Thursday, December 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தையும் உறிஞ்சி, வீட்டை சுத்த‍ப்படுத்தும் அலங்கார செடிகள்

தற்போது அனைவரும் பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களி ல் வாழ்ந்து வருகிறோம். இதனால் வீட்டைச்சுற்றி அழகானதோட்டம் அமைக்க முடியாமல் போகிறது. ஆகவே பலர் வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய சில செடிகளை வளர்க்கின்றனர். பொதுவாக சாதா ரண செடிகளுக்கு சூரிய வெளிச்ச ம் மற்றும் தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. ஒரு வேளை அத்தகை யவை முறையாக கிடைக்காவிட்டால், செடிகள் வாடி விடும். இப்படி சாதாரண செடிகளுக்கு இவ்வளவு முக்கியத்துவ ம் கொடுக்க வேண்டியுள்ளதே, அப்படியெனில் வீட்டின் உள்ளே சூரிய வெளிச்சம் இல்லாமல்வ ள ரக்கூடியசெடிகளுக்கு எவ்வளவு முக்கியத்துவ ம் கொடுக்க வேண்டுமென்று கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

மேலும் வீட்டின் உள்ளே செடிகளை வளர்த்தால், ஒரு நன்மை உள்ளது. அது என்னவென்றால், வீட் டின் உள்ளே செடிகளை வளர்த்தால், வீட்டில் தூசி கள் இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் இருக்கும் தூசிகள் அனைத்தை யும் செடிகள் உறிஞ்சிவிடும். அதுமட்டு மல்லாமல், இத்தகைய செயலை அனைத்து செடிகளும் முறையாக செய்யும் என்று சொல்ல முடியா து. ஆனால் வீட்டில் தூசிகள் படிவதை தடுக்கும் படியான சில செடிகள் உள்ளன. மேலும் இத் தகைய செடிகள், வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிக ளுக்கு எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படு த்தாதவாறு இருக்கும்.

இப்போது வீட்டில் தூசிகள் படியாமல், வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ளும் சில செடிகளைப் பார்ப்போமா!!!

ஸ்பைடர் பிளாண்ட் (Spider Plant)

வீட்டில் உள்ள மாசுக்களை சுத்தமாக வெளியே ற்றும் செடிகளில் முக் கியமானது ஸ்பைடர் பிளாண்ட் ஆகும். இந்த செடி தூசிகளை மட்டும் போக்குவதோடு, வீட்டிற்கு அழகையும் கொடுக்கு ம்.

ஃபேர்ன்ஸ் (Ferns)

இந்த செடியின் இலைகள் மிகவும் அழகாக ப்ரில் போன்று காணப்படும். அதிலும் பாஸ்ட ன் ஃபேர்ன் செடி, வீட்டில் ஈரப்பதத்தை வெளி யேற்றி, தூசிகளை நீக்கும். மேலும் இது பார்ப் பதற்கு ப்ளாஸ்டிக் இலை போன்று க்யூட்டாக இருக்கும்.

ஐவி (Ivy)

இது ஒருவகையான படர்க்கொடி. இந்த கொடியு ம் வீட்டில் வளர்க்கக்கூடிய உள் அலங்கார செடி களில் மிகவும் பிரபலமானது. அதிலும் ஆஸ் துமா மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள், வீட்டில் இதனை வளர்ப் பது நல்லது

கமுகு மரம் (Areca Palm)

இந்த செடியின் இலைகள் பார்ப்பதற்கு தென் னை மரத்தின் இலைகளைப் போன்று காணப் படும். ஆனால் இந்த செடியை வீட்டின் உள் ளே வளர்த்தால், வீட்டில் நல்ல குளிர்ச்சியான காற்று வீசுவதோடு, தூசிகளும் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும்.

கோல்டன் போதோஸ் (Golden Pothos)

இந்த செடியை டெவில் ஐவி என்றும் சொல்வார்கள். இந்த செடியானது வீட்டில் உள்ள ஃபார்மால்டிஹைடு, பென்சைன் மற்றும் சைலின் போ ன்ற தூசிகளை முற்றிலும் வெளியேற்றி, வீட்டை குளிர்ச்சியுடன் வை த்துக் கொள்ளும்.

கற்றாழை

பெரும்பாலான வீடுகளில், வீட்டின் உள்ளே வளர்க்கப்படும் செடிகளில் கற்றாழையும் ஒன்று. நிறைய பேர் இந்த செடியை ஒரு குழந்தை போன்றும், தெய்வம் போன்றும் நினைத்து பாதுகாப்பு டன் வளர்ப்பார்கள். ஆனால் உண் மையில் இந்த செடியை வீட்டின் உள்ளே வளர்த்தால், வீட்டினுள் இருக்கும் அனைத்து நச்சுக்களும் வெளியேறிவிடும்.

சைனீஸ் எவர்க்ரீன் (Chinese Evergreen)

இந்த செடியானது வீட்டினுள் வரும் காற்றை சுத்தப்படுத்துவதில் சிறந் தது. மேலும் தற்போது நிறைய பேர், இந்த செடியைத் தான் வீட்டில் வள ர்க்கின்றனர்.

ஸ்நேக் பிளாண்ட் (Snake Plant)

உள் அலங்காரச் செடிகளுள் ஸ்நேக் பிளாண்ட் முக்கியமானது. இந்த செடி வீட்டிற்கு அழகை மட்டும் தருவதோடு, வீட்டில் சுத்தமான காற்றி னை தருகிறது.

மார்ஜினட்டா (Marginata)

செடி வளர்க்க விரும்புவோர், இந்த செடியின் அழகை விரும்பாமல் இருக்கமாட்டார்கள். இந்த செடியானது அந்த அளவில் அழகாக இருப்ப தோடு, அசுத்தக் காற்றினை சுத்தப்படுத்தி வீட்டினுள் நுழையவிடுகிறது. மேலும் வீட்டில் இருக்கும் தூசிகளையும் நீக்குகிறது.

பீஸ் லில்லி (Peace lilly)

வீட்டில் அழகான செடி வளர்க்க ஆசைப்பட்டால், பீஸ் லில்லியை வளர் த்து வாருங்கள். இது அழகுடன், வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொ ள்ள உதவும்.

நன்றி தமிழ்போல்டுஸ்கை

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: