Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அடர்த்தியான, அழகான, கவர்ச்சியான, வில்லைப்போன்ற‌ வளைந்த, புருவத்திற்கு . .

புருவம் அடர்த்தியாக வளர வேண்டுமா?

முகத்திற்கு அழகைத் தருவது கண்கள் என்றால், அந்த கண்களுக்கு அழகைத் தருவது புருவங்கள். அத் தகைய புருவங்கள் சிலருக்கு மிகவு ம் குறைவாக இருக்கும். சொல்லப் போனால் சிலருக்கு புருவம் இருக்கும் இடமே தெரியாது. அதனால் அவர்கள் வெளியே செல்லும் போது புருவங்களுக்கு பென்சிலை வைத்து வரைந்து கொண்டு செல்லும் நிலையில் உள்ளனர். பெண்களுக்கு கண்கள் அழகாக  இருந்தால், அவர்கள் மிகவும் அழகாக தெரிவார்கள். ஆனால் அந்த கண்களை நன்கு எடு த்துக் காட்டுவது புருவங்கள் தான். கண்கள் எப்படி பேசுமோ, அப்படி தான் புருவங்களும் நன்கு பேசும்.

அதிலும் ஒரு பெண்ணை வர்ணிக்க வேண்டு மென்றால் முதலில் கண்கள், புருவங்கள் என்று தான் ஆரம் பிப்பார்கள் கவிஞர்கள். அத்தகைய புருவங்கள் நன்கு இல்லையென்றால், அழகான பெண் கூட அசிங்கமாக, ஏதோ ஒரு குறை இருப்பது போல் தெரிவாள். மேலும் இந்த புருவங்கள் சரியாக வளராமல் இருப்ப தற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில தான் உடலில் சரியான ஹார் மோன் சுரப்பி சுரக்காமல் இருப்பது, போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மற்றும் அள வுக்கு அதிகமாக அழகு நிலையங்களுக்குச் சென்று புருவத்தை வடிவமைத்தல் காரண மாக, அந்த இடத்தில் முடி வளர்ச்சி தடைப டுகிறது.

ஆகவே அத்தகைய புருவத்தில் உள்ள வளர் ச்சியை இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி வளர்ப்பது எ ன்று பார்ப் போமா!!!

ஆமணக்கெண்ணெய்

ஆமணக்கெண்ணெயில் மற்ற எண்ணெயை விட அதிகமான அளவு மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதிலும் கூந் தல் வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்த எண்ணெய். இதற்கு இந்த எண் ணெயை புருவத்தில் தடவி, 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அரை மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில், கிளின்சரைப் பயன்படுத்தி கழுவிட வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால், புருவம் நன்கு வளரும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை

புருவம் குறைவாக இருப்பவர்கள், எலுமி ச்சையின் தோலை தேங்காய் எண்ணெயி ல் போட்டு, ஊற வைத்து, பின் அந்த எண் ணெயை ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுத்து, மறுநாள் காலையில் கழுவிட வே ண்டும். சிலருக்கு எலுமிச் சையினால் எரிச் சல் ஏற்பட்டால், அதனை காலையில் சிறி து நேரம் செய்தால் போதுமானது. முக்கிய மாக இதனை செய்யும் 2 மணி நேரத் திற்கு முன் வெயிலானது சருமத்தில் படக்கூடா து.

கற்றாழை

புருவம் மிகவும் மெல்லியதாக இருந்தால், அப்போது கற்றாழையின் ஜெல்லை தினமு ம் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு படுக்க வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், புருவத்தில் கூந்தல் வளர்ச்சி அதிகமாக இரு க்கும். மேலும் சருமத்தில் ஏதேனும் புண் இரு ந்தாலும் சரியாகிவிடும்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர் கூந்தல் வளர்ச் சியை அதிகரிப்பதோடு, வேகமாக வளரச் செய் யும். ஆகவே வெங்காயச் சாற்றை காட்டனில் நனைத்து தடவிக் கொள்ள வேண்டும். முக்கி யமாக இதனை தடவியதும் கழுவிடக் கூடாது. கழுவாமல் இருந்தால் தான், இதன் முழு பயனை அடைய முடியும்.

வெந்தயம்

வெந்தயத்தை நன்கு அரைத்து, அதனை தினமும் இரவில் படுக்கும் முன் தடவிக் கொண்டு, மறுநாள் காலையில் எழுந்து கழுவிட வேண்டு ம். வேண்டுமென்றால் இதனுடன் சிறிது பாதாம் எண்ணெயையும் சேர்த்து செய் யலாம். இதனால் புருவம் நன்கு எண் ணெய் பசையோடு, சற்று அடர்த்தியாக இருப்பது போல் தோன்றும்.

பால் பொருட்கள்

பால் பொருட்களில் அதிகமான அளவில் புரோட்டீன் மற்றும் வைட்டமி ன்கள் இருக்கின்றன. ஆகவே இரவில் தூங்குவ தற்கு முன்பு, பாலை புரு வத்தில் தடவி படுக்க வேண்டும். இதனால் பாலில் உள்ள இயற்கைப் பொருள் முடியி ன் வேர்களுக்கு ஒரு நல்ல ஈரப்பசையைத் தந்து, கூந் தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

உங்கள் புருவங்களை அழகாக சீரமைக்க வேண்டுமா? சில ஆலோச னைகள்

புருவங்கள் முகத்தின் சிறந்த அம்சங்க ளில் ஒன்று. புருவங்கள் அழகாக இருந்தா ல் உங்கள் கண்களில் அழகு கூடும், முக மே புது பொலிவு பெறும். ஆனால் புருவ ங்களை சரியாக வடிவமைப்பதே பலரு க்கு பெரும் பிரச்சனையாக உள்ளது!புரு வங்களை உங்கள் முகத்துக்கு ஏற்ற வித த்தில் வடிவமைக்க சில குறிப்புகள்:

தேவையான பொருட்கள்:

டுவீஜர் (புருவத்தில் உள்ள தேவை இல்லாத முடிகளை அகற்ற)

புருவத்திற்கான பிரஷ் (பல் தேய்க்கும் பிரஷ் கூட உபயோகிக்கலாம்)

ஆஸ்ட்ரின்ஜென்ட் (சருமத்தை மிருது வாக்கி, வலியை குறைக்க)

கண்ணாடி (அவசியம் தேவை)

சிறிய கத்தரிக்கோல் (புருவத்தின் முடியை சரி செய்ய)

ஐப்ரோ பென்சில்

முதலில் புருவத்தை மேல் நோக்கி பிரஷ் செய்து விடவும். புருவத்தின் வளைவை விட நீளமாக உள்ள முடிகளை கத்தரியால் வெட்டி விடவும். புருவங்கள் கண்களின் ஒரு முனை யில் ஆரம்பித்து மறு முனையி ல் முடிய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.நீங்கள் எந்த வடிவத்தில் உங்கள் புருவத்தை வடிவ மைக்க விரும்புகிறீர்கள் என்பதை முடிவு செய் து கொள்ளுங்கள். ஆஸ்ட்ரிங்ஜென்ட்டை புருவ த்தின் மேல் தடவவும். புருவத்தின் மேல் பக்கத்திலிருந்து முடியை எடுப்பதை தவிர்க்க வேண்டும். புருவத்தின் கீழ்உள்ள முடிகளை ஒவ் வொன்றாக டுவீஜரால் எடுக்கவும். ஒரு பக்கம் புருவத்தை சரி செய்த பிறகு மறுபக்கமும் அதே வடிவத்தில் அமைய வேண்டும் என்ப தை கவனத்தில் வைக்கவும். அடிக்கடி கண் ணாடியில் சரி பார்க்கவும்.ஐபுரோ பென்சிலால் புருவத்தில் உள்ள காலியான இடங்களை நிறப் பவும். கவனம்: மிக மெல்லியதாக புருவத்தை அமைப்பதை தவிர்க்கவும்.

வில்லைப்போன்ற‌ வளைந்த புருவம் வேண்டு மா?

‘வில்லென வளைந்த புருவம்’ என்று கவிஞர் கள் பெண்களின் புருவத் தை வில்லுக்கு ஒப்பி டுவார்கள். புருவமானது பெண்களின் முகத்தை யே மாற்றி அழகாக்கும் தன்மை கொண்டது. சாதாரணமான இருக்கும் பெண்கள் கூட பியூட்டி பார்லர் சென்று புருவத்தை திருத்திய உடன் 50 சதவிகிதம் அழகாகி விடுகிறார். அந்த அளவி ற்கு முகத்தின் வடிவமை ப்பையே மாற்றும் தன்மை புருவத்திற்கு உண்டு.

கண்களை பெரிதாக்கும்

சில பெண்கள் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் அவர்களது கண்களைப் பார்த்தால் இடுங்கிய மாதிரி இருக்கும். இப்படி இடுங்கிய மாதிரி இருப்பதற்கு புருவங்கள் திக்காக இருப் பதும் ஒரு காரணம் தான். புருவங்கள் “திக்’காக இருப்பவர்களுக்கு கண்கள் சிறியதாகத் தெரியு மே தவிர உண்மையில் அவர்களின் கண்கள் சரியான அளவில்தான் இருக்கும். எனவே புருவத்தை மெல்லியதாக திரடிங் செய்துகொண்டால் கண்களின் அழகு எடுப்பாகத்தெரியும். அதோடு லைட் கலரில் ஐ ஷடோ வும் மஸ்கா ராவும் பயன்படுத்தவும். கண்கள் இன்னும் அழகாகத் தெரி யும்.

அழகு புருவங்கள்

சிலருக்கு புருவங்கள் இருப்பதே தெரி யாது. அத்தோடு புருவ முடிகள் மிகவு ம் குறைவாக இருக்கும். இவர்கள் புரு வத்தை திரடிங் செய்தால் புருவங்கள் அழகாகத் தெரியும் ஆனால் புருவத்தை மிகவும் மெல்லிய தாக ஷேப் செய்யாமல் சற்று “திக்’காக வைத்துக் கொள்ளலாம். புருவத் தை திரடிங் செய்து கொள்ளப் போகும் போது “ஐபுரோ’ பென் சிலால் வரைந்து கொண்டு போவது நல்லது. ஏனெ ன்றால் நாம் விரும்பியபடி புருவத்தை ஷேப் செய்து கொள்ளலாம்.

பெரிய நெற்றியா கவலை வேண்டாம்

நெற்றி பெரியதாக இருக்கிறதே. நெற்றியின் அளவைக் குறைத்து காட்டுவதற்கு என்ன செய் யலாம் என்று சில பெண்கள் எப்போது கவலை யுடன் இருப்பார்கள். இவர்கள் தங்கள் நெற்றியி ன் அளவைக் குறைத்துக் காட்டுவதற்கு புருவத்தை அதற்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள முடியும். தவிர புருவத்தை ஷேப் செய்வதால் மட்டும் நெற்றியை சிறியதாக காட்டமுடியாது.

நெற்றியை மறைக்கும் படி முடியை முன்புறம் விட்டு ஹேர் ஸ்டைல் பண்ணலாம் அல்லது முடியை முன்புறமாக விட்டு பிரிஞ்ச் கட் செய் து கொள்ளலாம். பின்னர் புருவத்தை மேலே தூக்கலாக தெரியும்படி ஷேப் செய்து கொண் டால் நெற்றியின் அகலம் தெரியாது. பார்க்கவு ம் மிகவும் அழகாகத் தெரியும்.

நிரந்தர புருவம்

சிலருக்கு புருவத்தில் முடியே இருக்காது. புரு வ முடி உதிர்ந்து விட்டதே அல்லது எனக்கு புருவத்தில் முடி இல்லை யே எனக் கவலையே பட வேண்டாம். விளக் கெண்ணெயை லேசாகச் சூ டு செய்து புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் முடிகள் நன்றாக வள ரும். ஐபுரோ ஒயில் வாங் கி வந்து அதை புருவத்தில் தடவி மசாஜ் செய்தால் விரைவில் முடி முளைத்து புருவங்கள் அழகாகும்.

புருவமே இல்லாதவர்கள் நிர ந்தரமாக புருவத்தை அமைத்துக் கொள்ள ஐ புரோ டாட்டூ முறையைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஐபுரோ டாட்டூ என்பது புருவங்கள் உள்ள இடத்தில் டாட்டூ பிக்மென்டேஷனை நிரப்பி நிரந்தர மாக புருவங்களை அமைக்கும் மேக்கப் பாகும். இதனால் முகத்திற்கு அழகு கிடைப்பதுடன் உங்களுடைய மனக்குறையும் அகன்று விடும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: