Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காதல் உணர்வோடு காம உணர்ச்சியையும் தூண்டும் 10 உணவு வகைகள்!

காஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண்டர் டூமாஸ் இவர்களு க்குள் இருக்கும் ஒற்றுமை என்னவெ ன்று தெரியுமா? இவர்கள் அனைவரு ம் இயற்கையான காமம் பெருக்கும் உணவுகளை உண்டு, தங்களது காம த்தை அதிகரிக்கச் செய்து, தங்கள் செக்ஸ் உணர்வுகளை தூண்டச் செய் தார்கள். “அஃப் ரோடிசியாக்” (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கி ரேக்கக் காதல் கடவுளான “அஃப்ரோடிசியாக்” என்பதிலிருந்து உரு வானதாகும். காதல் உணர்வைத் தூண்டும் உணவு வகைகளைப் பட்டியலிடுவதற்குமுன் உருவம், சுவை மற்றும் வாசனை போன்ற வை கணக்கில் எடுத்துக் கொ ள்ளப் படுகின்றன. பெரும் பாலான காமம் பெருக்கும் உணவுவகைகள் மனிதர் களின் இனப்பெருக்க உறு ப்புகளைப் போன்ற உருவ த்தில் அமைந்துள்ளன.

காலத்தைக் கணக்கிட முடியாத முன்னரே, இவ்வகையான இயற் கை காமப்பெருக்கும் உணவு வகை கள் மிகச்சிறந்த முறையில் செயல் பட்டு, காமத்தைப் பெருக்கி இன்பத் தை அதிகரிக்கச் செய்வதில் மிகச் சிறந்த ஆற்றலுடையதாக திகழ்கின் றன. எனவே கீழே சில உணவுப் பொ ருட்கள் உங்களுடைய செக்ஸ் வாழ் க்கைக்காக தொகுத்து வழங்கப்பட் டுள்ளன.

ஒயின்

ஒயின் குடிப்பதால் நம்முடைய காம உணர்வு நன்கு தூண்டப் படுகிறது. இது மனதை ரிலாக் ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயக மாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக காமத்தைத் தூண்டும் பொருளாகக் கருதப் படுகிறது. ஒயினானது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களின் காம உணர்வுகளையும் மிகவும் நன்றா கத் தூண்டுகிறது. “பெண்க ளின் எதிர்ப்பு உணர்வுக ளை மட்டுப்படச் செய்வதால், ஒயினானது காமப்பெருக்கியாகக்கருத ப்படுகிறது” என்று டாக்டர்.சேத் என்பவர் குறிப்பிடுகிறார். ஆனால் மதுபான வ கைகளை எப்பொழுதும் அதிகமாகக் குடிக்கக் கூடாது. அதிகமாகக் குடித்தா ல், அது ஒருவித மயக்க நிலையைத் தான் தரும்.

வாழைப்பழம்

ஆணுறுப்பைப் போன்ற இதனு டைய உருவம் மட்டுமின்றி, இதி ல் பல்வேறு சிறந்த தன்மைகள் அடங்கியுள்ளன. வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகளவில் அட ங்கியுள்ளன. குறிப்பாக இதிலு ள்ள பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி ஆகி யவை செக்ஸ் ஹார்மோன்களை உடலில் அதி கமாகச் சுரக்கச் செய்கின்றன. உடலில் டெஸ்டோஸ்டிரோன் (testos terone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப் பழத் தில் நிறைந்துள்ளது. அதிகளவு சர்க்கரை அடங்கியுள்ளதால், இது மிகுந்த சக்தியையும், நீண்ட நேரம் நீடிக்கும் இன்ப உணர் வையும் அளிக்கிற து.

கடல் சிப்பிகள்

முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மையான கடல் வாழ் உயிரினம் இது . ஓட்டிற்குள் இருக்கும் சதைப் பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதி யானது. கிரேக்கக்காதல் கடவுள்களான அஃப்ரோடைட் மற்றும் ரோஸ் ஆகியோர் கட லில் இருந்த ஒரு சிப்பியினுள் இணைந்து, அவர்களது மகனா ன ஈராஸை ஈன்றெடுத்தனராம். இதன் காரணமாக இது காமப் பெருக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இதனை உடைத்துப் பார்க் கும்போது, இது பெண்களின் இனப்பெருக்க உறுப்பு போன்றே தோற் றமளிக்கிறது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதி ல் உள்ள அதிகப் படியான ஜிங்க் சத்தால், அதிகப் படியான டெஸ்டோஸ் டிரோன் (testosterone) என் னும் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படு கிறது. ஜிங்க்சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண் மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை . புகழ்பெற்ற எழுத்தாளரும், பெண் பித்தரு மான காஸநோவா என்ப வர் ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம். அதனால் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை உலக மே நன்கு அறியும்.

பூண்டு

இரத்த ஓட்டத்திற்கு உதவும் அல்லிசி ன் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்பு ப் பகுதிக்கு செல்லும் இரத்த ஓட்டம் நன்றாக இருந்தால், அவர்களது ஆணுறுப்பு விரைப் படைவதில் பிரச் சனை ஏதும் இருக்காது. ஆணுறுப்பினை விரைப் படையச் செய்யும் நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வ தில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய் வுகள் தெரிவிக்கின்றன. ஒருவருடைய மன தைக் கவர்வதனால், அவரது வயிற்றினை அடையும் உணவு மூலமாகக் கவரலாம் என் று ஒரு பழமொழி உண்டு. எனவே உங்களது அடுத்த வேளை உணவினை தயாரிக்கும் போது, அதில் பூண்டினைக் கொஞ்சம் அதிக மாக வே சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவகேடோ/வெண்ணெய்ப் பழம் (Avacado)

ஆண், பெண் ஆகிய இருபாலாருக்குமே செக்ஸ் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் இதுவாகும். இப்பழ மானது கவர்ச்சி யாக பெண்மை ததும்பும் வகையாக இருந்தாலும், மரத்தில் தொங் கும் போது இவற்றைப் பார்க்கையி ல், ஆண்களின் விதைப்பைகள் போ ன்று காட்சியளிக்கின்றன. மெக்சி கோவின் மையப்பகுதியில் பதினா ன் காம், பதினைந்தாம், பதினாறாம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின்கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்கு கள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்’ என்றே அழைத்தனர். பீட்டா கரோட்டின், மக்னீ சியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரத ச்சத்து ஆகியவை நிறைந் தது இப்பழம். இவை அனைத் தும் மனித ர்களின் காம உணர்வைத் தூண்ட வல்லவை.

அத்திப்பழம்

அத்திப்பழத்தை நெடுக்குவாட்டில் இரண்டாக வெட்டினால், அது பெண் உறுப்பினைப் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். பழங்கால ம் தொட்டே, அத்திப்பழமானது இனப்பெருக்கத்தோடு தொடர்பு டை யதாகவே இருந்தது. அத்தி ப்பழத்தில், வைட்டமின் ஏ, வை ட்டமின் பி 1, வைட்டமின் பி2, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத் து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொ ட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனை த்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ் டமான பழமாக இருந்ததில் வியப்பேது மில்லை தான்.

அஸ்பாரகஸ் (Asparagus)

அஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெய ர் சதாவேரி (அ) தண்ணீர் விட் டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளை யும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்ட மின் ஏ, வைட்டமின் சி, தையமி ன் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய வை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஆண், பெண் இருவருக்குமே பாலுற வின் போது உச்சகட்டத்தினை அடைய உதவும், ஹிஸ்டமைன் என்னும் ஹார்மோன் உற்பத்தி யாவதை ஃபோலிக் அமிலம் தூண்டுகிறது என்று சொல்லப்படுகி றது. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற் படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரக ஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக் கு மிகவும் நல்லது. மேலும் அஸ் பாரகஸானது, நமது பிறப்புறுப்புப் பகுதியில், இரத்த ஓட்டத்தை அதி கரிக்கச் செய்வதிலும் வல்லது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

சாக்லெட்

ஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டான து எப்போதுமே உணர்வுகளுடனும், கா தலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரொடோ னின் (serotonin) ஆகிய வேதிப்பொருள் கள் சாக்லெட்டிலும் உள்ளன. இவை நமது உணர்ச்சிப் பெருக்கி னையும், ஆற்றல் நிலையையும் கூட்டுகின்றன. இதனால், நாம் சாக்லெட் சாப்பிடும் போது, நமது உணர்ச்சிப் பெருக்கும், ஆற்றல் நிலையும் உயர்ந்து, நமது காம உணர்வு (mood) தூண்டப்படுகிறது. ஃபீனைல் எத்திலமை ன் உடன் அனன்டாமைடு (Anand amide ) என்னும் வேதிப்பொருள் சேர்ந்து, பாலுறவின்போது, உச்ச க்கட்டத்தை அடைவதில் உதவுகி ன்றன.

துளசி

இனிமையான மணமுடைய இந்த மூலிகையானது இத்தாலியில், “நிக்கோலஸ், என்னை முத்தமிடு” என்னும் பொருள் தரும் சொற்க ளால் அழைக்கப்படுகிறது. இது ,செக்ஸ் உணர்வுகளையும், இன விருத்தித் திறனையும் பெ ருக்க உதவுவதாக நம்பப்படுகிறது. மேலும் இதில் மெக்னீசிய ம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக் கள் உள்ளன. இவை அனைத்து மே, இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமி ன்றி இரத்த நாளங்க ளில் இரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக இரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனை த்து வகை தலைவலிகளை யும் குறை க்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.

மிளகாய்

மிளகாயின் காரத்தன்மையினால் உடலினை சூடேற்றி, இது காமப்பெ ருக்கியாகக் கருதப்படுகிறது. குடை மிளகாயிலிருந்து, சிகப்பு மிள காய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என் னும் வேதிப்பொருள் இரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப் பை யும் அதிகரிக்கச் செய்கிறது. உ டல் வெப்பத்தை உயர்த்து கிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற் கூறிய அறிகுறிகள் அனைத்தும் பாலுறவின் போதும் ஏற்படுகின்றன. இதனால் தான், மிளகாயானது ‘காமப்பெருக்கி’ என்று அழைக்கப்படுகிறது. கேப்சைசினானது, உடலில் எண்டோர் ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனைகளை தூண்டி, இதயத் துடி ப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.

குறிப்பு

முக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவ ரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெரு கும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற் றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனை த்தும் இயற்கை தந்த பொருள் கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. இதனால் இவற்றை, தா ராளமாக உண்டு முயற்சிசெ ய்து பார்க்கலாம். ஆனால் அளவு க்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் கொள் ளுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: