Friday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (01/09/2013): இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!

அன்புள்ள அம்மாவிற்கு —

நான் 23 வயது பெண். எனக்கு இரண் டு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உண்டு. நான் ஓர் அனா தை. நான் விடுதியில் வேலைப்பார் த்துக் கொண்டிருந்தபோது, இரக்க முள்ள ஒரு மனிதர் என்னைப் பார்த் து அனுதாபப்பட்டு, “திருமணம் செய் து கொள்கிறேன்.’ எனக்கூறி அழை த்து வந்தார்.

அவரைப் பற்றி அங்குள்ளவர்களி டம்  கேட்டேன்… அனைவரும் அவரை, “நல்லவர்’ என்று கூறினர். எனக்கு படிப்பறிவு இல்லை. அப்போது அவர் வயது 35. என் வயது 17. “என்னை திருமணம் செய்து கொள்கி றேன்’ என அழைத்து வந்தவர், மூன்று குழந்தை கள் பிறந்த பின்பும் திருமணம் செய்ய வில்லை. அவர் செல்வந்தர்; என் னை நல்ல முறையில் வைத்திருந்தார்.

எனக்கு ஒரு குழந்தை பிறந்த பின்தான் தெரியும், அவருக்கு ஏற்கனவே மணமா கி முதல் மனைவியும், மூன்று குழந்தை கள் உண்டு என்று. அவர்களுக்கு தெரி யாமல், என்னை தனி வீட்டில் வைத்து பராமரித்து வந்தார். எங்கள் விஷயம் தெரிந்தவுடன், அவர்கள் வீட் டினர் சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வாங்கிவிட்டு, “அவளை விட்டு விலகி வந்தால் இங்கு இரு, இல்லாவிட்டால் நீ வேண்டாம் ...’ என கூறி விட்டனர். அவர் என்னி டம் இருந்து விட்டார். ஏழு வருட ங்கள் ஆகிறது. என்னை நன்றாக வைத்திருந்தார். எங்களிருவருக்கி டையே இருந்த அளவுகடந்த அன்பி னால், குடும்ப கஷ்டம் பெரிதாக தெரியவில்லை.

என் பிரச்னை…

தற்போது அவரிடம் நிறைய மாற்றங்கள். நான் தற்கொலை செய்ய முயன்ற போது என்னை காப்பாற்றி, சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். தற்போது என்னை கண்டாலே அவருக்கு பிடிக்கவில்லை; குழந்தைகளையும் கவனிப்பதில்லை. இப்போது, அவர் 15 வயதுள்ள பெண் ஒரு வருடன் தொடர்பு வைத்துள்ளார். பணம் கொடுப்பதில்லை. வீட்டிற்கு சரியாக வரு வதில்லை. கேட்டால், “நான் ஆம்பிளை, எப்படி வேண்டுமானலும் இருப்பேன். எது வேண்டுமானாலும் செய்வேன். நீ கேட்க க் கூடாது…’ என்கிறார்.

இப்போது தகாத நண்பர்களின் சேர்க்கை வேறு அவருக்கு. அவர் நண்பர்கள் சொல்படி இப்போது அப்பெண்ணிடம் வாழ்ந்து வருகிறா ர். எனக்கு எந்த தொழிலும் தெரியாது; படிக்கவில்லை; குழந்தைகளை பரா மரிக்க யாருமில்லாததால், வேலைக் கும் செல்லவில்லை.

ஒன்றரை வயது கைக்குழந்தை வேறு உள்ளது. தங்களின் ஆலோசனைக் காக காத்திருக்கிறேன். அவர் என் னை விட்டுவிலகி செல்ல திட்டம் போ ட்டுக் கொண்டிருக்கிறார். நான் கஷ்ட ப்பட்டு வாங்கிய பொருட்கள் மற்றும் துணி முதற்கொண்டு எடுத்துச் செல் கிறார். அருகில் இருப்பவர்கள், “பொறுமையாக இரு’ என்கின்றனர். தாங்க ள் தான் எனக்கு நல்ல பதில் தர வேண்டும்.

— அன்பு மகள்.

அன்பு மகளுக்கு —

உன் கடிதம் கண்டேன். உனது நிலை கண்டு மிகவும் வருத்தப்படுகி றேன். நீ படிப்பறிவு இல்லாதவளாக, அனாதையாக இருக்க லாம். ஆனால், எது நல்லது – எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவு இல் லாதவளாக இருந்து விட்டாயே என்பதுதான் என் வருத்த ம். 17 வயதி ல் உனக்கு உலக அனுபவம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

ஆனால், இப்போதும் அப்படியே இருப்பது தப்பு கண்ணம்மா. எப்போது உன்னை மணப்பதாகக்கூறி அழைத்து வந்தவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவி, குழந்தைகளோடு இருக்கின்றார் என்பது உன க்குத் தெரிய வந்ததோ – அப்போதே ஒரு குழந்தை பிறந்த கையோடு -போதும் இவருடன் வாழ்ந்த வாழ்க்கை என்று நீ வெளியேறி இருக்க வேண் டும். எந்த நம்பிக்கையின் அடிப்ப டையில் இரண்டு, மூன்று என, பெற்றுக் கொண்டே போனாய்?

நீ தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது, அவர் காப்பாற்றி, சமாதானப்படுத்தி, திருமணம் செய் து கொண்டார் என்று எழுதியிரு க்கிறாய். காப்பாற்றி, சமாதானப்படு த்தி உனக்கென்ற நல்ல துணை வரைத் தேடி, திருமணம் செய்து வைத்திருந்தாலோ அல்லது உனக்கென ஏதாவது தொழிற் கல்வி க்கு ஏற்பாடு செய்திருந்தாலோ அது நல்ல மனிதனுக்கு அடையா ளம்!

திருமணம் செய்து கொள்வது, அதுவும் முப்பத்தைந்து வயதில், பதி னேழு வயதுப் பெண்ணை மணப்பது, எந்த விதத்தில் நியாயம்? இதிலிருந் தே அந்த மனிதரின் சுயநலம் தெரிய வில்லை?

மற்றவர்கள், அதாவது, அருகில் இருப் பவர்கள், “பொறுமையாக இரு’ என்று சொல்கின்றனர் என்றால், சட்டப்படி யோ, வேறு விதமா கவோ நீ எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாது என் பதினால் தான். நிஜத்தில், நீ அந்த மனி தரின் சட்டபூர்வமான, மனைவி இல்லை; கூட்டி வந்து வைத்திருக் கிறார்.

விரட்டிவிட்டால் தட்டிக்கேட்கவோ, வேறு நடவடிக்கை எடுக்கவோ உனக்கு எந்தவொரு உரிமையும் இல்லை. இதை நான் சொல்ல மிகவும் வருத்தப்படுகி றேன். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியி ருக்கிறாய் கண்ணம்மா. இனி மேலாவது விழித்துக் ள். போதும் இந்த ஆளுடன் நீ வாழ்ந்தது. நாலாவது ஒன்று வயிற்றில் வரும் முன், இந்த உறுதியில் லாத வாழ்க்கையை உதறு. மறுபடியும் ஏதாவது ஒரு அநாதை இல்லத்தில் வேலை கிடைத்தாலும் கூட பரவாயில்லை. உன் குழந்தைகளு டன் கிளம்பி, இது போன்ற இல்ல த்தில் தங்க முடியுமா என்று பார்.

அதன்பின் ஏதாவது ஒரு தொழிலை , அது சமையல் தொழிலானாலும் சரி – முறையாக, நேர்த்தியாகக் கற் றுக்கொள். படித்தவர்களுக்குத்தா ன் இந்த நாட்டில் வேலை கிடைக் கும் என்கிற, சித்தாந்தத்தை மாற்று … எந்தவொரு வேலையும் மட்டமில்லை.

உன்குழந்தைகள் -தங்களது நிலையை உணர்ந்து, உள்ளுக்குள்ளே யே வெந்து, குமையத்துவங்கும் முன், உனக்கென ஒரு பாதை அமைத்துக் கொள். எத்தனையோ  மருத்துவமனை களில் ஆயா வே லை, வீடுகளில் குழந் தைகளைப்பார்த்துக் கொள்ளும் வே லை, கூட்டிப்பெருக்கும் வேலை. இப் படி எதுவோ ஒன்று. நாலு வீடுகளில் காலையில் இட்லி, வடை சுட்டுக் கொ ண்டு போய் விற்றாவது பிழைப்பை நடத்து… கவுரவமாக இருக்கும்.

இனி, இவரை நம்பி, வாழ்நாளை வீணாக்காதே!

— அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: