Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நம்மில் எத்தனைபேர் இன்பமாக வாழ்கிறோம்! – சத்குரு ஜக்கி வாசுதேவ்

க‌ணவன் மனைவி உறவு எப்ப‍டி இருந்தால், நன்றாக இருக்கும்!

“இரண்டு உயிர்களுக்கிடையே பாராட் டும், கொண்டாட்டமும் காணாமல் போன பிறகு, அவர்களிடையே இருக்க க்கூடிய உறவுநிலையில் என்னதான் அழகு இருந்துவிட முடியும்? கணவ ரோ அல்லது மனைவியோ எந்தத் தன் மையுடன் இருக்கிறாரோ அவரை அத் தன்மையுட னேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவி ல்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படி யிருக்கும்?”

மேலே சொல்லப்பட்டது நான் எழுதிய வரிகள் இல்லை. இவை சமீபத்தில் நான் படித்த கட்டுரையில் அமைந்தி ருந்த அரு மையான வரிகள். சத்குரு ஜக்கி வாசு தேவ்தான் இப்படி எழுதியிருந்தார். ஒரு கணவன் மனைவி உறவு எப்படி இருந்தால் நன்றாக இரு க்கும் என்று மிக அரு மையாக கூறி இருந்தார்.

அவர் சொல்ல வருவதாவது – கணவனையோ மனைவியையோ நாம் அப்படியே ஏற்றுக் கொள் வது மட்டும் போதாது. சின்ன சின்ன விஷயங்க ளையும் பாராட்டிக்கொண்டும் கொண்டாடிக் கொண்டும் இருந்தால் தான் இல்லற வாழ்க்கை இன்பமாக இருக்கு ம்.

இதை படித்து விட்டு என் மனைவியிடம் பரிமாறிக்கொண்ட போது, உனக்குத்தான் சொன்னார் இல்லை உனக்குத் தான் சொன்னார் என்று ஒரு செல்லச்சண்டை போட்டு விட்டோம்!

காதலிக்கும் போதோ அல்லது கல்யாணம் ஆன புதிதிலோ இதை கடை பிடிக்க கூட தேவையில் லை. பாராட்டுவதும் கொண்டாடுவதும் இயல்பா கவே நடந்து விடுகிறது. ஆனால் இதை தினம் செய்ய இயலுமா? இயன்றாலும் இதுபோல் இருந் தால் ஒரு போலித்தனமோ அலுப்போ தட்டிவிடா தா? இரண்டு பேரும் தத்துவ ஞானிகளாக இருந் தால் இயலு மோ என்னவோ! அப்படி இருந்து விட்டால் தான் பாராட் டுக்கு தேவையே இருக்கா தே!

படித்தவுடன் ஆஹா என்று சொல்ல வைத்த சத்குருவி ன் கருத்து யோசித்து பார்த் தால் நடைமுறைக்கு சாத்தி யமாக வருமோ என்ற சந்தே கமே பட வைத்தது.

சரி, கண்ணதாசன் என்ன சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம். இந்த பாடல் வரிகள் அனைவருக்கும் தெரிந்ததே.

“நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண் டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண் டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண் டும் நானாக வேண்டும்”

அதாவது, ஈருடல் ஓர் உயிராக இருக்க வேண் டும் என்று சொல்லி இருக்கிறார். இப்படி இல்லா விட்டாலும் கணவனு ம் மனைவியும் ஒருவருக் கு ஒருவர் குறிப்பறிந்து நடந்து வந்தாலே கவிஞர் அவா நிறைவேறி விடும். இது தான் திருமணத்துக்கு முன் நம் அனைவ ரின் எதிர்பார்ப்பும் கூட.

ஆனால் லட்சத்தில் ஒருவருக்கு இப்படி அமையு மோ என்னவோ! கவி யரசருக்கே இப்படி வாய்க்க வில்லை. வாய்த்து இருந்தால் பல திருமணம் கண்டிருக்க மாட்டார்!

தத்துவ ஞானிகளும் சிந்தனை சிற்பிகளும் ஆதர்ச உறவை பற்றி எளிதாக சொல்லி விட்டா ர்கள். அவர்கள் சொன்னது ஆதர்ச மனிதர்களு க்கே இயலும் என்று பட்டது. பாமர மக்கள் இல்லறத்தில் இன்பம் காண் து எப்படி?

பாமரமக்கள் என்றதும் நினைவுக்கு வந்தவர் சாலமன் பாப்பையா தான். அவர் திருக்குறளுக்கு எழுதிய உரை யை புரட்டிய போது கிடை த்த முத்துக்கள் இதோ.

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற் கின்பம் கூடி முயங்கப் பெறின் – இது வள்ளுவரின் குறள்.

காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே – இது பாப்பையா வின் உரை.

அதாவது, சண்டை போடுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது. அளவுகடந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண் டும். அளவு கடந்தால் நஞ்சாகி திரு மண வாழ்க்கை பஞ்சாகி விடும்!

அளவாக சண்டை போட்டு விட்டு வெட்டிக் கொள்ளாமல் கட்டிக் கொ ண்டு விட்டால் இல்லறத்தில் இன்பமே!

*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*-*

இன்னும் சில வழிகள் இருக்கு!

திருமணமான புதிதில் வாழ்க்கை எல் லோருக்குமே இனிக்கத்தான் செய்கிற து. சில வருடங்களில் வாழ்க்கை கசந் து மணமுறிவு வரை சென்று விடுகிறது. நம்மில் எத்தனை பேர் இன்பமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின் றோம் என்று கேட்டால் யாருமே சரியா ன பதிலை கூற முடியாது. முன்னோ ர்கள் கூறியுள்ள சில எளிய வழிகளை பின்பற்றி னாலே இல்லறம் இனிக்கும். விட்டுக் கொடுப் பவர்கள் கெட்டுப்போ வதில்லை என்று ஒரு அழகான பழமொ ழி உண்டு. இது எதற்கு பொருந்துகி றதோ இல்லையோ இல்லற வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு மிகவும் இன் றியமையாதது.

விட்டுக்கொடுங்கள்

ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழப்பழகினா ல் கசப்புணர்வு தோன்ற வாய்ப்பு இல்லை. ஒருவரின் விருப்பத்தை மற்றவர் அலட்சியப்படுத்தாதீர்க ள். ரசனைகள் ரசிக்கத்தான். ரக ளைக்கல்ல. நம்முடைய வாழ்க் கைத்துணையை நாம் தான் உயர் த்திப் பேச வேண்டும். அழகு, அறி வு, பொருளாதாரம் எதுவாகிலும் மற்றவர்களுடன் குறிப்பாக அலு வலகத்தில் பணியாற்று பவர்களுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். இது தான் விரிசலுக்கான முதல் விதை.

அன்பை பரிமாறுங்கள்

பிறர் முன்னால் கடுமையான வார்த்தைக்களைப் பேசி காயப்ப டுத் தாதீர்கள். அன்பான வார்த் தைகளை மட்டுமே உபயோகிங் கள். சந்தோசமான தருணங்களி ல் மட்டுமல்லாது சங்கடமான தருணங்களிலும் அன்புதான் வாழ்க் கையின் ருசியை உணர்த்தும் மந்திரம். நிறைய பேசுங்கள். ஒருவர் மட்டுமே பேசி போரடிக்காமல் மற்ற வர் பேசுவதையும் காது கொடு த்து கேளுங்கள். முடிந்த வரை இருவரு மே சேர்ந்து சாப்பிடுங்கள். அட்லீ ஸ்ட் டின்னர் மட்டுமாவது சேர்ந்து உணவருந்துங்கள். வயதா கிவிட்ட து என்று வருத்தப்படாமல் அழகில் கவனம் செலுத்துங்கள். பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற் றை நினைவில் வைத்து சின் ன சின்ன பரிசுகளை தருவது நேசத் தை அதிகரிக்கும்.

மாதானம் ஆகுங்கள்

எந்நேரத்தில் சண்டை போட்டா லும் பரவாயில்லை, படுக்கைய றைக்குள் சண்டையை அனுமதி க்காதீர்கள். அங்கு செல்லும் முன் சமாதான மாகி விடுவது நலம். எதுவென்றாலும் முதல் சாய்ஸ் உங்கள் இல்லத் துணை க்குத்தான். பிறகு தான் குழந்தைகள், உறவினர்கள். தினமும் இர வில் பொதுவாக மனம் விட்டுப்பேசுங்கள். ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக் கொள்ளுங் கள். பிறகு பாருங்கள் இந்த மந்திர வார்த்தையின் மகி மையை. எதுவென்றாலும் மு தல் சாய்ஸ் உங்கள் இல்லத் துணைக்குத்தான். பிறகுதான் குழந்தைகள், உறவினர்கள். இந்த ஐடியாவை பின்பற்றி பாரு ங்க இல்லறம் நல்லறமாய் இனிக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: