தெலுங்கில் முன்னணி நடிகையான இலியானா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமாகி,. பின் இயக்குநர் சங்கர் இயக்கத்திற்கு நண்பன் பட த்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார் தற் போது பாலிவுட்டிற்கு தாவியுள்ளார் இலியானா இதுகுறித்து அவர் கூறுகை யில், இந்தி படங்களில் நடிக்க சென்ற தால் மீண்டும் தென்னிந்திய படங்களி ல் நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள்.
இதே கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் 6 வருடம் தொடர்ந்து நடித்தி ருக்கிறேன்.இது எனக்கும் மிக நெருக்க மான இடம். எனக்கு மாற்றம் தேவைப் பட்டது. தென்னிந்தியா வில் என்ன நிலை அடையவேண்டுமோ அதை அடைந்திருக் கிறேன். தற்போது எனது நடிப்பு எல்லை யை விரிவுபடுத்த விரும்புகிறேன். பெரிய நடிகை ஆவதற்கு எந்ததிட்டமும் வகுத்து வைக்கப்படவில் லை. திட்டத்தோட வந்த சிலர் காணாமல்போய் இருக்கிறார்கள். சினிமா ஒவ்வொரு நாளும் ஆச்சரியத் தை அளிக்கிறது. திட்டம் வகுத்து செயல் படுவதெல்லாம் வேலைக்கு ஆகாது. என் னை நான் நம்புகிறேன். எது திருப்தி அளிக்குமோ அதைத்தான் செய்கி றேன். இதுவரை அது எனக்கு ஒர்க்அவுட் ஆகிஇருக்கிறது. எதிர்காலத்தி லும் அதைத்தான் செய்வேன். இந்தியை பொறுத்தவரை பர்பி படம் மட்டும்தான் நடித்தி ருக்கிறேன் என்கிறார் இலியானா.