Tuesday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வியர்வை நாற்ற‍த்திலிருந்து விரைவாக விடுபட . ..

நம் உடலில் சுரக்கும் வியர்வையில் புரதம் உண்டு. அத்துடன் பாக்டீ ரியா சேரும்போது அந்தப் புரதங்கள் உடைக்கப்பட்டு Propionic என்ற அமிலமா க மாறுகிறது. உடல் நாற்றத்துக்கு அது தான் காரணம். அதீத மான வியர்வை மற்றும் அதன் காரணமாக உண்டாகும் நாற்றத்துக்கு Acid bromidrosis மற்றும் osmidrosis என்று பெயர்.

பெண்களுக்கு 14 – 16 வயதிலும், ஆண்க ளுக்கு 15 – 17 வயதிலும் இந்த வியர்வை நாற்றப் பிரச்சனை தீவிரமாக இருக்கும். நமது உடலில் கிட்டத்தட்ட 30 – 40 லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ள ன. ‘எக்ரைன்’ (eccrine) என்கிற வியர்வைச் சுரப்பிகள் நம் உடலில் எல்லா இடங்களி லும் சருமத்தின் அடியில் இருக்கும்.

வெளிப்புறத் தட்பவெப்பநிலை அதிக ரிக்கும் போது, அதிலிருந்து உட லைக் காப்பாற்றிக் குளிர்ச்சியாக்கும் பொருட் டு இந்த சுரப்பிகள் தூண்ட ப்படுவதால் தான் வியர்வை வெளியே வருகிறது. அதனால்தான் நமக்கு முகத்திலோ, கைகளிலோ வியர்க்கும்போது, அது அதிக வாசனையை ஏற்படுத்துவதில் லை.

அப்போக்ரைன் (apocrine) என்கிற சுரப்பிகள் அக்குள், காதுகளின் பின் புறம், அந்தரங்க உறுப்புகளில் அதிகம் காணப்படும். இவை வியர்வை யை வெ ளிப்படுத்தும்போது, அத்துடன் எண்ணெய் பசையான திரவமும் சேர்ந்து வெளி யேறுவதால், அந்த இடத்தில் எல்லாம் வியர்க்கும் போது வாசனை அதிகமாக இருக்கிறது.

அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாக வோ இல்லாத வெதுவெதுப்பான தண் ணீரில், தினம் இருவேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும். நிறமும் மணமும் சேர்க்கப்பட்ட ‘பாத் சால்ட்’ கிடைக்கிறது. ஒரு பக்கெட் தண்ணீரில் 1 டீஸ்பூன் பாத் சால்ட் கலந்து குளிக்கலாம். அது முடியாதவர்கள், கொஞ்சம் வேப்பிலையைக் கசக்கிச் சேர்த்து, தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.

டீ ட்ரீ அல்லது லேவண்டர் – இந்த இர ண்டில் ஏதேனும் ஒரு அரோமா ஆயி லில் சில துளிகளை பஞ்சில் நனைத்து, வியர்வை அதிகம் சுரக்கும் பகுதிகளில் தேய்த்துக் கொள்ளலாம். தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உட லைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோ கிக்க வேண்டும்.

கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரி ச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வே ண்டாம். வியர்வையையே நிறுத்தக் கூடிய ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் என்ற பொருளும் மார்க்கெ ட்டில் கிடைக்கிறது. அலுமினியம் சால்ட் கலந்திருப்பதால் அதை தினசரி உபயோகிப்பது ஆரோக்கி யத்துக்கு நல்லதல்ல.

முக்கியமான விசேஷம், உடையில் வியர்வைத் தடம் தெரிய வேண் டாம் என நினைக்கிற போது மட்டும் ஆன்ட்டி பெர்ஸ்பிரன்ட் உபயோகிக் கலாம். அதிக வியர்வை இருந்தால் ஆன்ட்டி பாக்டீரியல் சோப் உபயோகிக் கலாம். குளித்து முடித்ததும், ஈரத்தை நன்கு துடைத்துவிட்டு, ஆன்ட்டி பாக்டீ ரியல் டஸ்ட்டிங் பவுடர் உபயோகிக்க லாம்.

உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரி க்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதி லுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும். உணவு ப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்து க்குக் காரணமாகலாம்.

பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுக ள் உதாரணம். கால ங்காலமாக உடலில் தேங்கிய அந்த நாற்றத் தைப் போக்க, க்ளோரோஃபில் நிறைந்த பச் சைக் காய்கறிகள், கீரைகள் சாப் பிட வேண் டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.

பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித் தால், நாற்றமும் உடல் வலியும் பற ந்து போகும். குளியலுக்கென்றே பாத் ஜெல், பாத் ஃபோம், சோப் கிரி ஸ்ட ல்ஸ் என நிறைய கிடைக்கின்றன.

நிதானமான குளியலுக்கு இவற்றையெல்லாம் பயன்படுத்தினால் நாற்ற மும் மறையும். அழகும் மேம்படும். வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் நனைத்த பஞ்சினை அக்குள் பகுதியில் தடவி விட்டு, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், வியர்வை நாற்றம் கட்டுப்படும். உடை கள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசி யம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply