Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உடலுறவில் உள்ள‍ நம்பிக்கைகளும்! உண்மைகளும்!

தாம்பதியம் பற்றி எத்தனையோ நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதி ல் பெரும்பாலானவை உண்மையி ல்லை. தாம்பத்ய உறவின் தேவை யை அறிந்து கணவர்தான் மனைவி யை உறவுக்கு அழைக்க வேண்டும் இல்லையெனில் சிக்கலாகிவிடும் என்று பெரும்பாலான பெண்கள் அஞ்சுகின்றனர். அது தவறு மனைவியும் கணவரை காதலோடு அழைக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். செக்ஸ் பற்றிய பழமை யான நம்பிக்கைகளையும், உண் மைகளையும் பற்றி விளக்குகின் றனர் பிரபல பாலியல் நிபுணர்கள் படியுங்களேன்.

நம்பிக்கை:

பெரிய பருமனான மார்பகங்கள் உள்ள பெண்களுக்கு ஆசை அதி கமாக இருக்கும் என்று பெரும்பா லான ஆண்கள் நினைப்பது!

உண்மை:

தாம்யத்ய உறவிற்கு சிறிய மார்ப கம், பெரிய மார்பகம் என்ற பாகு பாடு இல்லை. வம்சம், உடல் எடை, ஊட்டச் சத்துணவு போன்ற காரணிகளால் பெண்களுக்கு மார்பகங்கள் பெரியதாக வோ அல்லது சிறியதாகவோ அமையும்.

நம்பிக்கை:

தாம்பத்ய உறவு குறித்த அறிவு இருக் கும் பெண்களுக்கு ஏற்கனவே அதில் முன் அனுபவம் இருக்கும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைப்ப து..!

உண்மை:

தற்போது பெண்கள் அதிகம் படிக்கின்றனர். ஆண்களைப் போல வெளியே செல்கின்றனர். இதனால் அனுப வ அறிவு இல்லாமலேயே செக்ஸ் குறித்த அறிவைப் பெண்களால் பெற முடியும்!

நம்பிக்கை:

திருமணமான பெண் முதன் முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னிச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்பட்டால்தான் அப்பெண் கன்னித் தன்மை மாறாதவள் பெண் என்று பெரும்பாலான ஆண்கள் நினை ப்பது!

 உண்மை:

திருமணமான பெரும்பாலான பெண்களுக்கு முதன்முதலில் உடலுறவு கொள்ளும்போது மெல்லிய ஹைமன் எனப்படும் கன்னி ச்சவ்வு கிழிந்து வலியும் ரத்தமும் ஏற்படுவதில்லை. பெண்களுக்கு ஹைமன் எனப்படும் கன்னிச் சவ்வு சாதாரணமாக மெல்லிய தாகவோ அல்லது தடிமனாக வோ இருக்கலாம். ஹைமனில் இருக்கும் துவாரம்சிறியதாக வோ அல்லது பெரியதாகவோ, திறந்தோ அல்லது மூடிய நி லையிலோ இருக்கலாம். உடற் பயிற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு உடலுறவிற்கு முன்பே ஹைமன் சவ்வு கிழிந்திரு க்கலாம். உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்களில்கூட சிலருக்கு முதலிரவு உடல்உறவிற்குப் பின்னும் ஹைமன் கிழியாமல் இருக்க லாம்! இதேபோல் பெண்களிட மும் செக்ஸ் குறித்த சில நம்பி க்கைகள் இருக்கின்றன.

நம்பிக்கை:

முதல் இரவில் முழுமையான செக்ஸ் இன்பம் தரமுடியாத ஆண்களை ஆண்மை இல்லாதவர்கள் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது..!

உண்மை:

முதலிரவில் 80 சதவீத ஆண்களால் முழுமையான உடலுறவு கொள்ள முடியாது. பதற்றம், பயம் ஏற்படலாம். அதனால் அவர்கள் ஆண்மை இல்லாத வர்கள் என்று முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

 நம்பிக்கை:

உடல்உறவில் உச்சகட்ட இன்பம் கிடைக்கவில்லை எனில் அது ஆண்களிடம் உள்ளகுறை என்று பெரும்பாலான பெண்கள் நினை ப்பது!

உண்மை:

உடல் உறவில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் முழுமன தோடு ஆண்களுடன் இணைந்து ஒத்துழைத்தால் அன்றி முழுமை யான உச்சகட்ட இன்பத்தை பெறமுடியாது. ஆண்பெண் இருவரும் சமஅளவில் உடலும் உள்ளமும் இணைந்து உடலுறவில் ஈடுபடும் போது தான் பெண்களுக்கு இன் பம் அதிகரிக்கின்றது என்பதைப் பெண்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

 நம்பிக்கை:

வயதாகி விட்டதாலும் மாதவிடாய் நின்றுபோனதாலும் மற்றும் ஆண்க ளுக்கு வயதாகிவிட்ட நிலையிலும் உடலுறவு அவசிய மில்லை என்று பெரும்பாலான பெண்கள் நினைப் பது..!

உண்மை:

பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோன பின்பும் பாதி வாழ்க்கை இருக்கிறது. அந்நிலையில் உடல் உறவு தேவையில்லை என பெரும் பாலான பெண்கள் நினை ப்பது தவறு. வயதான காலத்திலு ம் வளமான உறவை பெண்கள் நினைத்தால் அனுபவிக்கலாம். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.

நம்பிக்கை:

கணவர் தான் மனைவியை உறவு க்கு அழைக்க வேண்டும் என்று நினைப்பது!

உண்மை:

ஆண்கள் தான் முதலில் அழைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் நினைப்பது தவறு! இரு ப்பினும் திருமணமான புதிதில் பெண்கள் வலியவந்து கணவரை அழைக்கும்போது சில ஆண்கள் தவறான அர்த்தம் ஏற்படுத்திக் கொண்டு வாழ்க்கையையே சிக்கலாக்கி விடுவார்கள். என வே பரஸ்பரமான அன்பின் மிகுதி யால் மனைவியும் கணவரை உறவுக்கு அழைக்கலாம்!

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: