Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல்முதலா அம்மா அப்பா ஆனவர்களே!!

குழந்தை என்ற பொக்கிஷத்தை பெற யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால் குழந்தை கருவாகி, உருவா கி, பெற்றெடுத்து அதனைவளர்ப்பது என்பது லேசு பட்ட காரியமில்லை. 9 மாத கர்ப்பக்காலத்திற்கு பிறகு பிரச வ வலி, பின் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்தல், உச்சா போக கற்று கொ டுத்தல், அதனை நல்ல படியாக வள ர்த்தல் என குழந்தைக்கு பெற்றோரா க இருப்பது ஒன்றும் லேசு பட்ட காரியம் இல்லை என்பதை நாங்கள் ஒப் புக்கொள்கிறோம். சொல்லப்போனால் வருடங்கள் கடந்து ஓடும் இது ஒரு நீண்ட அனுபவமாகும். ஆனால் இந்த கஷ் டங்களும் வலிகளும், உங்கள் குழந்தை உங்க ளை ‘அப்பா அம்மா’ என்று அழைக்கும் போதோ அல் லது முதல் அடி எடுத்து வைக்கும் போதோ பறந்து ஓடியே விடும்.

புதிதாக பிறந்த குழந்தையை பராமரிக்க அதிக அளவு உழைப்பும், ஆற்றலும் தேவைப் படுவது உண்மைதான். ஆனால் அதற்கு பிரதிபல னாக, உங்கள் குழந்தை உங்கள் முன் வளர்வ தை காணும்போது, அதற்கு ஈடு இணை எதவு மே கிடையாது. சரி, இப்போது புதிய பெற்றோ ர்களுக்கான சில குழந்தை பராமரிப்பு டிப்ஸ்க ளை கொடுக்கிறோம். அதை தெரிந்து கொண்டால், புதிய பெற்றோர்க ளாகிய உங்களுக்கு சற்று எளிமையாக இருக்கு ம்.

குழந்தை கக்கா போவதற்கு பல மணி நேரம் ஆக்கலாம்

உங்கள் குழந்தை வேகமாக கக்கா போக வே ண்டும் என்று எதிர்பார்க்கா தீர்கள். சில குழந் தைகள் இயற்கையிலேயே வேகமாக கழித் து விடுவார்கள். ஆனால் அதற்காக எல்லா குழந்தைகளும் அப்படி இருக்க வாய்ப்பில் லையே. உங்கள் குழந்தை மெதுவாககூட கக்கா போகலாம். ஆகவே ஆற அமர மெது வாக செல்லவிடுங்கள் என்று மருத்துவரான ஷில்பா கூறுகிறார்.

எலாஸ்டிக் உள்ள ஆடைகளே குழந் தையின் நண்பர்கள்

குழந்தைக்கு ஆடைகள் அணிவிக்கும் போதும் சரி, கழற்றும் போதும் சரி, அதற் கு நோகாமால் சுலபமாக இருக்க வேண் டும். பல குழந்தைகளுக்கு பட்டன் மற்று ம் ஜிப் வைப்பது அசௌகரியத்தை அளி க்கும். அதற்கு காரணம் அதை மாட்டவும், கழற்றவும் நேரம் பிடிக்கும். அதனால் குழந்தைகள் சுச்சு போகும் நேரம் எல்லாம் எரிச்சல் அடைவா ர்கள். அதனால் சுலபமாக அணிவிக்க ஒத்துழைக்கும் எலாஸ்டிக் ஆடைகளை பயன்படுத்துங்கள்.

புதியதொழில்நுட்பத்தை பயன்படுத்தி குழ ந்தையை பயமுறுத்தாதீர்க ள் 

நீங்கள் புதிய தொழில்நுட்பத்தை உபயோ கிக்க விருப்பப்படலாம். ஆனால் அது உங் கள் குழந்தையை பயமுறுத்தலாம். உதா ரணத்திற்கு, உங்கள் குழந்தையை கழிவ றைக்கு கூட்டிச் செல்லும் போது, தானாக தண்ணீர் விழும் தொழில்நுட்பம் இருந்தா ல், அந்த சத்தம் குழந்தையை பயமுறுத் தலாம். இந்த பயம் ஆழமாக படிந்துவிட்டால், அது குழந்தை கழிப்பறை யை பயன்படுத்தவே தயங்கும்.

குழந்தைகளுடன் அதிக நேரத்தை செல விடுங்கள்

குழந்தையின் கவனம் உங்கள்மீது விழ வேண்டும் என்று நீங்கள் எதிர் பார்ப்பீர்க ள். ஆனால் அதற்கு நீங்களும் உங்கள் நேரத்தை குழந்தையுடன் செலவு செய்ய வேண்டும் அல்லவா? அதற்கு உங் கள் குழந்தைக்கு எது சந்தோஷத்தை அளிக் குமோ, அதனை செய்யுங்கள். குழந்தையுடன் இருக்கும்போது, பல வே லைகளில் ஈடுபடாதீர்கள். அது உங்கள் உறவை பாதிக்கும் வகையில் அமை யும்.

மெத்தை விரிப்பை அடிக்க டி மாற்றியாக வேண்டும்

சில குழந்தைகள் மெத்தை யை நனைக்காமல் பழகுவ தற்கு சில நாட்கள் ஆகலா ம். ஒரு வேளை உங்கள் குழந்தை படுக்கையை ஈர மாக்கி விட்டால், அவர்க ளை பார்த்து கத்தாதீர்கள். அவர்களை ஆழ்ந்த நித் திரையில் இருந்து எழுப்பாமல் மாற்று விரிப்புகளை பயன்படுத்துங்கள். அவர்கள் நிம்மதி யாக தூங்கட்டும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்

உங்களுக்கு எண்ணிலடங்கா நல்ல நண்பர்கள் கூட்டம் ஒன்று இருக்கக் கூடும். அவர்கள் எல்லாம் ஒவ்வொரு திசைக்கு பறந்து போயிருக்கலாம். ஆனால் இப்போது உங்கள் நண்பர்க ளை நீங்கள் தேர்வுசெய்யப் போவதி ல்லை. உங்கள் குழந்தைகளே உங் கள் நண்பர்களை தேர்வு செய்யப்போகிறார்கள். இப்போதெல்லாம் உங் கள் குழந்தையின் நண்பர்களின் பெற்றோர்களோடு, விளையாட்டு மை தானத்திலோ அல்லது பள்ளியிலோ நீங்கள் பழகும் வாய்ப்பு கிடைக்கு ம்.

உங்கள் வீட்டின் அறைகள் குப்பை கூடமாக மாறும்

உங்கள் குழந்தை வளர வளர, அது உருளுவ து, தவழ்வது, நடப்பது என்று ஒவ்வொன் றையும் பார்த்து ரசிப்பீர்கள். ஆனால் உங்கள் குழந்தை நடக்க ஆரம்பித்து பொருட்களை உருட்ட ஆரம்பிக்கும் போது தான் கஷ்டமே ஆரம்பிக்கும்.அதிலும் குழந்தை சேட்டை செய்ய தொடங்கும் போது, வீட்டின் அறை கள் குப்பை கூடமாக மாறப் போவது உறுதி. திடீரென்று பார்த்தால், உங்கள் அலமாரி காலியாக இருக்கலாம், ஆடைகள் எல்லாம் தரையில் சிதறி கிடக்கலாம். அவர்களுக்கு கிடைக்கும் அனைத்தும் தரையில் சிதறி கிடக்கலாம்.

ஆனால் அப்போது அமைதியாக இருங்க ள். அதே சமயம் ஆபத்தான பொருட்க ளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் எப் போதுமே வைக்காதீ ர்கள்.

வயதிற்குவந்த பிள்ளைகளை விட, அதிக மாக உங்கள் குழந்தை சண்டித்தனம் செய்யலாம்

ஒவ்வொரு பெற்றோரும் தன் குழந்தைகள் செய்யும் சண்டித்தனத்தை பற்றி நண்பர்களுடன் பேசாமல் இருப்ப தில்லை. குழந்தைகள் என்றால் சண்டி த்தனம் இருக்கத் தான் செய்யும். ஆனா ல் ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஒரு எல்லையை விதித் து, அதற்கு அன்பையும், ஒழுக்கத்தை யும் கற்று கொடுக்க வேண்டும்.

கஷ்டமான வேலைகளைவிட, மகப்பே று விடுமுறை தான் கடினமாக இருக்கும்

மகப்பேறு விடுமுறையை அனைத்து வேலைகளையும் முடித்துவிட் டு பின் எடுப்பதற்கு திட்டம் போட் டு வைத்திருப்பீர்கள். பின் விடுப்பு தொடங்கும் முதல் நாள் தான் விடுமுறை உணர்வை பெறுவீர் கள். ஆனால் இந்நேரம் சாதாரண நேரம் கிடையாது. உங்கள் குழந் தையுடன் நேரத்தை செலவிட வே ண்டிய முக்கியமான தருணம் இது.

குழந்தையுடன் நீங்கள் இருக்கும் போது, எல்லாமே உங்களுக்கு இனி மையாக தோன்றும்

உங்கள் குழந்தையுடன் நீங்கள் செல விட்ட நேரங்கள் அனைத்தும் நீங்கா த நினைவுகளாக இருக்கும். அதிலும் அது அவர்களை பார்த்து நீங்கள் கத் தியதாககூட இருக்கலாம். ஒவ்வொ ரு பெற்றோருக்கும் இவை அனைத் தும் பசுமையான மறக்க முடியாத நினைவலைகளாகும். குறிப்பாக குழந்தையுடன் ஏதாவது சண்டையிட்டால், சிறிதுநேரத்தில் உங்களிடம் ஓடி வந்து உங்களை ஆற தழுவி கொண்டு, உங்கள் முகத்தில் முத்தமிட்டு உங் களுட ன் “ஐ லவ் யூ” என்று சொன்னால் எப்படி உணர்வீர்கள்? என்று யோசித்து பாருங்கள்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: