Wednesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களுக்கு திருணமாகி ஓராண்டு ஆகிவிட்ட‍தா..? – குழந்தைபேறு கிடைக்க‍வில்லையா?

திருமணமாகி ஒரு வருடம்   ஆகி விட்டது. இன்னும் பெண் வயிற்றி ல் ஒரு புழு, பூச்சி தங்கவில்லை என்று மாமியாரும் அம்மாவும் கவ லை பட ஆரம்பித்து புலம்ப ஆரம்பி த்து விட்டார்களா ?

இயல்பாக கரு உருவாதில் குழந் தைப்பேறு கிடைப்பதில் ஆணுக்கு ம், பெண்ணுக்கும் மருத்துவ ரீதியா கச் சம பங்கு உள்ளது.

இப்பொழுது உங்கள் பிரச்சனையை ஆராய்வோம் .

ரம்ப நிலையில் தம்பதிகள் அறிய வேண் டியவை-

திருமணமானவுடன் இப்பொழுது குழந்தை வேண்டாம் என்று நினை த்து சிலர் மாத்திரை, காண்டம் (காப்புறை -நிரோத்) உபயோ கித்து இருக்கலாம் .

நீங்கள் செக்ஸ் செய்தால் குழந்தை ஆகி விடும் என்று நினைத்து   சரியான உடலுறவில் ஈடுபடாமல்   தனித்து இருக்கலாம் .

முறையான உடல் உறவு பற்றி தெரியாததால் உங்கள் உறவு முழு மை அடையாமல் இருக்கலாம் .

விந்து பெண் உறுப்பின் முன் பகுதி யிலேயே விடப்படுவதால்  அது பெ ண் எழுந்து நிற்கும் பொழுதும் ,திரு ம்பி படுக்கும் பொழுதும் உள்ளே செல்லாமல் வெளியேற லாம் .

பெண் உறுப்பின் உள்ளே ஆண் உறுப்பை  செலுத்த முடியாமல் முன் பகுதியிலேயே விந்து வெளிப் பட்டு உறவு முடியலாம் .

ஆண் உறுப்பு   விறைப்பு தன்மை குறைவாக இருப்பதால் பெண் உறு ப்பில் நுழைக்க முடியாமல் இருக்கலாம் .

வலி என்று பெண் சொல்லி விட் டால் ,அவள் முகம் சுருக்கினா ல், பயப்பட்டால் ,முணகினால்,வெளியே யாரோ பேசுவது கேட்டல், போன் அடித்தால், அன்றைய தினம் நடந்த காரியங்கள் மனதில் நினைவுக்கு வந்தால் ,பெண் கோ பமாக, கவலையாக, அதிருப்தியா க இருந்தால், வீட்டில் சண்டை   நடந்திருந் தால். இன்று குழந்தை ஆகும் தினம், பெண்ணுக்கு மாத விலக்கு ஆகி   14ம் நாள்  ,இன்று முக்கியம் நீங்கள் செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர் சொல் லி, மனைவி அதை வேதவாக்கா க கருதி காத்திருந்தால் ,வேலை விசயத்தில் கவலை ,பண பிரச்ச னை ,  இப்படி ஆண் உறுப்பு விறைப்புடன் உறவில்  நீடிக்க முடியாமல் செய்ய பல காரணங்கள் உண்டு.

இப்படி பாதியில் துவண்டு போகும் ஆண் உறுப்பு காரணமாக  பல நேரங்களில் விந்து வெளியேற்ற இயலாமல்  மனம் கவலை அடையலாம் .இதை பெண் தெரிந்து கொண் டு பல கேள்விகள் கேட்கும் பொழுது தனக் கே தெரியாத ஒரு பிரச்சனைக்கு பதில் சொ ல்ல முடியாமல் தவிக்கலாம். இல்லை பெண்ணுக்கு தெரியாமல் இருக்கட்டும் என்று நிலைமையை  சில காலம் சமாளி க்கலாம் .

இப்படி இல்லாமல் உறவு என்பது பாதியில் முடிவடைந்து   விந்து வரும் முன்பே ஆண் உறுப்பு சுருங்கி விடலாம் .எவ்வளவு நேரம் செய்தாலும் விந்து வரமறுக்க லா ம் .

மேற்சொன்ன இவை எல்லாம் சூழ்நிலை சிக்கல்களால் உண் டாகும் விறைப்பு  குறைபாடுகள் . இதை  ஆங்கிலத்தில் erection – எரக்சன்-weakness என்று சொல் லுவர்.

பெண்களின் உடல் மனம் பிரச்சனை காரணமாக குழந்தை உண்டா வது தாமதம் ஆகலாம்.

பெண் உடலுறவிற்கு பயந்து ஆணின் உறுப்பு உள்ளே செல்லாத வண்ணம் கால்களை இறுக்கி வைத்தும் அடி வயி ற்றை எக்கிப் பிடித்தும் பயத்தால் உறவில் இடு பட மறுக்கலாம்.

உடலுறவு பற்றிய விவரம் தெரியாததால் சரியான உறவை தெரிந்து பழகி செய்ய ஆரம்பிக்கும் பொழுதே 2 -3  வருடங்கள்  ஓடி இருப்பதை பல தம்பதிகளில்  நாங்கள் பார்த்திருக் கிறோம் .

பல பெண்கள், ஆண் உறுப்பை பார்த்து பயந்து தன் உறுப்பில் உள்ளே செலுத்தும் பொது தன க்கு ஏதோ நேர்ந்து விடுமோ? என்றும் தன் உறுப்பின் தோல் கிழிந்து ரத்தம் வருமோ என்று பலகதைகளை தன் தோழிகள் சொல்லக்கேட்டு உறவில் ஈடுபடுவதை   தவிர்க்கின்றன ர் .

சில பெண்களுக்கு கன்னித்திரை என்னும் hymen லேசாக இல்லாம ல் தடித்து தசை நார்போல் இருக்கும் . இவர்கள் தான் என்ன முயன்றாலும் ஆண் உறுப்பு உள் ளே செல்லும் போது மரண வேதனையை அனுபவிப்பர் .

இந்த பெண்களுக்கு தக்க சோதனைக்குப் பின் அறுவை சிகிச்சை செய்து குணம் பெறலாம் .பெண் தனக்கு என்ன பிரச்னை இருந்தா லும் அதை இங்கே உள்ள பெண் மருத்துவரிடம் காண்பித்து ஆலோ சனை பெறலாம் .

எல்லா குறைபாடுகளும் தீர்க்க இங்கே சிகிச் சை முறைகள் உள்ளன. கருவுறுதல் சிறப்பு சிகிச்சை, இயற்கை கர்ப்பம்,

தை  எல்லாம் கடந்து பின்னும் உங்க ளுக்கு குழந்தை உண்டாகவில்லை யா ?

ஆண் சார்ந்த விஷயங்கள்-

ஆண் தன் விந்தணு அளவிலும் ஆரோ க்கியத்திலும் சிறந்து இருக் கிறதா என்று பார்க்க வேண்டும் .  விந்தணு ஓடும் தன் மை நன்றாக  இருக்க வேண்டும் .நிறம் முத்துபோல் பள பளப்பாக இருக்க வேண் டும். துர்நாற்றம் இருக்க கூடாது. இதை பரிசோதனை மூலம் தெரிந் து கொள் ளலாம் .

ஆண் தன் உறுப்பின் மேல் தோல் எனப்படும் foreskin -உறுப்பின் முன் மொட்டுப்பகுதியின்  மூடி — திறந்து முடும் படி இருகிறதா  என்று பார்க்க வேண்டும் .50  வயது கடந்த சில ஆண்கள் கூட இந்த முன் தோல் திறக்காத நிலையில்  தங்கள் செக்ஸ் வாழ்க்கையை முழு மையாக அனுப விக்காமல் ஏதோ வேறு காரணமாக டெஸ்ட்க்கு வருவதை இங்கே பார் த்திருக்கிறோம்.  இந்த மேல் தோல் ஆண் உறுப்பு  எளிதாக முழுதும் பெண் உறுப்புக்குள் போவதை  தடுக் கும் .இதனால் விந்து  கர்ப்பப் பைக்கு அருகில் செல்லாது .இதனால் இன்பம் இருவருக்கும் குறைவதோடு பெண்ணுக்கு வலியை உண்டாக்கும்.

இந்த முன் தோல் பற்றி அறிய ஆண் டாக்டரை அணுகுங்கள் .

பெண் சார்ந்த  விஷயங்கள் –

பெண் எடை அளவுக்கு அதிகமாக வோ குறைவாகவோ இருப்பின் கருமுட்டை உருவாக்கும் ஆரோக்கியம் குறைந்து இருக்கும். மாத விலக்கு முறையாக மாதம் ஒருமுறை வர  வேண்டும் . பெண் உறுப்பில் வெள்ளை படுவது அளவுக்கு அதிகமாகவோ குறைவாக வோ ,அரிப்பு, துர்நாற்றம் ,மஞ்சள் நிறமாக ,உள்ளாடை கறை படிய , அரித்து ஓட்டை ஆகும் படி , படை ,சிரங்கு போல் தோல் மாறி இருந் தால் உடனே பெண் மருத்துவரை அணுகவும் .

கரு முட்டை உண்டாவதில் ,கருப் பை உள்ளே இருக்கும் மெத்தை போன்ற பட லம் அதிகமாக அல்லது லேசாக வளர் வது, கருமுட்டை சரியாக வெளிப்படாமல் கட்டி போல் இருப்பது, கருக்குழாய் அடைப்பு, ஹார் மோன் மாற்ற ம், அதிக உதிரப்போக்கு  போன்ற பல பிரச் சனைகள் பெண் கரு உண்டாவதை தடுக் கும்.

உங்கள் இருவரையும் பார்த்து பின்  நாங்கள் உங்களுடைய உடல், உடல் உறவு, மன ம் ஆரோ க்கியம் பற்றி தெரிந்து உங்களுக்கு தேவையான ஆலோசனை, சிகிச்சைகள் வழங்கு கிறோம் .

காலம் கடத்தாமல் எந்த மருத்துவம் நீங்கள் எடு த்திருந்தாலும் அதனுடன் கூட இந்த ஆராய்ச்சிக ளை செய்து வாழ்க்கையை மாற்றினால் குழந் தை கிடைப்பது உறுதி .

-மருத்துவர் S.K.சின்ன‍சாமி, M.Sc.,Dip.Acu.,DMHS.,(Medicinal herbalism), Sexologist

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: