Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்னதான் காரணம்?

கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதி ப்பு 68.90 வரை குறைந்து, மத்திய அரசாங்க த்திற்கு மிகப்பெரும் கலக்கத்தை உருவாக் கியது. இன்னும் சில நாட்களில் ரூபாய் மதிப் பு 70-ஆக குறையும் என எல்லோரும் நடுங்கி ய வேளையில், ரூபாய் மதிப்பு கொஞ்சம் உயர்ந்திருப்பது சற்று நிம்மதி அளிக்கும் லே ட்டஸ்ட் தகவல். இந்திய ரூபாய் மதிப்பு மட்டு மல்ல, உலக அளவில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவை சந்தித்து ள்ளன. இதில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது. தென் ஆப் பிரிக்காவின் நாணய மதிப்பு நடப் பாண்டில் 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருக் கிறது. இரண்டாவது இடத்தில் 20.7 சதவிகிதம் வீழ்ச்சியு டன் இந்தியா உள்ளது. பிரேசில் 17.6 சதவிகிதம் குறைந்து மூன்றா வது இடத்தில் இருக்கிறது. ஆனா ல், சீனா மட்டும் 2 சதவிகிதம் முன் னேற்றத் துடன் ஏறுமுகத்தில் இரு ப்பது ஆச்சர் யமான விஷயம்தான்.
 
இந்திய ரூபாய் மதிப்பு ஏன் இந்த அளவுக்கு சரிந்தது? அதற்கு என்ன தான் காரணம்?
 
”ரூபாய் மதிப்பு வரலாறு காணா த அளவுக்கு சரிந்ததற்கு பல காரணங்கள். அதில் முக்கிய மானது, அமெரிக்கப் பொருளா தாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதால், இந்தியாவில் முதலீடாகி இருந்த அமெரிக்க டாலர் மீண்டும் சொந் த நாட்டுக்கே சென்றது. இதனால் டாலருக்கான தேவை அதிகரித்து, அதன் மதிப்பு உயர்ந்தது.
 
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 4 பில்லியன் அமெ ரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்ட த்தட்ட ரூ.24,000 கோடி!) முதலீடு இந்தி யாவைவிட்டு வெளியேறி இருக்கிறது. இதிலும் குறிப்பாக, கடந்த புதன், வியா ழக்கிழமைகளில் மட்டும் 400 மில்லிய ன் டாலர் (ரூ.2,400 கோடி) வெளியேறி இருக்கிறது. ரூபாயின் மதிப்பு சரி வினால் இந்திய பங்குச் சந்தையில் கிட்டத்தட்ட 11 லட்சம் கோ டி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தங்கம், கச்சா எண்ணெய் போன்ற வை அதிக அளவில் வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்ததன் கார ணமாகவும் டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. இந் தியாவின் ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி மதிப்பு அதிகமாக இருப் பதினால் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 80 நாடுக ளுடன் இந்தியாவுக்கு வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது. இதில் முத ல் பத்து இடத்தில் சீனா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ளன.
 
ரூபாய் மதிப்பு குறைந்து வருவதற்கு நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதி கரிப்புதான் முக்கிய காரணம். இந்த பற்றாக்குறை அதிகரிக்க, அதிகளவி ல் தங்கம் இறக்குமதி செய்யப்படுவ தே என்று நினைத்த மத்திய அரசு, தங்கம் இறக்குமதி செய்ய பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, தங்க இறக்குமதி வரியை நடப்பு ஆண்டில் 2-லிருந்து 10 சதவிகிதமாக அதிகரித்தது. தங்க நாணய விற்பனைக்கும் தடை விதித்த து. அப்படியும் தங்க விற்பனைக் குறை யவில்லை.  
 
இந்த வருடம் 18 மின் திட்டங்களைத் தொடங்க ரூ.83,772 கோடி அனுமதி அளித்து மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி யுள்ளது. கிட்டத்தட்ட 1,83,000 கோடி மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு மத்திய முதலீட்டு ஆணையம் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. நாட்டின் 9 உள்கட்டமை ப்புத் திட்டங்களும் இதில் அடங்கும். இந்த 9 திட்டங்களுக்கான மொத்த முதலீடு ரூ.92,514 கோடியாகும் என்று கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி செய்தியாளர் களிடம் சொன்னார் நிதி அமைச்சர் ப.சிதம்பரம். புதிய முதலீடுகள் வருவதன் மூலம் இனி ரூபாய் மதிப்பு வலுவடையும்.
 
மேலும், இந்திய பொருளாதாரத்தை சரிசெய்ய, வரும் நாடாளுமன் ற கூட்டத்தொடருக்குப்பின் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்த மத்திய அரசு யோசித்து வருவதாகத் தெரிகிறது. ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை நோக்கிப் போவதால் வேறு வழி யின்றி அரசு இந்த முடிவுக்கு வந் துள்ளது. சமையல் கேஸ் விலை யையும் இனி மாதந்தோறும் சிலி ண்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தவும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிற து.
 
இது மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் இனி வெளிமார்க்கெட்டில் டாலர் வாங்கத் தேவையில்லை என்று சொல்லி இருக்கிறது மத்திய அரசாங்கம். குறிப்பிட்ட சில அரசு வங் கிகள் மூலம் டாலர் வாங்குவதால்  சந்தையில் டாலருக்கான தே வை அதிகரிப்பதை தடுக்க முயற்சி த்திருக்கிறது மத்திய அரசாங்க ம்.
 
தவிர, மக்களிடம் இருக்கும் தங்க த்தை மீண்டும் வங்கிகளே வாங்க முடிவு செய்திருப்பதால் இனி தங்க ம் இறக்குமதி ஆவது குறையும் என எதிர்பார்க்கலாம். மேலும், எம்.சி. எக்ஸ். கமாடிட்டி சந்தையில் தங்க த்திற்கான மார்ஜின் 5 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனாலும் தங்கம் அதிகளவில் டிரேட் ஆவது குறையும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
 
”கடந்த வாரம் ரூபாயின் மதிப்பு 68.90 ஆக சரிந்தாலும், இனி அந்த அளவுக்கு குறைவது கடினம். மத்திய அரசு ரூபாயின் மதிப்பை உயர்த்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, தங்கம், ஆயி ல் இறக்குமதி தவிர எலெக்ட்ரா னிக் பொருட்களின் இறக்குமதி யும் அதிகமாக இருப்பதால், அந்த இறக்குமதியைக் குறைக்க, எலெ க்ட்ரானிக் பொருட்க ளை உள்நாட் டிலேயே உற்பத்தி செய்ய இருப்ப தாகவும் கூறியுள் ளது.
ரூபாயின் மதிப்பு 66-க்கு மேல் இருக்கும் நிலையில், அடுத்த சப் போர்ட் லெவல் 61 ரூபாய்.  ரெசிஸ்டன்ஸ் லெவல் 68 ரூபாய்”
நன்றி – விகடன்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: