Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘தெய்வீகக் காதலி’யின் ‘தெய்வீகக் காதல்’!

இவ்வுலகில் காம, க்ரோத, மோஹ, மத, மாத்ஸர்யங்களுக்கு மூல காரணமாக அமைவதே அஹங்காரம மகாரங்கள்தான். ‘நான்’ என்றும், ‘அவர்’ என்றும், ‘அவன்’ என்றும், ‘அவள்’ என்று ம் இன்று நினைப்பது எல்லாம் நாளை உயிர் பிரிந்தால் ‘அது’ ஆகிவிடுகிறது. இந்த நிலையாமை சூழ்ந்த உலகில் எந்த உடல்மீதும், எந்தப் பொருள் மீதும் நாம் வைக்கின்ற பற்றானது பிரிவு வரும் போது துக்கத்துக்குக் காரணமாகிறது. அப்படி யானால் எதன்மீது பிரேமைகொண்டால் அது துக்கமே இல்லாத நித்ய சுகமளிக்கும் என்றால், அதற்குத்தான் மஹான்கள் எவர் ஒருவர் என்றென்றும் ‘நான்’ ஆகவே இருக்கின்றாரோ, எவரிடமிருந்து நாம் அனைவரும் தோன்றுகி ன்றோமோ, எவரருளால் எவர் நினைவோடு வாழ்கின்றோமா, இறுதியில் எவரிடம் சென்று லயிக்கின்றோமோ, ஆக எவரிடமிருந்து பிரிவு என்பது இல்லையோ, அப்படிப்பட்ட பரமாத்மா விடம் பற்றையும் காதலையும், வைத்தால் துன்பமற்ற நித்ய ஆனந்தத்தை அடையலாம் எனக் காட்டியிருக்கிறார்கள். அப்படி என்றும் பசுமையான ஹரிபக்தியில் ஈடுபட்டு அதனால் நித்யசுகம் அபகரிக்கப்படாமல், அந்த ஹரி சர ணத்தையே அடைந்ததொரு புண்யாத்மாவான ஸ்ரீபக்தமீரா பாயின் திவ்ய சரித்திரம்தான் இங்கு நாம் காணப்போவது.

பாவனமான பாரததேசம் முகம்மதியர்களின் ஆக்ரமிப்பினாலும், அட்டூழியங்களினாலும் அவ தியுறும் வேளையில் வைதீக தர்மங்களை ரக்ஷி த்து ஹிந்துக்களைக் காக்க சில க்ஷத்ரிய வீரர்கள் புறப்பட்டார்கள். அவர்களை, இராஜ புத்ரர்கள் என்றழைப்பர். அப்படிப்பட்டதொரு வம்சத்தில் மார்வாட் பிரதேச சிற்றரசராக இருந்தவர் ஸ்ரீ தூதாராவ். இவர் சிறந்த கிருஷ்ணபக்தர். இவர து பௌத்ரிதான் மீரா. இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்த இவளை தூதாராவ் தன் வளர் ப்பு மகளாகப் பேணி வந்தார். ஸ்ரீதூதாராவ் சாதுக் களை மிகவும் ஆதரிப்பவர்.

ஒரு சமயம் அவர் மாளிகையில் கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெற் றது. பல்வேறு தேசங்களிலிருந்தும் எண்ண ற்ற சாதுக்கள் வந்திருந்தனர். மத்தளம், வீணை, தாளம் முதலிய வாத்யங்களுடன் அவர்கள் செய்த கிருஷ்ண கானம் மீராவின் மனத்தை நிரப்பியது. நான்கு வயதே நிறை ந்திருந்த மீரா அங்கு வந்திருந்த ரைதாஸ் என்னும் மகான் தன் தாயாரின் குருவானதா லும், அடிக்கடி வருபவரானதாலும், தன்னிட ம் அபரிமிதமான வாத்ஸல்யம் உள்ளவரான தாலும், அவரிடம் மிகுந்த உரிமையு டன் பழகுவாள். சங்கீர்த்தனம் முடிந்து அனைவரு ம் விஸ்ராந்திக்காக பூஜையறையிலிருந்து வெளியேறிய பிறகு, ரைதாஸ் பூஜிக்கும் அழ கிய கிருஷ்ண விக்ரகத்தின் தெய்விக லாவண்யம் மீராவைக் கவர்ந்தது. யாருமறியாமல் மெதுவாக கிருஷ்ணனைத்தூக்கிக்கொண்டு தனியிடம் சென்று விளையாட ஆரம்பித்தாள். ரைதா ஸ் பூஜையறைக்கு சாதுக்களுடன் திரும் பியபோது கிருஷ்ண விக்ரகத்தைக் காணா து புலம்பி இங் குமங்கும் தேடியலைந்தார். கடைசியில் ஏகாந்தமாக கண்ணனுடன் விளையாடும் மீராவைக் கண்டுபிடித்து விட்டனர். ஸ்ரீதூதாராவ் எவ்வளவு கூறியு ம் மீரா தன் மனத்துக்குகந்த கிருஷ்ணனை த் திருப்பித் தர மறுத்து விட்டாள். அவளது கிருஷ்ணப் பிரேமையைக் கண்டரை தாஸ் கிருஷ்ண விக்ரகம் மீராவிடமே இரு க்கட்டும் எனக் கூறிவிட்டார். மீராவிடம் “இவன் பெயர் ‘கிரிதாலால்’. இவனுக்கு அலங்காரம் செய்து, பாலூட்டி, பக்ஷணம் கொடுத்து நீயே வைத்துக்கொள்” எனக் கூறி தன் பிராணனை விடப் பெரிதாகப் பூஜித்து வந்த விக்ரகத்தை அவளிடமே கொடுத்து விட்டார். இவ்வளவு திடமான பக்தியை பகவானிடம் கொண்டிரு க்கும் மீரா, மஹோன்னதமான நிலையை அடைவாள் என ஆசிர்வதித்தரை தாஸ் உடன் வந்த அடியார்களுடன் சில நாள்களுக் குப் பிறகு பிருந்தாவன யாத்திரை புறப்பட்டு விட்டார்.

மீரா தன் பொழுதை கிரிதாரியுடனேயே செல விட்டாள். மழலையில் கிரி தாரியுடன் ஏதே தோ பேசிக்கொண்டும், தான்குளிக்கும்போது கிரிதாரி யையும் குளிப்பாட்டி, தான் அலங்கா ரம் செய்து கொள்ளும்போது அவ ருக்கும் அலங்காரம் செய்தும், தான் சாப்பிடும்போது கிரிதாரிக்கும் சோறூட்டியும், தன்னுடனேயே அவரை யும் உறங்கச்செய்தும், தன்னை யொ த்த சிறுமிகளுடன் கிரிதாரியை வைத் துக் கொண்டு விளையாடிக் கொண்டு ம், கிரிதாரிக்கு விதவிதமா ன ஆடைய லங்காரங்களைத் தயார்செய்து கொண் டும், கிரிதாரியுடன் தான் விளையாடி யதையெல்லாம் தன் வளர்ப்புத்தந்தை தூதாராவிடம் கொஞ்சிக் கொஞ்சிக்கூறிக் கொண் டும் தன் உலகமே கிரி தாரியைச் சுற்றிச் சுழலுவதாக உணர்ந்தாள் மீரா. பார்ப்பவர்கள் யாரோ கோபிகைதான் இப்படி குழந்தையாக அவதரித்திருக்கிறாள் என எண் ணினர்.

காலம் உருண்டோடியது. அதிபால்யத்தில் விளையாட்டுத்தனமாக மீராவுக்கு ஏற் பட்ட கிருஷ்ணப்ரேமை அவள் வளர வளர அதுவும் வளர்ந்த து. குழந்தைப் பருவம் கழித்து மீராவும் வயதுக்கு வந்துவிட்டாள். பதி னாறு வயதில் எழில் மிகுந்த மீரா கிரு ஷ்ணனையே தன் நாயகனாக உணர்ந் தாள். தோட்டத்து மண்டபத்தில் அவரை இருத்தி அவர்முன் ஆடுவாள், பாடுவாள். ஊஞ்சலி ல் அவரை இருத்தி வீணையை மீட்டி அவர் புகழினை “கிரிதர ஆகே நாசூங்கி” என இனிமையாகப் பாடுவாள். வீணையில் வசந்த ராகத்தை இசைக்கும் போது வசந்த காலத்தில் மோகனகிருஷ்ணன் ஆடிய ஹோலி விளை யாட்டும் நினைவுக்கு வந்த வளா க பலவண்ண நீரை தானே ஒரு கோபிகையாகி தன் கிரிதாரியுட ன் பீச்சாங்கு ழலேந்தி பீச்சியபடி “ஹோலிகேலன் கூ ஆயி” என இனிமை யாகப் பாடுவாள். அழகிய சம்பக மரத்தில் மலர்க்கொடிக ளால் ஓர் ஊஞ்சல் கட்டி அதில் தன் கிரிதாரியை வைத்து “ஜுலத ராத ஸங்க கிரிதர” எனப்பாடிப் பரவசமுறுவாள். மீரா அதிகம் படிக்காதவளாயி னும் கிரிதாரியின் அருளால் லலிதமான கவிதை கள் எழுதுவதில் தேர்ந்த வளாக இருந்தாள். அவள் வளர்த்த பைங்கினி அவளைக் கண்டதும் “மீரா, மீரா” எனக்கொஞ்சியழைக்கும். அதையும் பாலும், பழமும் தந்து “ராதே கிருஷ்ணா” எனக்கூறப் பழக்குவாள். “ராதே கிரு ஷ்ணா போல தோதிமைனா” என அதனிடம்பாடுவாள். இவ்வாறு இராஜ குடும்பத்தைச் சேர்ந்த அழகி மீரா வுக்கு பஞ்ச லோக மூர்த்தியாக உலகுக்குத் தெரிந்த கிரிதாரி அவளது ஸர்வ ஸ்வத்தையும் அபகரித்துக் கொண்ட ப்ராண நாதனாகத்தான் தெரிந்தான். வாழ்வு எப்போதும் இப்படியே இனிமையாகப் போய் விடக் கூடாதா ?

அழியும் பொருள்கள் மீது கொள் ளும் பிரேமை துக்கத்தில் முடிகி றது. இன்று ‘அவர்’ ஆகவோ, ‘அவள்’ ஆகவோ இருப்பது நாளை ‘அது’ ஆகிவிடுகிறது. நிலையில்லாத இந்த சரீரத்தின் மேல்தான் ‘நான்’ என் னும் அகம்பாவம் வருகிறது. நிலை யானதான பரம்பொருளான ஸ்ரீகிரு ஷ்ணனிடம் பேராவல் கொண்டு பிரே மையுற்ற மீராவை எவரும் புரிந்து கொள்ளவில்லை. அவளது வளர்ப்புத் தந்தை அவளுக்கு உலகியல் விவாகத் தைச் செய்து வைக்க விரும்பினார். அவள் கிரிதாரியே தன் மணாளன் என எவ்வளவோ கூறியும் தன் வளர்ப்பு மக ளுக்கு மணம் செய்து வைக்காவிடில் தன் குலகௌரவம் பாதிக்கப்படும் என எண்ணினார். அவள் தன் அவல நிலை யை கிரிதாரியைத் தவிர வேறு எவரிடம் கூறி முறையிடுவாள்? “துமபி ன மோரே சௌனபர்லீ கோவர்தன கிரிதாரி” எனப்பாடி அவரிடம் தன் ஹ்ருதயதாபத்தைக் கொட்டினாள்.

இந்த சமயத்தில்தான் ஸனாதன ஹிந்து மதத்துக்கு ஊறு விளைவித்து வந்த முகலாயர்களை எதிர்த்த இராஜபுத்ரர்களுக்குத் தலைவனான மஹாராணா கும்பாஜி என்னும் சித்தௌட் என்னும் நகரைத் தலை நகராகக் கொண்ட மாவீரன் தனக்குப் பல மனைவிகள் இருந்தும், அவர்கள் போகக் கேளி க்கைகளில் மட்டுமே ஈடுபட்டு அவனுடைய பக்தி வாய்ந்த போக்குக்கு ஏற்றவர்களாக இல்லாதிருந்த தால் சிறந்த பகவத் பக்தையான ஒரு மனைவி தன க்கு வாய்க்க வேண்டுமென ஆவல் கொ ண்டிருந்தான். அவனுக்கு ஊதா என்னும் ஒரு சகோதரியும், ஜயமல் என் னும் ஒரு சகோதரனும் உண்டு. ஜயமல் பல போர்களில் முகலாயர்க ளை முறி யடித்த மாவீரன். கும்பாஜிக்கு வலக்க ரமாகத் திகழ்ந்தவன். கும்பாஜியின் இராஜ குரு சகலசாஸ் திரங்களிலும் மஹாபண் டிதரான வரும். சிறந்த பகவத்பக்தருமான ரகு நாததாஸ் மஹாமாத்திரர், இவர் மூல மாக தூதாராவின் வளர்ப்பு மகளான மீரா வின் பெருமைகளைக் கேட்டறிந்த ராணா அவளை மணந்தா ல் தன் மனோரதம் கை கூடுமென்று, அவளைப் பெண்கேட்டு தூதா ராவு க்கு ஒரு கடிதம் அனுப்பினான். மஹா ராணாவே பெண் கேட்பது தனக்கு ச் சிறந்த கௌரவம் எனக் கருதிய தூதாராவ் உடனே சம்மதித்து ஏற்பா டுகளைச் செய்ய ஆரம்பித்தார். மீராவின் மனநிலையை எவருமே பொருட்படுத்தவில்லை. சிறு வயது முதற் கொண்டே கிரிதாரியை மண வாளனாக வரித்துவிட்ட மீரா வே றொரு மனிதனுக்குப் பத்னியாவதா ? இந்த எண்ணமே அவளை வருத்தி யது. தன் கிரிதாரியிடம் முறையிட் டுப் புலம்பிய அவளுக்கு ஜுரம் கண் டு மருந்துக்கும் கட்டுப்படாது போய் விட்டது. “ஹைரீமைம் தோ ப்ரேம திவானி” என மெல்லிய குரலில் பாடினாள். ஜன்னி கண்டுவிட்டது. வைத்தியரையும் நெருங்க விடவில் லை. “மூர்க பைத் மர்மந ஹி ஜானே” எனப் பாடலுற்றாள். எல்லாரும் நீங்கிய பிறகு ஏகாந்தத்தில் கிரிதாரியின் மார்பில் இருந்த வைர அட்டி கை தீப ஒளியில் ஜ்வலித்து அவளை அருகே அழைத்தது. மாற்றுப் புருஷனிடமிருந்து தன் கற் பை ரக்ஷித்துக் கொண்டு கிரிதாரியை அடைய அந்தப் பதக்கத்திலிருந்து ஒரு வைரத்தை எடுத் து பொடித்து பாலில் கலந்து உட்கொண்டாள். விஷம் வேலை செய்ய ஆரம்பித்தது. மெல்ல நினைவு தப்பி, கிரிதாரி மீராவுக்கு தர்சனம் தந் தார்.

பிரகலாதனுக்கு விஷமே அமுதானது போல மீராவுக்கும் விஷம் கிருஷ்ணனின் அருளால் அமுதானது. கிரிதாரியிடம் பூரண சரணாகதி அடைந்து “நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்” என்ற பாவத்தில் “பேசே தோபிக் ஜாவூம்” அதாவது ‘என் எஜமானனாகிய நீ என்னை யாருக்காவது விற்றாலும் எனக்குச் சம் மதமே; உனக்கில்லாத உரிமையா?’ என்ற பாவத்தில் பாடிய மீராவை அவளது நாத னான கிரிதாரி உலகியலை அனுசரித்து திருமணம் செய்து கொள்ளப் பணித்து அது எந்த விதத்திலும் தன்னைவிட்டு அவளைப் பிரிக்காது என்றும், என்றுமே அவளுக்கு தானே பிராணநாதனாக இருப்பதாகவும் கூறி அவளைத்தே ற்றினான். இந்த ஆக்ஞை மீராவின் மனத்துக்கு உகந்ததாக இல்லாவிடி னும் பிரபுவின் ஆணையை மீறவும் அவளு க்கு இஷ்டமில்லை. வேண்டா வெறுப்பாக திருமணத்துக்கு ஒப்புக் கொண்டாள். தன் விருப்பத்துக் கு அவள் இணங்கிவிட்டதைக் கண்டு தூதாராவுக்கும் மகிழ்ச்சி. வெகு ஆடம் பரமாக ஏற்பாடுகள் செய்தார். கல்யாணத் தேதியும் நெருங்கி வந்தது. ஆனால் கல்யா ணப் பெண்தான் மகிழ்ச்சியாக இல்லை. மண் டபத்தில் மீராவுக்கும் ராணாவுக்கும் இடை யே திரைபோடப்பட்டது. வைதீகர்கள் “ஸுல க்னே ஸாவதானா” எனக்கூறி புஷ்பம், அக்ஷ தை, பன்னீர் ஆகியவற்றைத் தூவினர். திரை விலக்கப்பட்டது. மீரா கிரிதாரியை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். மாலையை அவளிடம் தந்து ராணாவுக்குப் போடும்படி கூறினர். அவளோ கிரிதாரி க்கே அந்த மாலையைப் போட்டாள். மீராவி ன் பக்தியைக் கண்டு ராணா மகிழ்ச்சியே அடைந்தான். இத்தகைய மனைவி கிடைத்தது தன் பாக்யமென நினைத் தான். மீரா தன்னைக்கே லி செய்யும் யாரையும் லக்ஷியம் செய்யவில்லை. அவள் கிரிதாரியை யே நம்பியிருந்தாள். கல்யாணம் முடிந்தது. கிரு ஹப் பிரவேசத்திற்குக் குறிக்கப்பட்ட தினத்தில் மீராவும் ராணாவும் சித்தூருக்குப் புறப்பட்டனர். தூதாராவ் கணக்கு வழக்கின்றி ஸ்ரீதனங்களை அனுப்பினார். ஒரு மூடு பல்லக்கில் மீரா கிரிதாரி யுடன் அமர்ந்தாள். இன்னொரு பல்லக்கில் ரா ணா உட்கார்ந்தான். மீராவைப் பொறுத்தவரை தான் கிரிதாரியை மணந்து அவனில்லம் செல்வ தாக வே எண்ணினாள். “மைம் கிரிவர்கே கர்ஜாவும்” எனப் பாடினாள். சித்தூரில் ராணாவின் குலதெய்வமான துர்க்கையின் கோவிலுக்குச் சென்று மிக ஆடம்பரமாக பூஜை செய்தனர். அர்ச்சகர் துர்க்கை யை நமஸ்கரி க்கும்படி தம்பதி யிடம் கூறிய போது மீரா ஸ்ரீகிரு ஷ்ணனைத் தவிர வேறு தெய்வ த்தை தான் வணங்க முடியாது எனக்கூறிவிட்டாள். ராணா கூறி யும் மறுத்த அவள் “மேரே தோ கிரிதர கோபால் தூஸ்ரா ந கோயி” எனப் பாடலுற்றாள். மீரா வின் மனோபாவத்தைப் புரிந்து கொண்ட ராணா அவளது இஷ்டப்படி விட்டுவிடும்படி சொல்லி விட் டான். அவளுடைய தங்கை ஊதாவுக்கும், அவனுடைய மற்ற மனைவி யருக்கும் இது பிடிக்கவில்லை. அவர்களுடைய இராஜ ஸமான போக்கும், ஆடம்பரமான ஆடையாபரணங்க ளும் மீராவுக்கு வெறுப்பையளி த்தது. எப்போதும் தன் கிரிதாரியின் முன்னிலையில் பஜனம் செய்து கொண் டும் பாகவதம் படித்திக் கொண்டும் தியானம் செய்து கொண்டும் தன் அறையிலேயே இருந்தாள். மீராவின் கிருஷ்ண பக்தி ராணாவுக்குப் பிடித்திருந்த போதிலும், இதுபோன்ற பகவத் விஷயங்களில் அவளுடன்கலந்து ஈடுபட தனக்கு அவகாசமில்லையே என அவன் வருந் தினான். தன் அறையிலேயே பஜனை செய்து கொண்டும், பக்திப் பரவ சத் தில் ஆடிக்கொண்டும், தூப, தீபங்களுடன் கிரிதாரிக்கு பூஜை செய்து கொண்டும் இருந்த மீராவுக்கு சாதுசங் க மில்லாதது ஒன்றுதான் குறையாக இருந் தது. இதை உணர்ந்த ராணா அரசாங்க அலு வல்களை தன் தம்பி யிடம் ஒப்படைத்து விட்டு மீராவுடன் தீர்த்த யாத்திரை போய் வர நிச்ச யித்தான்.

போதுமான பரிவாரங்களுடன் ராணா மீரா வுடன் தீர்த்த யாத்திரையாக அயோத்தி, பிருந்தாவனம், காசி, கயை, புஷ்கரம், பத்ரிகாஸ்ரமம், ஜகன் னாதம், பண்டரீபுரம் முதலிய பல க்ஷேத்திரங்களைத் தரிசித்து கங்கை, யமுனை முதலான புண்ய நதிகளி ல் நீராடி அங்குள்ள பரம பாகவதர்களை யும் தரிசித்தான். மீராவின் இனிய பஜனாம்ருதத்தில் மூழ்கிய ராணா இப்படியே ராஜ்ய நிர்வாக ங்களை விட்டு ஸத்ஸங்கத்திலேயே இருந்து விட மாட்டோமா என ஏங்கினான். ராணா வின் இந்த மாற்றம் மீராவுக்கும் மகிழ்ச் சியளித்தது. ஊரு க்குத் திரும்பியதும் ராணா இராஜ்ய நிர்வாகத்தை ஏற்க வே ண்டியிரு ந்தாலும் மீராவின் கிருஷ்ணப் பிரேமை அவனையும் பற்றியிருந்தது. மீரா அவனைத் தன் குருவாகவோ, சகோ தரனாகவோ கருதினாளே தவிர கணவனாக ஒருபோதும் கருதிப் பழக வில்லை. மீராவை சந்தோஷப்படுத்துவது ஒன்றையே தன் லக்ஷ்யமா கக் கொண்ட ராணா அவளிஷ்டப்படி ஒரு நந்தவனமும், அதில் ஓர் அழகிய கிருஷ் ணாலயமும் அமைத்து அதில் அழகிய நிகுஞ்ஜங்களும், நீர்த் தேக்கங்களும், மே டைகளும், மண்டபங்களும் அமைத்து, மான், மயில், குயில், கிளி ஆகியவற்றை யும் அங்கு வளர்த்து அந்த ஆலயத்தில் கிரிதாரியைப் பிரதிஷ்டை செய்தான். மீரா தினமும் அவ்வாலயத்தில் பஜனை செய்யலானாள். ஏராளமான மக்க ள் அதில் கலந்து கொண்டனர். யாவரும் “மீரா ப்ரபோ கிரிதாரி” என்னும் நாமாவளியையே உச்சரித் தனர். மீரா வின் புகழ் புவனமெல்லாம் ஓங்கியது. ராணாவும் மீராவின் புகழி ல் செருக்க டைந்தான். அவனும் பல நாடுகளிலி ருந்து வந்த சாதுக்களுட ன் கீர்த்தனத் தில் கலந்து கொண்டான். இது மற்ற ராணிகளுக்கு பொறா மையை ஏற்படுத்தி மெல்ல ஊதாவி ட ம் குறை கூற வைத்தது. அவளும் ஜயமல்லிடம் மீரா ஒரு ரஜபுத்ர பெண்ணைப் போல நடந்து கொள் ளாது தேவதாசியைப் போல பலர் மத்தியில் ஆடுவதும் பா டுவதுமாக இருக்கிறாள் எனக் கூறினாள். இறுதி யில் மீரா ஆலயத்தில் அல்லாது முன்போல வீட்டில் பஜனை செய்யலாம் என முடிவானது. ராணா வும் இதுபற்றி மீராவிடம் கூற அவ ளும் கிரிதாரியை கோவிலி லிருந்து வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டி லேயே பஜனைசெய்ய ஆரம்பித்தாள். ஜனங் கள்தான் மீரா வைக் காணாது ஏங்கி ராஜகுரு ரகு நாதராவ் மஹா பத்ரரி டம் முறையிட்டனர். அவரும் பக்கு வமாக ராணா விடம் கூற மறுநாள் முதல் கிருஷ் ணாலயத்திலேயே பஜனை ஆரம்பித் தது. அன்னையைக் கண்ட மக்களின் மனம் குதூகலித்தது. ராணாவின் மனம் தான் சந்தோஷத்தி ற்கும், வெறுப்புக்குமிடையே ஊசலாடிக் கொண்டிருந்தது. அவன் முன் போல் கிருஷ்ணாலயத்திற்கு வருவதை நிறுத்திவிட்டான். மீரா விடம் அன்புடன் இருந்தது மாறி உதாசீனமடைந்தான். ஊதாவும் மீரா வைப் பற்றி தூஷணங்கள் பேசி அவனுக்குக் கோபமூட்டி வந்தாள். ஆனால் நகர மக்களின் மாதாஜியாக பெருமதிப்புடனும், ரகு நாதபண்டி தர் முதலிய பெரியவர்களின் பிரியத் துடனும் திகழும் மீராவை வெளிப் படையாக அடக்கவும் அவனுக்கு தைரியம் வரவில்லை.

மீராவைப் பற்றி உயர்வாக பாக்யவதி என்றும், யாரோ கோபியே உல கில் கிருஷ்ண பக்தியை உபதேசிக்க மீண்டும் வந்து அவதரித்துள்ளாள் என்றும் பலர் கூறியபோது அவளை குலதர்மத் தை மீறி, புருஷனுக்கு அடங்காது, துணிநழுவுவது தெரியாது குதிக்கிறா ள், யாரோ கள்ளக் காதலனுக்காகத்தான் இரவில் கிருஷ்ணாலயத்திலே யே தங்குகிறாள் என்றும் இழிவாகப் பேசியவர் களும் சிலர் இருக்கத்தா ன் செய் தார்கள். மீரா “கோயி கஹை ஹல்கா கோயி கஹை மஹ ங்கா” எனப்பாடி யாவ ற்றையும் ஒரு புன்னகை யுடன் ஏற்றாள். பழி பேசியவர் களில் ஊதாவும் ஒருத்தி. அவளது போதனையா ல் மன நிம்மதி குலைந்த ராணா தானே ஆலயத் துக்குப் போய் மீராவை நேரில் பார்த்துக் கேட் கப் புறப்பட்டான். கோவில் உள் தாழ்ப்பாள் போடப்ப ட்டிருந்தது. மீரா வின் அந்தரங்கக் காதல் வார்த்தைகள் உள்ளிருந்து கேட்டன. ராணா கதவைத் தட்டி உரு விய வாளுடன் உள்ளே புகுந்தான். அங்கு மீராவின் படுக்கையில் கிரி தாரியின் விக்ரகமே இருந்தது. ராணா தலை குனிந்தான். ஆனால் தங் களை லோகாபவாதத்திலிருந்து காப்பாற்றிக் கொள்ள மீராவை பஜனை செய்வதை விட்டுவிடச் சொல்லி வேண்டிக்கொண்டு புறப் பட்டு விட்டான். பிராணனை விட்டா லும் பஜனையை எப்படி விடுவது என கிரிதாரி யின் சரணக மலங்க ளைக் கட்டிக்கொண்டு கலங்கிய மீராவின்மேல் கிரிதாரியின் தோளிலி ருந்து ஒரு மலர் விழுந்தது. மீரா வின் மனம் லேசான து.

மீராவின் புகழ் பாரதம் முழுவதை யும் ஆண்டு வந்த அக்பரையும் அடைந்தது. சாம்ராட் தான்சேன் தன் கானத்தினால் அக்பரது ஸாது ஸங்கத்தை அதிகமாக்கி வந்தார். கலாரசிகரான அக்பருக்கு உற்ற தோழனாக விளங்கிய தான்சேன் ஹரி தாஸ், நந்ததாஸ், சதுர்புஜதாஸ், கோவிந்த தாஸ், கிருஷ்ணதாஸ், ஸுர் தாஸ் முதலிய பல மகான்களை அக்பர் சந்திக்கும்படி செய்திருந்தா ர். அக்பர் முன்னிலையில் ஒரு நாள் இதுவரை பாடியிராத ஓர் அபூர்வ ஸா ஹித்யத்தை தான்சேன் பாட, அது மாதாஜி மீராவின் ஸாஹித் யம் என க்கேட்ட அக்பர் அவளை தரிசிக்க ஆவல் கொண்டார். ஆனா ல் ரஜ புத்ரர் கள் எதிரியாக கருதும் அவர் அவ்வளவு சுலபமாக அவ ளை தரிசிக்க முடியாது என தான் சேன் உணர்த்தினார். ஆனால் அக்ப ரின் ஆவல்தான் வென்றது. இருவ ரும் சாதுக்களாக வே ஷமணிந்து இரவு நேரத்தில் மீராவை பஜனைக்கு பின் தரிசிக்க முடிவு செய்தனர். அப்படியே காவியும், ஜபமாலையும், நெற்றியில் ஊர்த்வபு ண்ட்ரமும், கையில் தண்ட கமண்டலமும் கொண்டு கிருஷ்ண நாம ஸ்மரணத்துடன் இருவரும் கிருஷ் ணாலயத்தை அடைந்தனர். தங்களை பிரு ந்தாவனத்திலிருந்து வருபவர்களாக அறி முகம் செய்து கொண்டனர். பிருந்தாவனத் தில் ஒருநாள் ஸ்ரீகிருஷ்ணர் பிரத்யக்ஷமாகி கொடுக்கச்சொன்னதாக விலையுயர்ந்த ஒரு ரத்ன மாலையை கிரிதாரியை அலங்க ரிக்க மீராவிடம் கொடுத்தனர். ஆனால் அங் கிருந்து அவர்கள் திரும்பும்போது அவர்கள் பேசிக்கொண்டதை ஜயமல் கேட்டுவிட்டா ன். அவன் உள்ளம் கோபத்தால் கொந்தளித் தது. ராணாவிடம் சென்று இரவோடு இரவா க அக்பர் மாறு வேஷத்தில் வந்து மீராவைச் சந்தித்து ரத்னமாலையை வழங்கியதைத் தெரிவித்தான். ஆனால் ராணா இதை நம்பவில்லை. ஜயமால் கோபத்துடன் வெளியேறினான். ராணா கோபத்துடன் மீராவின் இருப்பிடத்துக்கு விரைந்தான். மீராவை ப் பலவாறு இகழ்ந்தான். மீராவோ வந்தது சாதுக்கள்தான் எனக் கூறினா ள். கொடுஞ்சொற்கள் தாங்காது மயக்கமுற்ற மீரா மூர்ச்சை தெளிந்து பார் க்கையில் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டுதான் சிறையில் இருப்பதை உணர்ந்தாள். இனி கிரிதாரிக்கு யார் பூஜை செய்வார்கள் என்பதே அவளது கவலையா க இருந்தது.

மீரா சிறையிலிடப்பட்டது கேட்டு ஜனங்கள் ராணாவுக்கு எதிராகக் கொந் தளித்தனர். மீராவைக் காணாது பூட்டப்பட்ட கிருஷ்ணாலயத்துக்கு முன்பு நின்று புலம்பினர். ஜனங்களின் பரிதாபக்குரல் ரகுநாதபட்டரின் செவியையும் எட்டியது. ராணாவை எடுத்து வள ர்த்தவரான அவர் உரி மையுடன் ராணாவுக்கு அவனது தவற்றை எடுத்துக் காட்டினார். ஆனால் ராணா தன் சொந்த விஷயத்தில் அவர் தலையிட வேண்டாம் எனக் கூறியதால் அவரும் மனம் புண்பட்டவராக அரசனை விட்டு அகன்றார். ஜய மாலும் தன்னைவிட்டு நீங்கி, ரகுநாதராவும் வருத் தப்பட்டுச் சென்றதும் ராணா மன உளைச்சலுற் றான். அவனுடைய மனச்சாட்சி மட்டும் மீரா குற் றமற்றவள், வந்தது அக்பர் என அவள் அறியவில் லை எனக் கூறியது.

மீரா அனவரதமும் கிரிதாரியை நினைந்தே விரக த்தால் துடித்து அழுதா ள். ஊதா மட்டும் அடிக்கடி வந்து மீராவை மிரட்டி கேலி செய்தாள். கிரி தாரியை தன்னிடம் கொண்டு வந்து தரச்சொல்லி மீரா கெஞ்சியதும் பலனளிக்கவில்லை. ஜயமால், ரகுநாதராவ் ஆகி யோர் நீங்கியதற்கு மீராவே காரணம் என ராணா அவளிடம் ஆத்திரம் கொண்டிருந்தான். ரகசியமாக ஒரு பிடார னை அழைத்து ஒரு கருநாகத் தை பேழையில் அடைத்து வரும்படி செய்து அதை ஊதாவிடம் தந்து பே ழையுள்சாள க்ராமம் இருப்பதாகக் கூறி மீராவிடம் தரும்படி கூறினான். ஆனால் மீரா பேழையைத் திறந்த போது துளசிதளத்துடன், சந்தனப் பூச்சுடன் சாளக் ராமமே இருக்கக் கண்டாள். ஊதாவின் கண்களுக்கு கரு நாகமாகத் தெரிந்தது, மீராவின் கண்களுக்கு சாளக்ராமமாகி விட்டது. அந்தக் கருநாகமும், சாளக்ராமமும் மறைந்து விட்டன. கருநாகம் மீரா வைத் தீண்டவில்லை என அறிந்த ராணா பாலில் கொடிய விஷத்தைக் கலந்து தரச் செய்தான். ஹரிபாத தீர் த்தம் எனத் தரப்பட்ட அதை அவளும் பரு கினாள். ஆனால் மூர்ச்சையுற்ற மீராவுக்கு விஷமும் அமுதமாயிற் று. ராணா வெறுப்படைந்தான். இதற்குள் ராணாவின் தடையையும் மீறி ஜனங்கள் “மீரா ப்ரபோ கிரிதாரி” எனக் கூச்சலிட்டு பஜனை செய்யத் தொடங்கினர். ராணா கோபமடைந்து மீராவை பலவகை சித்திரவதை களுக்கு ஆளாக்கினான். முள்படுக்கையும் மலர்மெத்தையானது கண்டு அவளை கழும ரத்திலேற்ற நிச்சயித்தான். ஆனால் அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்து சாய்ந்தது. ஜனங் கள் பரவசமானார்கள். வேறு வழியி ன்றி மீரா விடுதலை செய்யப்பட்டாள். அவளது கிருஷ் ணப க்தியும், திட சித்தமும், தைர்யமும் கண் டு ராணாவுக்கு ஆச்சர்யமுண்டாயிற்று. ஆ னால் தனக்கு அடங்காது அக்பருடன் பேசினா ளே என கோபமும் உண்டாயிற்று. செய்வத றியாத அவல நிலையினை ராணா அடைந் தான். மீராவை ஜனநடமாட்டமற்ற காட்டில் கொண்டு விட்டுவிடத் தீர்மா னித்தான்.

அந்தக் காட்டின் வழியே பிருந்தாவனத்துக்குச் செல்லும் ஒரு பாதையி ல் ஒரு பாகவத கோஷ்டி பஜனை செய்து கொண்டு தாளம், மிருதங்கம் ஆகியவற்றை இசைத்துக் கொண்டு “யமுனா தீர விஹாரி பிருந்தாவன ஸஞ்சாரி” என இனிமை யாகப் பாடிக் கொண்டு சென்றவர்கள் ஓர் ஆலமர த்தடியில் கொஞ்சம் ஓய்வெடுக்கத் தங்கினர். இரவு இரண்டு ஜாமத்திற்கு மேல் வெகு தூரத்திலி ருந்து “ஸாகர ராகோஜி ஸ்யாமமனே கிரிதரலால்” என்ற இனிய கீதம் கேட்டு அவர்கள் அனைவரும் அந் தத் திசை நோக்கிச் சென்றனர். அங்கு எளிய ஆடையில், துளசி மாலை கள் அணிந்து பூர்ண சந்திரன் போன்று பொலியும் முகத்துடன் ஒரு பெண்மணி தன் இனிய குரலில் தன்முன் இருந்த கிருஷ்ண விக்ரகத்தை சாக்ஷியாக வைத்துப் பாடிக்கொண்டு இருக்கக் கண்டனர். அதுவும் பூட் டிய ஒரு பாழடைந்த வீட்டில். அவள் தான் மீரா என அறிந்த அவர்களின் ஆனந்தத்துக்கு அள வேயில்லை. இதுகாறும் நிஷ்டையிலிருந்த மீராவுக்கு ராணாவின் போர்வீரர்கள் அவளை அங்கு விட்டுச் சென்று எவ்வளவு நாளாயின என்றே தெரியாது. அந்தப் பாகவதர்கள் அவ ளை வற்புறுத்தி கொஞ்சம் ரொட்டிகளைச் சாப்பிட வைத்தனர். பொழுது விடிந்து அனை வரும் அருகிலுள்ள ஓடையில் ஸ்நானம் செ ய்தனர். மீரா கிரிதாரியை பூஜித்தாள். சில நாள் கள் ஸத்ஸங்கத்தில் கிருஷ்ண பஜனத்தில் கழிந்த பிறகு சாதுக்கள் மறுபடி தங்கள் பிருந்தா வன யாத்திரையைத் தொடர்ந்தனர். மீரா கிரிதாரியின் அனுமதியின்றி அவர்களுடன் செல்ல மறுத்து விட்டதனால் அவர்கள் மேலும் சில நாள்கள் அவளுடன் தங்கி னர்.

மீராவை இப்படி காட்டில் விட்டபின் ராணாவும் வருந்தினான். மீரா சாதுக்க ளுடன் சௌக்யமாக இருப்பது அறிந்து சிறிது ஆறுதலடைந்தா லும் சாதுக்கள் பிருந்தாவன யாத்திரையைத் தொடர ப்போகும் செய்தி யறிந்து வருந்தினா ன். ஊதாவும் தன் கொடுஞ் செயல்களு க்கு வருந்தி னாள். மற்ற ராணிகளும் மீரா இல்லாத அரண்மனை நன் றாகவே இல்லை எனக் கூறினர். ரகுநாதராவ் தன்னை பகிஷ்கரித்திரு ப்பது வேறு ராணாவின் மனத்தை வாட்டியது. எனவே மீராவை காட்டி லிருந்து வர வழைத்து சமாதானம் செய்து முன்போல் கிருஷ்ணாலய த்தில் பஜனை செய்ய அனுமதித்தா ன். பகவானுடைய லீலா விநோதத் தால் ராணாவுக்கு ஸத்வகுணம் மே லிட்டு மீராவிடம் நல்ல நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. முன்போல ஆலயத் தில் ஜனங்கள் கூடிவிட்டனர். இவ்வாறு பல மாதங்கள் கடந்தன. ராணா வுக்கு மீரா தன் மனைவியாக நடக்காததும் அலௌகீகமான கிருஷ்ண பக்தியில் ஈடுபட்டிருப்பதும் அலுப்பையும் வெறுப்பையும் தந்தது.

ஒரு விஜயதசமியன்று ராணா அவளை சபைக் கு அழைத்திருந்தான். மீராவும் விசேஷ ஆடை அலங்காரங்களுடன் புறப்பட்டான். தோட்டத்தி ன் நடுவே இருந்த கிருஷ்ணாலயம் அவளை அழைத்தது போலிருந்தது. ஆகவே தர்பாருக்குப் போகாது கிருஷ்ணாலயத்துக்கே போய்விட்டா ள். கிரிதாரிமுன் வீணையை மீட்டிக்கொண்டு கீர் த்தனம் தொடங்கிவிட்டாள். மக்களும் கூடி விட் டனர். பஜனம் விண்ணைப் பிளந்தது. ராணாவு க்கு இது ஒரு பெருத்த அவமானமாகப்பட்டது. உடனே வீரர்களைக் கொ ண்டு பஜனையை நிறுத்த முயன்றான். ஆனால் உன்மத்த நிலையிலி ருந்த மக்கள் அந்த வீரர்களைப் பொருட் படுத்தவில்லை. குண்டுவீச்சும் பலனளிக் கவில்லை என்றதும், கோவிலோடு மீரா வையும் சேர்த்து பீரங்கியால் தகர்க்கும் படி உத்தரவிட்டான். நாலாபுறத்திலிருந் தும் பீரங் கிகள் தாக்கியதால் கோவில் இடிந்து விழ ஆரம்பித்தது. ஆனால் ஜன ங்களின் “மீரா ப்ரபோ கிரிதாரி” என்னும் பஜனம் மட்டும் ஒலித்துக் கொண்டேயி ருந் தது. மீரா வீணையும் கையுமாக கிரிதாரியின் சரணகமலங்களில் வீழ்ந்தாள். வெறி பிடித்த ராணா கிருஷ்ணாலயத்தைப் பொடிப் பொடி யாக்கி விட்டு அரண்மனைக்குத் திரும்பி விட்டான். மூர் ச்சை தெளிந்து எழுந்த மீரா தன்மீது ராணா கொண்ட கோபத்து க்கு இவ்வளவு பேர் பலியானது குறித்து வருந்தி நீண்ட நேரம் கிரிதாரியிடம் அழுது புலம்பினாள்; மயக்கமுற்றா ள். பின் எழுந்தவள் கிரிதாரியைத் தூக்கி மடியில் கட்டிக் கொண்டு தம்பூராவையும் எடுத்துக் கொண்டு “கிரிதாரி கிரிதாரி” எனக் கத்திக் கொண்டு தலை விரி கோலமாக “தேரிதோ கன் ஹார் கோயி நஹி” எனப் பாடிக்கொண்டு பிரவாகமாகப் போய்க் கொண் டிருந்த யமுனையை நோக்கி ஓடி அதில் குதித்தாள்.

பொழுது புலர்ந்தது. யமுனைக் கரையி ல் பல பெரியவர்கள் நீராடிக்கொண் டும், மந்திரங்களை உச்சரித்துக் கொ ண்டும் இருந்தனர். அதில் ஒரு மகான் சூர்யனை நோக்கி கரம் குவித்து இடுப்பளவு ஜலத்தில் நின்று அனுஷ் டானம் செய்து கொண்டிருந்தார். வய தான பாகவதரான அவர் காலில் ஏதோ பொருள் மோதியது. அது ஒரு யுவதியின் சரீரம். அவர் போட்ட சப்தத்தி ல் மேலும் சில சாதுக்கள் கூடி அந்தப் பெண்ணைக் கரையில் இழுத்துப் போட்டனர். பரம ஸாத்வியாகத் தெரிந்த அவளது இடுப்பில் ஏதோ பொருள். அந்த மூட்டையை அவிழ்த்தால் அது ஒரு கிரு ஷ்ண விக்ரகம். அந்த மகானான மகாத்மா ரைதாஸ் அது தான் மீராவுக்குக் கொடுத்த கிரிதாரி விக்ரகம் என நினைவுக்கு வந்த வராக அவள் மீரா எனக் கண்டு கொண்டு “இவளை இக்கதிக்கு ஆளாக்கினாயா, கிரி தாரி” எனப் புலம்பி அவள் மூர்ச்சித்திருப் பது கண்டு கிருஷ்ண கீர்த்தனம் செய்ய ஆர ம்பித்தார். மீரா மெல்லக் கண் விழித்தாள். தான் இருப்பது பிருந்தாவனம் என அறிந்து மறுபடி மூர்ச்சித்தாள். இவ்வாறு ஏழு நாள் கள் கடந்தபின் தன்னைக் காப்பாற்றி போ ஷித்து வருவது மகாத்மா ரைதாஸ் என அறிந்து மகிழ்ந்தாள். அவருக் குப் பணிவிடை செய்து கொண்டு அவருடனும் சாதுக்களுடனும் கிரிதா ரியின் பூஜையி லும் கீர்த்தனத்திலும் நிம்மதியாக காலம் கழிக்கத் தொ டங்கினாள். மீரா இடுப்பில் காவித்துணி உடுத்தி, கழுத்தில் துளசிமணி மாலையணி ந்து பிருந்தாவனம் முழுவதும் வைராகிணி யாக அலைந் தாள். வைராக்ய மே வடிவாக இருந்தாள். இவள் நிலைகண்ட கௌடீய வைஷ்ணவர்கள் மீராவைத் தங்கள் மடத்து க்கு அழைத்துச்சென்று ஸ்ரீகிருஷ்ண சைதன் ய மஹாப்ரபுவின் திருவுருவை ஸ்ரீகிருஷ்ண விக்ர கம் எனக் காட்டினர். காவி உடுத்திய அந்த உருவம் மீராவின் பிரார்த்தனைக்கு இசைந்து அழகான பீதாம்பரம் தரித்த கிருஷ் ண விக்ரகமாகவே ஆயிற்று. சிறிது நேரத்தில் மறுபடி சைதன்ய மூர்த் தியாகவே மாறியது. அன்றிரவு அங் கே தங்கி பின் ஜீவகோஸ்வாமியின் ஆஸ்ரமத்துக்குச் சென்றாள். ஸ்வாமிகள் கிருஷ்ண தியானத்திலிருந் தார். அவரது சிஷ்யர்கள் மீராவைத் தடுத்து ஸ்வாமிகள் பெண்களுக்கு த் தரிசனம் கொடுப்பது வழக்கம் இல்லை என்றனர். மீராவோ “பிருந் தா வனத்தில் யாவருமே பெண்கள் தான். ஏனெனில் இது ஒரே பரம புருஷனான ஸ்ரீகிருஷ்ணனின் அந்த ப்புரம். வைராக்ய நிஷ்டைக்கு அந்த ப்புரம் தானா உங்கள் குருவுக்குக் கிடைத்தது?” என்றாள். இது கேட்டு கோஸ் வாமியே வெளியே வந்து மீராவை ப் பணிந்தார்.

பலவருடங்கள் மீரா பிருந்தாவனத்திலேயே தங்கி சாதுக்களுடனும், மற்ற ஜனங்களுடனும் யமுனைக் கரையிலுள்ள பாங்கே விஹாரியின் ஆலயத்தில் தன் இனிய கீதத்தினால் அவர்கள் மனத்தைக் கவர்ந்தாள். எங்கும் இனிமை குடி கொண்டிருந்த பிருந்தாவனத்தில் மீரா தன்னு டைய காதலனான கிரிதாரியுடன் விளையாடிக் கொண்டும், தன் பவித்ரமான அன்பினாலும், பக் தியாலும் சாதுக்களுக்குத் தாயாராக விளங்கிக் கொண்டும் இருந்தாள். இவ்வாறு இருக்கும்போ து ஒருநாள் ஒரு பாகவத கோஷ்டி வீணை, மிரு தங்கம், தாளம் முதலிய வாத்ய கோஷங்களுட ன் ஹரிநாம கீர்த்தனம் செய்து கொண்டு அங்கு வந்து “இங்கு மீரா என் னும் ஒரு கிருஷ்ணதாசி இருக்கிறாராமே, அவரைச் சேவிக்க வேண்டு ம்” எனக் கேட்டனர். மீராவும் தான்தான் அது எனக்கூறி அவர்களைப் பணிந்தாள். அவர்கள் அவளைத் தங்கள் ஊரான த்வாரகைக்கு அழை த்தனர். அங்குள்ள கிருஷ்ணாலயம் வெகு நாள்களாக பூட்டப்பட்டிருப்ப தாகவும், யாராவ து பரமபக்தர் வந்தால்தான் த்வாரகாநாதன் மனம் கனிந்து கோவிலைத்திறப்பான் என்றும் கூறி, த்வாரகாநாதனே அவளை அழைப்பதா கக் கூறினர். மீராவும் அதை கிரிதாரியின் அழைப்பாக ஏற்று ப் புறப்பட்டாள்.

வந்த சாதுக்கள் சிலநாள்கள் பிருந்தாவனத் தில் தங்கியபின் மீராவுடனு ம் இதர சாதுக்களுடனும் த்வாரகைக்குப் புறப்பட்டனர். ஒரு பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட கிரிதாரியையும், குதி ரை, யானை, ஒட்டகம் முதலி யவற்றில் சாமான்களையும் ஏற்றி க்கொண்டு பாக வதர்கள் மீராவின் தலைமையில் பஜ னை செய்து கொண்டே புறப்பட்டனர். அதற்கான வசதிகளை பல தேசத்து அரசர்கள் செய்து கொடுத்தனர். நூற்று க்கணக்கான சாதுக்கள் வாத்ய கோஷங் களுடன் பஜனை செய்து கொண்டு கிரா மங்கள், நகரங்கள், வனங்கள், மலைகள், நதிகள் யாவற்றையும் கடந்து சென் றனர். வழியெங்கும் பூர்ணகும்ப வரவே ற்பு. பலர் தங்கள் குடும்பத்துடன் மீராவைத் தொடர்ந்து புறப்பட்டு விட் டனர். யாவரின் நாவிலும் மீராவின் கீதங்கள்தான். த்வாரகையில் ஆயி ரக்கணக்கான மக்கள் கூடி மீராவை வரவேற்றனர். மீராவின் அன்பு உள் ளத்தில் அகங்காரம் சிறிதும் இல்லை . தனக்கு வரும் புகழெல்லாம் கிரிதா ரிக்கே என்றிருந்தாள். பல ஆண்டுக ளாகப் பூட்டிக் கிடந்த த்வார காநாத னின் கோவில் கர்ப்பகிருஹ த்தை மீரா எல்லாருடனும் அடைந் தாள். கதவைத் திறந்து தரிசனம் தரு ம்படி மீரா தன் பிரபுவைப் பிரார் த்தித்துக் கீர்த்தனம் பாடினாள். மீராவின் “நான் பட்டதெல்லாம் போதும். என்னை உன்திருவடியில் சேர்த்துக் கொள்ளலாகாதா?” என்னும் கோஷம் கோ விலெங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தபோதே திடீரென கர்ப கிரு ஹத்தின் மணிக்கதவம் கணகண வென மணி ஓசை கேட்க படீரென தா ள் திறந்தது. “ஹா ப்ராணநாதா !” எனக் கதறிக்கொண் டே மீரா உள்ளே ஓடி த்வாரகாநாதனை ஆலிங்கனம் செய்து கொண்டாள். அவனும் மீராவின் கை பிடித்து அழைத்துக்கொண் டு மறைந் தான். மீரா ஜ்யோதி ஸ்ரூபமாக அவனது நீல ஜ்யோ தியில் கலந்தாள்.

கோலோகநாதனின் நித்யதாசியான சம்பகவல்லி என்னும் அந்த கோபி கை பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ் ணபக்தியைப் பரப்ப மீராவாக ஆவிர்பவித்து தன் தெய்விகக் கடமையினை முடித்து தன் பிராணநாத னுடன் மறுபடி நிகுஞ்ஜலீலை புரியச்சென்றுவிட்டா ள்.

– க.ஸுந்தரராமமூர்த்தி, அம்மன் தரிசினம் (படங்கள் கூகுள்)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: