Friday, December 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆச்சரியம் அளிக்கும் “FACE BOOK-ன் வித்தியாசமான விதிமுறைகள்

உலகின் முதன்மையான சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ் புக் நிறுவனமானது அதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட் டோரை எந்த நேரத்திலும் எந்த காரண மும் இல்லாமல் நிறுவ னத்திலிருந்து நீக்கும் வகையில் அதன் விதிமுறைகள் வரையறுக்க ப் பட்டுள்ளன.

ஆச்சரியமாக இருக்கிறதா? பேஸ்புக் நிறுவனர் ஜூக்கர்பெக் தமது நிறுவனத்துடன் செய்தியிருக்கும் பணி நியமன ஒப்பந்தம் இப்படித் தான் சொல்கிறது…

பேஸ்புக் நிறுவனம் விரும்பும் வரை தான் அவர் அங்கு பணிபுரிய முடியுமா ம். நிறுவனம் நினைத்தால் வேலை யை விட்டுவிட்டுத்தான் வரவேண்டும் .

பேஸ்புக் நிறுவனம் கடந்த மாதத்தின் பிற்பகுதியில் பணியாளர்களுக் கான நியமன ஒப்பந்தத்தை பங்குச்சந்தையில் இறங்குவதையொட்டி மறு சீரமைத்ததில் இந்த் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

ணியின் தன்மை, லாபநட்ட விவகாரங்கள் போன்ற தற்போதைய விதிகள் நிரந்தரமான து அல்ல.. மாற்றத்துக்குரியது. இந்த மாற்றங் களை பேஸ்புக் போர்டு எழுத்துப்பூர்வமாக அங்கீகரித்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும்.

இது நிறுவனர் ஜூக்கர்பெர்க்குக்கு மட்டுமல் ல.. முதன்மை செயல் அதிகாரி செண்ட்பர்க்குக்கும் இதுபொருந்தும். நிதிப்பிரிவு தலைவர் டே விட் எம் பெர்ஸ்மன் மற்றும் துணைத் தலை வர் மைக் ஸ்க்ரோபெர் ஆகியோரு க்கும் பொருந்தும்,

இதேபோல் பேஸ்புக் நிறுவனத்துக் கு போட்டியாக மற்றொரு நிறுவன த் தை தொடங்கும் முயற்சியில் ஜூக்கர்பெர்க் ஈடுபடக்கூடாது என்பதுடன் போட்டி நிறுவனத்துக்கு எந்த ஒரு வகையிலும் உதவியாக இருக்கவும் கூடாது என்கிறது மற்றொரு விதி. ஆனால் இது பேஸ்புக்கில் பணிபுரியும் வரை மட்டுமே.

இவர்கள் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளியேறிவிட்டால் அவர் என்ன செய்வார் கள் என்பது பற்றி சொல்லப்படவில்லை.

நிறுவனர் ஜூக்கர்பெர்க்கு ஒரு ஆண்டுக்கா ன அடிப்படை சம்பளம் 5 லட்சம் டாலர். இதில் 45 சதவீதம் ஒரு ஆண்டுக்கான போன ஸ் தொகை.

திருமதி செண்ட்பர்க் மற்றும் எம்பெர்சன் ஆகியோருக்கு ஆண்டுக்கான அடிப்படை சம்பளம் 3 லட்சம் டாலர். ஸ்க்ரோபெருக்கான ஒரு ஆண்டு சம்பளம் 2 லட்சத்து 75 ஆயிரம் டாலர்.

இவர்களுக்கும் இவர்களது சம்பளத்தி ல் 45 சதவீதம் போனஸாக கொடுக்கப் படும்.

பேஸ்புக் நிறுவனத்தில் 4 முதன்மை நிர்வாகி களுக்கு மட்டுமே ஒரு ஆண்டு க்கு ரூ10 கோடி ஊதியமாக கொடுக்கப் படுகிறது

Leave a Reply