வீழ்ந்தது ரூபாயல்ல . . .! நம்பிக்கை. . ,?
2013, செப்டம்பர் (இந்த) மாத நம் உரத்த சிந்தனை மாத இதழில் வெளி வந்த தலையங்கம்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு வீழ்ந்திருக்கிற து. இன்னும் வேகமாய் சரிந்து வருவது அதிர் ச்சிக்குரியது. அமெரிக்க டாலர் ஒன்றை வாங்க நாம் 68 ரூபாய் தர வேண்டும்.
பல வருடங்களாக 45 ரூபாய்க்கு இருந் த டாலரின் மதிப்பு 2012 ஆகஸ்ட்டி லிருந்து 2013 ஆகஸ்டுக்குள் 68 ரூபா யாக உயர்ந்துள்ளது. அதுவும் கடந்த ஒரு மாதத்திற்குள் 15 ரூபாய் வரை டாலரின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. இது எதனால்?
அமெரிக்க பொருளாதாரம் சரிந்தவுட ன் இங்கு முதலீடு செய்ய போட்டி போட்டுக்கொண்டு வந்த பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது இந்தியாவி லிருந்து கிளம்பியது ஏன்? அந்நிய முதலீட்டு கணக்கின்படி உயர்ந்திருக் க வேண்டிய இந்தியாவின் உற்பத்தி த்திறன் குறைந்து போயிருக்கிறதே எப்படி? நம் கையிருப்பிலுள்ள அந்நிய செலவாணி யின் மதிப்பை விட
நாம் உடனே செலுத்தவேண்டிய உலக க்கடன்தொகை அதிகமாக இருப் பதை எவருமே கண்டுகொள்ளாமல் இருந்த மர்மம் என்ன?
இந்தியாவின் தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கையும், மெத்தன மான பொருளாதார நடவடி க்கையும் வரவுகளுக்கு வழி காணாமல்… செலவு களுக்கு மட்டுமே துணை போகும் திட்டங்களும் தான் காரணம் என்று நமது சிற்றறிவிற்குத் தெரி கிறது.
ஆனால், இத்தனை மில்லியன் டாலர் கேள்விகளுக் குப் பதில் சொல்ல வேண்டிய வேதனைப்பட வேண்டிய பிரத மர் இன்னும் மௌனம் காப்பது, சரியாகும், ஆனா! எப்போ சரியாகும்னு தெரியாது என் ற பாணியில் நமது நிதியமைச்சர் தினந் தோறும் தரும் காமெடி கமெண்ட்டும், உ லகப் பொருளாதாரச் சந்தையில் சிரிப்பா ய் சிரிக்கிறது.
இப்பவாவது பேசுங்க பாஸ்… இப்பக் கூட பேசாட்டி எப்படி? என்று பிரத மரை நம்ம ஊரு கோபிநாத் கூட கேட்டாச்சு பதில்தான் நஹி இது சாபக்கேடு, இதற்கு விமோசனந் தான் என்ன?
இலவசங்கள் ஒழியவேண்டும். கள்ளச் சந்தையினரை கழுவில் ஏற்ற வேண்டு ம். இறக்குமதி குறைய வேண்டும். ஏற்றுமதி அதிகரிக்க வே ண்டும். உற்பத்தி பெருக வேண்டும். அந்நிய முதலீடு யாவும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.
இந்த உரத்த சிந்தனையாவும் மெய்ப்படுமேயா னால் நம் நாணயத்தின் மதிப்பும் உயரும், நாட்டின் மதிப்பும் உயரும்.
இந்த வைர வைடூரிய வரிகளின் உரிமையாளர்
உதயம் ராம் (நம் உரத்த சிந்தனை) => கைபேசி 94440 11105
*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-
ok
saattaiyadi
இவர் வழி தனி வழி – எம்.சதீஸ்குமார் எழுதிய ‘ஒன் மேன் ஆர்மி’ புத்தகத்தில் இருந்து நகல் எடுக்கப்பட்டதா?