Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இல்ல‍ற வாழ்க்கையை தொடங்கப்போகும் புதுமணத் தம்பதியினரே! உங்களுக்கான‌ பதிவு!

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளி வுபடுத்திக் கொண்டால் பின் னாளில் சிக்கல்கள் எழ வாய்ப் பில்லை என்கின்றனர் நிபுணர் கள்.

காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்க ளில் அதிக அளவிலான பிரச்சி னைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல் தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இரு முறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என் கின்றனர் நிபுண ர்கள்.

திருமணம் முடிந்து சில மாதங்களி லேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழ ந்தை என்பதுதான். குழந்தை வளர் ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசம மாகப் பொறுப்பேற்க வேண்டும்.

பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொ ள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள்.

கணவனோ, மனைவியோ உடனே பெற்றோ ர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள் ளிப்போட நினைக்கலாம். எனவே எல்லாவ ற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோ சித்து இறுதி முடிவெடுங்கள்.

கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒரு வர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ள வும் விரும்பக் கூடும்.

புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்ன ரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்தி க் கொள்வது நல்லது. இல்லையெனில் அது வே சிக்கலை ஏற் படுத்திவிடும்.

பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கண வன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற் படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கி யத்துவம் கொடுங்கள். பொறு மையாக விவாதியுங்கள்.

வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங் கள் கூட்டுக்கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர் களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவ ரும் முன்பே பேசி முடி வுக்கு வந்து விடுவது நல்லது.

பணத்தை எப்படிச் செலவழிக்க வேண் டும் என்பதில் கணவன்-மனைவி க்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திரும ணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவா கப் பேசி விடுங்கள்.

வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிட லாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண் டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியா கப் பேசி விடுங்கள்.

கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட் டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந் தால் போதும் என்ற எண்ணம் கொண் டவராக நீங்கள் இருக்கலா ம்.

ஆனால் உங்களின் வாழ்க்கைத் து ணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்க ளால் சரியாக ஒத்துப்போக முடியு மா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டு ம்.

மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இரு ந்து அவரவர்களின் நம்பிக்கை யை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோ சமாகலாம்.

எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க் கை சுமூகமாகப்போக உங்கள்துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம் பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத் துவதும் முக்கி யம்.

நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிற வராக இருந்தால் அங்கே பிரச்சினை எழ லாம்.

நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்துவரும் என்றுதெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவ து நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: