Wednesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சுய இன்பத்தின்போதோ உடலுறவின்போதோ வெளியேறும் விந்துவின் அளவு

விந்து (Sperm) எனப்படுவது கண்ணுக்குத் தெரியாத அமைப்பு.அதை உங்கள் வெற்றுக் கண்ணால் பா ர்க்க முடியாது. வெளிவருகின்ற திரவம் சுக்கிலப் பாயம் (Seminal fluid) எனப்படும். இதிலே விந்து கள் கலந்திருக்கும். விந்துகள் தவீர சுக்கிலப் பாயத்தில் விந்து உயிர்வாழ்வதற்குத் தேவையா ன பல்வேறு பதார்த்தங்களும் கலந்திருக்கும். ஒரு தடவையி ல் வெளியேறும் சுக்கிலம் பாய த்தின் அளவு இரண்டு மில்லி லீட் டருக்கும் அதிகமாக இருந்தால் அது சாதாரண அளவாகும்.2 மில்லி லீடர் என்பது மிகவும் சிறிய அளவு. அதனால நீங்கள் மனத்தைக் குழப் பிக் கொள்ள வேண்டாம்.

விந்தணுக்கள் குறைதல் அல்லது இல்லாமல் போதல்

ஆண்களின் விந்தணுக்களில் அளவு (Sperm count) குழந்தை உருவாக்கத்தை த் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும்.இந்த விந்தணுக்கள் ஆண்க ளின் விதைகளிலே உற்பத்தி செய்யப்ப ட்டு மற்றைய பல சுரப்பிகளின் சுரப்பு களோடு சேர்ந்து சுக்கிலப் பாயமாக (Seminal fluid) வெளியேறும்.

விந்தணுக்களின் உற்பத்தி யிலே பாதிப்பு ஏற்பட்டாலும் மற்றைய சுரப்புக்கள் சாதாரண மான முறை யிலே தொழிற் படுவதால் உடலுற வின் போது அவர்களுக்கு சுக்கில ப் பாயம் வெளியேறலாம். சுக்கி லப் பாயம் வெளியேறும் அனை வரிலும் விந்துகளின் அளவு போ துமானதாக இருக்கும் என்றில் லை.

ஆகவே குழந்தை உருவாகுவது பிற்போகும் சந்தர்ப்பத்தில் ஆண் களின் சுக்கிலப் பாயம் சோதிக்கப்பட்டு அதிலே உள்ள விந்துகளின் வீரியத் தன்மை கணக்கடுக்கப் பட வேண்டும்.

விந்துகளின் வீரியத்தன்மை பிரதானமாக மூன்று விதங்களில் கணக் கெடுக்கப்படும்.

01) விந்துகளின் எண்ணிக்கை –

சாதாரணமாக 1மில்லி லீடர் சுக்கிலப் பாயத்தில் 20 மில்லியன் விந்தணு க்கள் இருக்க வேண்டும்

02) விந்துகளின் முன்னோக்கி அசை யும் தன்மை (active motile)

மொத்தமாக உள்ள விந்துகளில் .குறைந்தது 50 வீதமானவை இந்தத் தனமையைக் கொண்டிருக்க வேண்டும்

03) விந்துகளின் உருவ அமைப்பு (Morphology) மொத்த எண்ணிக்கை யில் குறைந்தது 30 வீதமானவை சரி யான உருவ அமைப்பில் இருக்க வே ண்டும்

.அத்தோடு ஒரு தடவையில் வெளி யேறும் சுக்கிலப் பயத்தின் அளவு 2 மில்லி லீட்டருக்குக் குறையாமல் இருக்க வே ண்டும்.

இவ்வாறு மேலே சொன்ன நிலையில் உள்ள விந்துகளே கருத்தரித்த லுக்கு மிகவும் பொருத்தமானவையாக கருத்தப்படும்.

விந்துகளின் எண்ணிக்கை குறைதல் ஒலிக்கோ ஸ்பே ர்மியா (Oligo spermi) என ப்படும். இவ்வாறனவர்களு க்கு கருத்தரிக்கும் சந்தர் ப்பம் இருந்தாலும் அது குறைவா கவே இருக்கும். கருத்தரித்த ல் பிற்போகும் சந்தர்ப்பத்தில் இவர்களின் சுக்கிலப் பாயம் சேகரிக்கப்பட்டு பதப் படுத்த ப்பட்டு (processed) பொருத் தமான விந்துகளை மட்டும் சேகரித்து IUI முறைமூலம் மனைவியின் கருப்பையினு ள் செலுத்தப்படுவதன் மூல ம் கருக்கட்டலை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

அது தோல்வியடையும் பட்சத்தில் செயற்கையான முறையிலே கருக் கட்டலை நடத்தும் பரிசோதனைக் குழாய்க் குழந்தை க்காக முயற்ச் சிக்கலாம்.

அடுத்ததாக சில பேரின் சுக்கிலப் பாயத் தில் விந்துகளே இல்லாமல் இரு க்கலா ம். இது Azospermia எனப்படும். இவர்க ளுக்கு கருக்கட்டல் நடை பெறுவதற்கா ன சந்தர்ப்பம் இல்லை. இருந்தாலும் மிகவும் அரிதாக விந்துகள் முற்றும் முழுதாக இல்லாமல் போகுதல் சில வே று நிவர்த்தி செய்யக் கூடிய நோய்களால் ஏற்படிருக்கலாம்.

அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த நோய் சரி செய்யப்பட்டால் விந்து உற்பத்தி ஏற்பட்டு கருத்தரித்தல் நடை பெறலாம். இது மிகவும் சொற்பமானவ்ர் களுக்கே சாத்தியம்.

விந்துகள் அறவே இல்லாதவர்கள் தம் பதியினர் வேறு ஒருவரின் விந்தணுக் களை பெற்று IUI மூலம் கருப்பையி னுள் செலுத்தி கருத்தரிக்க முயற்ச்சி க்கலாம்.

இப்போது நிறைய தனியார் வைத்திய சாலைகளில் விந்துகளை சேமி க்கும் வங்கிகள் உள்ளன.அங்கிருந்து விந்துகளை பெற்று IUI மூலமோ /பரிசோதனைக் குழாய்க் குழந்தையாகவோ கருத்தரித்தலு க்கு பெரிதும் உதவுகின்றன•

நன்றி – சுலாக்ஸி

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: