Sunday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ்க்கை துணையை தேடக் கூடாது. ஏனெனில் . . .!

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க பலவற்றை நாம் கையாளுகின் றோம். பெரும்பாலோனோர் தங்களின் வாழ்க் கை துணை அழகாக இரு க்கிறாரா என்பதை மட்டும் பார்த்து, அதோடு நின்றும் விடுகின்றனர். ஆனால் அது மட்டும் போதாது என்பதை, திருமணத் திற்கு பின்னர் அ னுபவத்தின் மூலம் பலரும் புரிந்து கொள்கின்றனர். நம்மில் பலர் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் போது செய்யும் பெரிய தவறு, நம் வாழ்க்கைத் துணை அழகாக இருக்கிறாரா என்பதை மட்டும் பார்ப்பது தான்.

ஆனால் மற்ற நல்ல அம்சங்கள் மற்றும் அவர்களின் இதர குணங்களை கவனிப்பதி ல்லை. அதற்காக வாழ்க்கைத் துணையின் தோற்றத்தை மட்டும் பார்த்து, இவர் தான் உங்களுக்கு ஏற்றவர் என்று கூறுவது தவ றல்ல. ஆனால் அது மட்டுமே எல்லாம் என் றாகிவிடாது. ஆகவே வெறும் வெளித்தோ ற்றத்தை மட்டும் பார்த்து எப்போதும் வாழ் க்கை துணையை தேட கூடாது. ஏனெனில் அது ஒரு சிறு சதவீதம் மட்டுமே. இப்போது வாழ்க்கை துணையாக வருபவரிடம் என்னென்னநல்ல பண்புகள் இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்ள கீழே படித்து பாருங்கள்.

நீங்கள், நீங்களாகவே இருப்பதனால் உங் களை விரும்புவார்கள்

நீங்கள் நீங்களாக இருக்கும் போதே, உங் களை விரும்பினால், அது வாழ் க்கை துணையின் நல்ல பண்பாகும். ஏன் இதை கூறுகிறோம் என்றால், சில பேர் தன் வாழ்க்கை துணை நல்லதை செய் தால் மட்டுமே விரும்புவார்கள். தங்கள் வாழ்க்கை துணையின் மற் றொரு முகத்தை காண அவர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இது வே நல்ல பண்புள்ள வாழ்க்கை துணையாக இருந்தால், நீங்கள் எப்படிபட்டவராக இருந்தாலு ம் உங்களை  விரும்புவதோடு, கஷ்ட காலங்களி ல் உங்களுக்குதோள்கொடுப்பார்.

தன் வார்த்தையை காப்பாற்றுவார் கள்

நல்ல வாழ்க்கை துணை கஷ்ட கால ங்களின் போது நழுவாமல் இருப்ப தோடு, கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றுவார்கள், அது தொலை பேசியில் அழைப்பதாகட்டும் அல் லது வெளி யில் அழைத்து செல்வதாகட்டும். ஒருவேளை கொடுத் த வாக்கை நிறைவேற்ற முடியாவிட்டா ல், அதற்கான பொறுப்பான காரணத்தை தெரி விப்பாரே தவிர, சிறு பிள்ளைத்தன மான காரணத்தைக் கூற மாட்டார்கள்.

பக்கபலமாக இருத்தல்

ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களின் வளர்ச்சியை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். அந்த புரிதல் குடும்ப உறவை மீறி, உங்களின் அலு வலக முன்னேற்றத்திலும் கூட. மேலும் உங்களின் வெற்றியை அவருடைய சாத னையாக கருதுவார். அதுமட்டுமல்லாம ல், உங்களின் வெற்றிக்கு உங்களை ஊக் கப்படுத்த முற் படுவார்.

தன் காதலை காலநேரம் பார்க்காமல் வெளி காட்டுவார்கள்

ஒரு நல்ல துணை என்பவர், கால நேரம் எது வும் பார்க்காமல், தன் காத லை வெளிப்படுத் துவார்கள். மேலும் தன் காதலை உடனுக்குடன் வெளிப்படுத்துவார்க ள். அதுமட்டுமின்றி, இந்த உலகத்திலேயே மிகவு ம் அழகானவராக, வசீ கரமுள்ளவராக, தனித்தன்மை உள்ளவராக உங்களை கருதுவார்கள். மற்ற அழகான நபரை கண்ட போதிலும், அவர் மனதில் நீங்கள் மட்டும் தான் குடி கொண்டிருப்பீர்கள்.

பொறுமையுள்ளவராக இருப்பார்கள்

ஒரு உண்மையுள்ள வாழ்க்கைத் துணை , எப்போதும் அவருடன் இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்ய மாட் டார்கள். அப்படிப்பட்ட காரியங்களிலும் அவர்கள் ஈடுபட மாட்டார்கள். மேலும் எப்போதும் வலுக்கட்டாயப்ப டுத்தாமல், உங்கள் மனதை கவர, அவ ர்களின் காதலை நீங்கள் புரிந்து கொள் ளுமாறு நடந்து கொள்வார்.

தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வார் கள்

ஒரு நல்ல வாழ்க்கைத் துணை என்ப வர், தங்கள் தவறுகளை ஒப்புக்கொண்டு அதற்காக உடனடி யாக மன்னி ப்பும் கோருவார்கள். இதுவே தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளாமல், உங்கள் மீது பழியைபோட நினைப்பவர் வாழ்க்கை துணையாக வந்தால், கண்டி ப்பாக அவர் உங்களுக்கு ஏற்றவராக இரு க்க முடியாது.

உங்களுக்காக எப்போதும் நேரம் ஒதுக்கு பவராக இருப்பார்கள்

எவ்வளவு தான் வேலைப்பளு இருந்தா லும் சரி, ஒரு நல்ல வாழ்க்கை துணை, உங்களுக்காக தன் நேரத்தை ஒதுக்க தவறமாட்டார்கள். சாரி, வே லையில் பிசியாக இருந்துவிட்டேன்” என்ற வாக்கிய த்தை நல்ல வாழ்க்கை துணையிடம் இருந்து எப்போ தும் கேட்கவே முடியாது. ஏனென்றால் அவர் உங்களு டன் இருந்தால், மலையை அசைக்கலாம், கண்டம் விட்டு கண்டம் தாண்டலாம், நாடு விட்டு நாடு பறக்க லாம் என்ற எண்ணங்கள் அவருக்கு ஏற்படும் என்பதா ல் தான்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply