தன் மொபைல் போன் வடிவமைப்பில் தான் செய்த புதுமையான ஒன் றை சாம்சங் நிறுவனம்,சென்ற வாரம், சந்தைப்படுத்தியுள்ளது. அதற்கு சாம் சங் காலக்ஸி கோல்டன் (SHVE400) என ப் பெயரிட்டுள்ளது. இந்த வகையான மொபைல் போனுக்கு இரண்டு திரைக ளை அமைத்துள்ளது.
போனுக்கு வெளியே ஒரு திரையும், மேல் மூடியைத் திறந்தால், உள் ளே ஒரு திரையும் தெரியும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இரண் டும் 3.7 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் சூப்பர் AMOLED டிஸ்பிளே கிடைக்கிறது.
எனவே, போனை மூடிவிட்டாலும், மேல் புறமாக உள்ள திரையைப் பயன்பாட்டா ளர் பயன்படுத்தலாம். உட்புறமாக உள்ள, திரை கீ போர்டு டன் இயங்குகிறது. இந்த போனில் 1.7 கிகா ஹெர்ட்ஸ் திறன் கொ ண்ட ப்ராசசர் இயங்குகிறது .ஆண்ட்ராய் ட் 4.2 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ் டம் தரப்படுகிறது. 8 எம்.பி. திறன் கொண்ட பின்புறக் கேமரா எல்.இ.டி. ப்ளாஷ் துணையுடன் செயல்படுகி றது. முன்புறமாக 1.9 மெகா பிக் ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது.
இன்னும் பல சிறப்பு வசதிகளும் தரப்பட்டுள்ளன. இதன் பரிமாண ம் 118 x59.5 x15.8 மிமீ ஆகும். எடை 179 கிராம். எப்.எம். ரேடி யோ, 3.5 மிமீ ஆடி யோ ஜாக், 4ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ். ஆகி யவை இயங்குகின்றன. இதில் தரப்பட்டுள்ள பேட்டரி 1,820 mAh திறன் கொண்டதாகும். சென்ற வாரம் முதல் கொரியாவில் விற்ப னை செய்யப்படும் இந்த போன், விரைவில் அனைத்து நாடுகளிலும் அறி முகப்படுத்தப்படலாம்.