Sunday, May 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த‍வர்கள் இன்று கதாநாயகியாக பார்க்கின்றனர்” – இளம்நடிகை நஸ்ரியா நசீம்

‘நேரம்’ என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் இவர் ஒரே இரவில் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்ந்து விட்டார். இப் போது, மலையாளத்திலும், தமிழிலு ம் குறிப்பிடத்தக்க அளவு படங்க ளை அதுவும் முன்னணி நடிகர்களுடன் இவர் கைவசம் வைத்துள்ளார்.

நேரம் திரைப்படம் அவரது வாழ்க் கையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்க ளைக் குறித்து கேட்ட போது, அதிகப் படங்களில் வாய்ப்புக் கிடைத்திரு ப்பதைத் தவிர எனக்குப் பெரிய மாற்றம் எதுவும் இல்லை மேலும் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்த‍வர்கள் இன்று கதாநாயகியாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளார்கள், இதனா ல் எனக்குப் பொறுப்புகள் அதிகம் கூடியிருக் கிறது. எனக்குக் கிடைத்த பாராட்டுகள் பெரு த்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் பாராட் டுகள் மக்கள் என்னை கதாநாயகியாக ஏற்றுக் கொண்டதையேக் காட்டுகின்றது.

ஒரே படத்தின் மூலம் இவ்வள வு உயரத்திற் கு வந்திருப்பது என்னால் மக்களின் எதிர்பார் ப்பைப் பூர்த்தி செய்யவேண்டும் என்ற அச்சத் தையும் தருகின்றது. ஆயினும் என்னால் இயன்றவரை சிறப்பாக செய்வேன் என்றும் நஸ்ரியா தெரிவித்தார். இதற்குமுன் மலை யாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்தளித்து வந்தவர் தான் நஸ்ரியா நசீம் என் பது குறிப்பிடத்தக்க‍து.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: