Monday, November 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நீங்கள் இதை அறிந்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும்

அழகாக இருக்கவேண்டுமென்று சருமப்பராமரிப்பிற்காகவும், அழ கு நிலையத்திற்கும் ஏராளமான பணத்தை செலவு செய்த பிறகும், இன்னும் இளமைத் தோற்றத்தை திரும்ப அளிக்கும் இரகசிய த்தை தேடிக் கொண்டிருக்கிறீர்களா?

அதற்காக இதுவரை கடைப்பிடித்துக் கொ ண்டிருக்கும் சில பழக்க வழக்கங்கள் உங்க ளுக்கு மிகவும் நன்மை பயப்பதாகத் தோன் றினாலும், உங்களது சரும எழிலைப் பாழ்ப டுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை  நீங் கள் (இதை) அறிந்தால், உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்குமல்லவா?

ஆகவே, நீங்கள் உங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 13 செயல்களை உங்கள் கவனத்திற்கு அளிக்கிறோம். அதைப் படித்து கவனமாக இருந்து, அழகாக‌  பாது காத் துக் கொள்ளுங்கள்.

ஆம், நீங்கள் என்ன சாப்பிடுகிறீர் களோ, அது உங்கள் சருமத்தில் பிரதி பலிக்கிறது. சருமத்தில் எண் ணெய் வழியாமல், அதிகப் படியான எண்ணெய் பசையின்றி இருக் க வேண்டு மென்று விரும்பினால், எண்ணெய் அதிகமுள்ள உணவு வகைகளைத்தவிர்க்கவும். மேலும் இளமைத் தோற்றமுடைய சரு மத்தைப் பெற வேண்டு மானால், ஆரோக்கியமான சமச்சீரான உண வுகளை உண்ண வேண்டும்.

சருமத்தை ப்ளீச் செய்யும் போது கவனமாக இருங்கள்

வீட்டில் உங்கள் சருமத்தை ப்ளீச் செய்து கொள் ள நேரம் இல்லை என்றால், நல்லதொரு அழகு நிலையத்திற்கு சென்று ப்ளீச் செய்து கொள்ள லாம். அது தவறில்லை. ஆனால் அவர்கள் ப்ளீச் செய்வதற்கு என்ன பொருளைப் பயன்படுத்துகி றார்கள் என்பதில் கவனமாக இருங்கள். அழகு நிலையத்தில் இருப்பவர்கள் உங்க ளிடம் வகை வகையான பிராண்டுகளைக் காட்டி எதைப் பயன் படுத்தலாம் என் று உங்களிடம் கேட்பார்கள். ஆனால் அவர்கள் மொத்தமாக வாங்கி வைத்துள்ள பிராண் டையே பயன்படுத்தி விடு வார்கள். எனவே அங்கு மிகவும் ஜாக்கிரதை யாக இருங்கள்.

மென்மையான டவல் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருங்கள்

உங்களுடைய மென்மையான சருமத்தை மெ ன்மையான டவலைக் கொண்டே ஒற்றி எடுங் கள். கடினமான டவல்களைத் தவிர்த்து விடு ங்கள். மென்மையான டிஷ்யூ பேப்பர் அல்லது ஸ்கின் வைப்கொண்டு சருமத்தைத் துடைத் தாலும், அவற்றை மென்மையாகக் கையாளு ங்கள். குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் செல்ல நேர்ந்தால், உங் களுடன் மென் மையான பருத்தி டவல் ஒன்றை எப் போதும் உடன் கொண்டு சென்று பயன் படுத்துங்கள்.

சூரியன் இல்லாத நாட்களில்கூட சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்துங்கள்

வெயிலில்லாத மேகமூட்டமான நாள் தானே என்று சன் ஸ்க்ரீனை ப் பயன்படுத்தாமல் இருந்து விடாதீ ர்கள். பகல் நேரம் முழுவதும் காற்று மண்டலத்தில் இருக்கும் புற ஊதாக்கதிர்களை இந்த சன் ஸ்க்ரீன் லோசன் தடுத்து, சருமத்தைப் பாதுகாக்கும். எனவே மேக மண் டலத்தில் சூரியன் மறைந்து இருந்தா லும் கூட, இந்த அபாய கரமான புற ஊதாக்கதிர்கள் சருமத்தைத் தாக்கு ம் என்பதை மறவாதீர்கள்.

வைட்டமின் டி-யை சருமத்திற்குக் கொடுங்கள்

நமது உடலுக்கும் எலும்புகளின் வலிமைக் கும் அவசியமான வைட்டமின் டி என்னும் சத்தானது சூரிய ஒளியிலிருந்து தான் தயாரி க்கப் படுகிறது. எனவே காலை நேரங்களில் அல்லது மாலை நேரங்களில், உடல் முழுது ம் சூரிய ஒளிபடும் வண்ணம் வாக்கிங் செல் லுங்கள். கொதிக்கும் சூரியன் குளிர்ந்திருக் கும் இந்த நேரங்கள் சருமத்தையும் அழகுபடு த்தும்.

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடுங்கள்

புகைப்பிடித்தல் உடனடியாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது போ லத் தோன்றினாலும், அதன் பாதிப்பை அது உண்டாக்கிக் கொண்டே யிருக்கும். தொடக்க நிலையில் எந்த வெளிப்புற அறிகுறிகளும் தெரியாது. ஆனால் அது உள்புற உறுப்புகளை பாதி க்கத் தொடங்கியிருக்கும். அதே நேரத்தி ல் உங்கள் சருமத்திலும் தனது வேலை யைக் காட்ட ஆரம்பித்துவிடும். புகைப் பிடிப்பவர்களது சருமம் சுருங்கத் தொட ங்கி விரைவிலேயே முதுமையான தோ ற்றத்தை உண் டாக்கிவிடும். கண்கள் வீங்கும். சருமநோய்கள் உண்டாகி இறு தியில் சருமப்புற்று நோய்கூட உண்டாக லாம்.

தூங்கும் முன் மேக் அப்புகளைக் கலைத்துவிடுங்கள்

எப்போதும் சருமம் எளிதாக சுவாசிக் கட்டும். ஆனால் முகத்திலோ சரும த்திலோ மேக் அப் க்ரீம்களுடன் உற ங்கப்போனால், சருமத்திலுள்ள நுண் ணிய துவாரங்கள் அடைபட்டு சரும ம் சுவாசிக்க முடியாமல் போகும். இதன் காரணமாக சருமம் வறண் டு போகும். இதனால் சருமம் தனது மேற்பரப்பை ஈரப்படுத்திக் கொ ள்ள எண்ணெய்ப் பசையைச் சுரக் கத் தொடங்கிவிடும். இதனால் காலையில் எழுந்ததும் முகம் எண்ணெய்ப் பிசுக்குடன் தோன்று ம். எனவே உறங்கப்போகும் முன் மேக் அப்புகளைக் கலைத்து விடு ங்கள்.

மேக் அப்புகளை நீக்கும் பேடுக ளைப் பயன்படுத்துங்கள்

நமது முகத்திலுள்ள மேக் அப் க்ரீம்களை நீக்குவதற்கு தனி லோஷ ன்கள் மற்றும் தண்ணீரில் நனைக்கப் பட்ட பஞ்சுகளைப் பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது மேக் அப்புகளை நீக்கும் பேடுகள் (makeup removal pads) வந்துவிட்டன. இவற்றைப் பயன் படுத்தினால், மாயம் போல க்ரீம் கள் மறைந்துவிடும். முக் கியமாக இவற்றைக் கொண்டு முகத் திலுள்ள க்ரீம்களை நீக்கினாலும், தண்ணீர் கொண்டு முகத்தை நன்றாகக் கழுவ மறந்துவிடாதீர்கள்.

ஷேவிங் செய்யும் போது கவனம் தேவை

ஷேவிங் ரேசரைப் பயன்படுத்தி ஷேவ் செய்யும் போது, ஷேவிங் க்ரீம் அல்லது ஜெல்களைப் பயன்படுத்துங்கள். முடி இருக்கும் திசை நோக்கியே ரேசரை இழு ங்கள். முடிக்கு எதி திசையில் இழுக்கக் கூடாது. சரியாகச் செய்யாவிட்டால், ஷே விங் செய்தல் ஒரு மிகப்பெரிய தொந்தர வாகிவிடும்.

இலவச மேக் அப் அழைப்புகளுக்கு மய ங்கி விடாதீர்கள்

நகரமெங்கும் அழகு நிலையங்கள் அமை த்து இலவச ட்ரையல் என்று உங்களை ஒரு முறையாவது மேக் அப் செய்து கொள்ள அழைக்கும் அழகு நிலையங்களுக்கு செல் லும் முன் ஒரு நிமிடம் யோசியுங்கள். அழகு சாதனப் பொருட்களை விற்பதற்கான மார்க் கெட்டிங் பிரதிநிதிகள், தமது விற்பனை இலக்கை அடைவதற்கு செய்யும் நுணுக்கங் களில் ஒன்று தான் இலவச ட்ரையல். தனது இனிமையான பேச்சுத்திறன் மூலம் பொரு ட்களை உங்களது தலையில் கட்டப் பார்க்கு ம் தந்திரம் தான் அது. அதற்கு விலை உங்களது சருமத்தின் எழில். சரியாக சோதிக்கப்படாத, புதிய அழகு சாதனப் பொருட்களை நம்பு தல் மிகவும் ஆபத்தானது.

சருமத்திற்குத் தகுந்த துணிகளை அணியுங் கள்

மிகவும் விலை உயர்ந்த துணி வகையாக இருந்தாலும், உங்களுக்கு வசதியாக உணர வில்லை யென்றால், அதனைக் கட்டாயப்படு த்தி அணிய வேண்டும் என்று எண்ணாதீர்க ள். சருமத்திற்கு எது வசதியாக உணர்கிறீர் ளோ அதனை மட்டும் அணிந்தால் போதுமா னது. அனைத்துத் துணி வகைகளும் சருமத் திற்கு உகந்தவை அல்ல. நீங்கள் புதிதாக ஆடைகளை வாங்கியிரு ந்தால், அணிவதற்கு முன் ஒருமுறை துவைத்துவிட்டு பின் அணிந் து கொள்வது நல்லது.

திருமணத்தின் போது மணமக்கள் அலங்கா ரம் செய்து கொள்வது வரவேற்கப்பட வேண் டியது தான். அது இருவருக்குமே அழகான தோற்றத்தை அளிக்கும். ஆனால் கடைசி நேரத்தில் முடிவு செய்து அவசர அவசரமாக ஒரு அலங்கார நிபுணரைத் தேடி அலங்கா ரம் செய்து கொள்வதைத் தவிர்க்கவும். ஒரு மணமக்களின் அனுபவம் அடுத்த மணமக்க ளுக்கு பாடமாக இருக்கும். ஒருசில அழகு சாதனப் பொருட்கள் உடலுக்கும், சருமத்திற் கும் ஒப்புக்கொள்ளாமல் அலர்ஜியை ஏற்படு த்தலாம். சில பொருட்கள் முகத்தையே பாழ்படு த்தலாம். எனவே கடைசி நிமிடத்தில் அலங்காரம் செய்து கொள்வ தையும், அலங்கா ரத்தில் கூடுதலாக ஏதாவது சேர்ப் பதையும் தவிர் க்கவும்.

ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப்

புதியதாக முகத்திற்கு ஃபேஸ் பேக் மற்றும் ஸ்கரப் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தியிருந் தால், உடனடியாக வெயிலில் செல்ல வேண்டாம். வேண்டுமெனில், சருமத்திற்கு ஃபேஸ் பேக் மற் றும் ஸ்கரப் போன்றவற்றை செய்த பின்னர், சருமத்தின் மீது ஏதேனு ம் க்ரீம் அல்லது லோஷனைத் தடவி, பின் வெளியே செல்வது சிற ந்தது.

ஆகவே மென்மையான சருமத் தைப் பாதிக்கக்கூடிய செயல்க ளிலிருந்து தள்ளியே இருங்கள். மேலே குறிப்பிட்ட எளிமையான செயல்களைப் பின்பற்றி, சருமத் தின் மென்மையைப் பேணுங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: