் மதர் எனும் நவீன சிகிச்சை முறைகள் உதவுகின்றன.

பொதுவாக ஒரு பெண் கர்ப்பமாக வே ண்டும் என்றால், கருமுட்டை வெளி யாகும் தருணத்தில் உடல் உறவில் ஈடுபட்டிருக்க வேண்டும். அதுமட்டுமி ன்றி, பெண்ணின் ஜனன உறுப்பும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆணின் உயிரணுக்களின் எண்ணி க்கையும் அதிகமாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்க வேண் டும். இதற்கெல்லாம் மேலாக உருவான கரு தங்கி வளருவதற்கு ஏற்றாற்போல கர்ப்பப் பையும் ஆரோக்கியமாக இருப் பதுடன் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் உடலும் முழுமையான ஆரோக்கியத்து டன் இருக்க வேண்டும்.

ஒரு தம்பதிக்கு குழந்தை பிறக்காமல் இருப்பதற்கு ஆண் சார்ந்த காரணங்க ள், பெண் சார்ந்த காரணங்கள் அல்லது இருவரையும் சார்ந்த காரணங் கள் என மூன்றுவிதமான காரணங்கள் உண்டு.

குழந்தையின்மைக்கு ஆண் சார்ந்த காரணங்கள் 40&லிருந்து 45 சத விகி தம் இருக்கலாம். பெண் சார்ந்த காரணங்கள் 50&லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரை யும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

ஆண் சார்ந்த காரணங்கள்:

சம்பந்தப்பட்ட ஆணுக்குத் தரமான உயி ரணு உற்பத்தியாவதில் பிரச்னை இரு ப்பது:

ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பாக 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தை யை உருவாக்க முடியும். இப்படி வெளிவரும் விந்தில், ஒரு மி.லி&க்கு 20 மில்லியன் உயிரணுவாவது இரு க்க வேண்டும். இதில், 30 சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வே ண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சத விகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொ டிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவிகி தமாவது மிகமிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

மேற்சொன்ன அளவுகள் குறைந்தபட்ச அளவுகள்தான். இவை உலக சுகாதார நிறுவனம் 1992&ல் வெளி யிட்ட ஆய்வறிக்கையில் கூறியுள் ளவை.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற் பட்டிருந்தாலோ, தொற்றுநோய் ஏற் பட்டிருந்தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ& தரமான உயி ரணு உற்பத்தி யாவதில் பிரச்னை ஏற்ப டும். சத்தான உணவு, உடற் பயிற்சி, சரியான ஓய்வு இவற்றுடன் புகை மற்றும் மதுப்பழக்கம் இல் லாதிருக் கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொது வாகத் தடையேதும் இருப்பதில்லை.

உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்னை:

சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவு களின் கட்டமை ப்பு என செக்ஸுக்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன் மையான, முக்கியமான நோக்கம்& சந்ததியை உருவாக்கு வது தான். இனப்பெருக்கம் ஒன்று க்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதா ன் இது. வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதால், அதனுடன் ஒருவிதமான இன்ப த்தையும் இணைத்து வைத்துள் ளது இயற்கை! செக்ஸ் இன்பத் துக்காக இணை சேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது.

சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனைவியின் உறுப்பில் தங்கா த சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம். இப்படி யொரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன. ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப்பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறா மல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் தங்காமல் போகலாம்.

உடலுறவுகொள்ளும் கால அவகாசத்தில் பிரச்னை:

ஒரு நாளில் முதல் தடவை உடலுறவு கொள்ளும் போதுதான்போது மான அள வில் விந்தும் அதில் போதுமான அளவு உயிரணுவும் இருக்கும். அதேநாளில் அடுத்தடுத்த முறை உடலுறவு கொள்ளு ம்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைவதுடன், அதில் போதுமான அளவி ல் உயிரணுவும் இருக்காது. அதேபோல் நிறைய நாட்கள் இடை வெளி விட்டு உறவு கொள்வதால், உயிரணுவின் மூவ்மென்ட் பாதிக்கப்பட்டு, நீந்தும் திறன் குறைந்துவிடும். அது மட்டுமல்லாமல், உயிருடன் இருக் கும் உயிரணுவின் எண்ணிக்கையும் குறை ந்துவிடும்.

செக்ஸில் தவறான டெக்னிக்குகளைப் பின்பற்றுவது:

பெண்ணை உடலுறவிற்கு தயார்நிலை க்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும் போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். பெண் பிற ப்புறுப்புல் ஈரப்பதம் முன்விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இயற் கையாகவே உண்டாக்குகின்றன. இதை தவிர்த்து செயர்க்கையாக ஈரப் பதத்தை உண்டாக்க எண்னை போன்ற சில பொருட்களை பயன்படுதுவதால் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்கு ள் போகவிடாமல் தடுக்கின்றன. மேலு ம், இவை கர்ப்பப்பை, பெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற் றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி வி டும்.

ஆண் ஜனன உறுப்பில் பிறவிக் கோ ளாறு இருப்பது:

பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந் து உயிரணு வெளிப்படும் போதுதா ன் கரு உருவாகும். ஆனால், சில ஆண்களுக்குப் பிறவியிலேயே ஆண்குறியின் முனையில் இருக்க வே ண்டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண் குறிக்குள் நுழைந்தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெளி யிலேயே வெளியேறிவிடும். இது ஒரு பிறவிக்குறை. இதற்கு ஹை போஸ்பேடியாஸ் என்று பெயர். இன் றைய நவீன மருத்துவ விஞ்ஞான த்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக் குறையை நிவர்த்தி செய்துவிடலாம். சில ஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண்குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக்குள் போகவே போ காது. இந்தக் குறையையும் ஆபரே ஷன்மூலம் சரிசெய்துவிட முடியும்.

பெண் சார்ந்த காரணங்கள்:

கருமுட்டை வெளியாகும் போதுதா ன் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்க முடியும். சில பெண்களுக்குக் கரு முட்டை வெளியாகாமல்கூட இரு க்கலாம். சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கரு உருவானாலும் கூட& உருவான கரு, பெலோப்பியன் டியூப்பிலிரு ந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலேகூட இருந்து விட லாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப் பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்பட லாம். இதனால் இந்தப் பெண் களுக்குக் குழந்தை பிறக்காம ல் போகும்.

உயிரணுவானது கருப்பாதை, பெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்களை நீந்திச் சென்றா ல்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச்செல்ல முடியாத அளவுக்குத்தடைகள் ஏற்பட்டு, அதனா ல் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போ கலாம். அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.

ஹார்மோன் கலாட்டா:

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தட வை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கருமுட்டை வெளி வரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட் காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், சில பெண்களுக்கு கரு முட்டையே வெளிவ ராமல் கரு உருவாவது தடைபடுகிறது. கருமுட்டை வெளிவராமல் போ வதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள் தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சிலருக்கும் குழந் தை இல்லாமல் இருக்கும். இவர் களுக்கு ஹார்மோன் குறை பாட்டால் கருமுட்டை வெளிவரா மல் போய்விடலாம். இதுமட்டுமி ல்லை, தீவிர மன அழுத்தம்கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என் பது மருத்துவ உண்மை.

பொதுவாக கரு ஃபெலோப்பியன் டி யூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப் பைக்கு ள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண் டோமெட் ரியம்) பலவீனமாகிப்போனால், பெலோப் பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கர்ப்பப் பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளர முடியாத சூழல் ஏற்படும். இந்த எ ண்டோமெட்ரியம் ஆரோக்கியமில்லாம ல் போவதற் குரிய காரணங்களில், ஹார் மோன் கலாட்டாவு ம் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமில த்தன்மை கொண்டிருக்கும், இந்த அமிலத் தன்மையை விந்தில் உள்ள காரத்தன் மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித்தொற்றால், அமி லத் தன்மை அதி கரித்துவிடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூக்கஸ் என்கிற அடர்த்தியான சளிப் படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட் டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப்போய் கசிந்து வெளியேறிவிடு ம். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப் பையின் வாசலி ல் தடையாக இருந்து& உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடு த்து நிறுத்தி விடும். இதன் காரணமாக வும் குழந்தைப் பிறப்பு தடைப டும்.

சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலு ம், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள் ளே வரும் உயிரணுவின் வீரியம் குறைந்துவிடும் அல்லது உயிர ணு இறந்து விடலாம்.

ஃபெலோப்பியன் டியூப் பிளாக்:

கரு முட்டையும், உயிரணுவும் சந்தி க்கும் ஃபெலோப்பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகா மல் போகலாம். பிறவி குறைபா டு, பால் வினை நோய், காசநோய் போன்றவற் றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப் பு ஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மன அழுத்தத்தால் ஃபெ லொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்பட லாம்.

கர்ப்பப் பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூ ப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிற க்க 50 சத விகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப் பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந் தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை.

பெண் ஜனன உறுப்பில் பிறவிக் குறை பாடு:

பிறவியிலேயே கரு முட் டைப்பை, கர்ப் ப ப்பை, பெண்குறி பாதை போ ன்றவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாமல் குறைபாட்டுடன் பிறந்திருக் கும் பெண்களுக்கும் குழந் தை பாக்கியம் எட்டாக் கனவுதான். இன்னும் சில பெண்களுக்கு ஜனன உறுப்பு படைக்க ப்பட்டிருக்கும். ஆனால், சரியாக வளர்ச் சி அடைந்திருக்காது. சில பெண்களுக்கு ஜனன உறுப்பு சரியாகவும் உரிய வளர்ச் சியும் பெற்றிருக்கும். ஆனால், பிறவியி லேயே ஜனன உறுப்புக்குப்பாதை இருக் காது. சில ருக்கு ஜனன உறுப்பில் பாதை இருக்கும். ஆனால், அது அடைபட்டிருக் கலாம். இதுபோன்றவர் களுக்கு உடலுற விலும் பிரச்னை இருக்கும். இக்குறை யை ஆபரேஷன் மூலம் குணப்படுத்தலாம்.

செக்ஸ் பிரச்னையால் குழந்தை இல்லாமை:

சிலபெண்களுக்கு செக்ஸ் ஆசை இருக்கும். உணர்ச்சிவசப்படவும் செய்வார்கள். ஆனால், உட ல் உறவில் ஈடுபட்டால் வலி எடுக்குமோ என்ற தேவையற்ற பயத்தில் உழல்வார்கள். அதன் காரணமாக அவர்களையும் அறியாம ல் பெண்குறி பாதையை இறுக்கமாக்கி விடு வார்கள். திருமணமான புதிதில் சில பெண் களுக்கு இப்பிரச்னை இருக்கும். சில பெண்க ளின் இல்லற வாழ்வில் இதுவே தொடர்கதை யாகவும் இருக்கும். இதன் காரணமாகவும் குழந்தை பிறப்பு தடைபட்டுப் போகும்.

இருவருக்குமான காரணங்கள்:

குழந்தையின்மையைப் பொறுத்தவரை, கண வன் &மனைவி இருவருக்குமான காரணங் கள் 5 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகித ஜோடிகளுக்கு இருக்கும். சில தம்பதிகளில் கணவருக்கும் சரி, மனைவிக்கும் சரி, எந்த பிரச்னையும் இருக்காது..ஆனால், குழந்தை பிறக்கா மல் இருக்கும். இதற்கு மருத்துவரீதி யில் இடியோபதிக் இன்ஃபெர்டிலிட்டி என்றுபெயர். இன்னாதென்று அறியவே முடியாத ஏதோ ஒரு காரணத்தால்தான் இந்த நிலை ஏற்படு கிறது. இதற்கான காரணத்தை இன்றைய அதிநவீன மருத் துவ விஞ்ஞா னத்தால்கூட கண்டுபிடிக் கமுடியவில்லை. ஒருவேளை, எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.

– நன்றி: விகடன்

12 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: