Sunday, November 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மாப்பிள்ளை கழுத்தில் தாலிக்கட்டிய புரட்சிப் பெண்!

தமிழ்நாட்டில் முதன் முறையாக மாப்பிள்ளைக்கு தாலிகட்டி ஓர் புதிய சடங்கினை அறிமுகம் செய்துவைத்துள்ளார் மணப் பெண்.

பொதுவுடைமை எழுத்தாளரும் த.மு.எ.ச மா.செ. ச. தமிழ்செல்வன் அவர்களின் தம்பி பாலசுப்ரமணிய ம், ஜெயா பாலசுப்ரமணியம் மகன் பிரேம் ஆனந்துக் கும், பிரபல புத்தக நிறுவனர் கோவை பெ.தியாக ராஜன், கலைவாணி மகள் சிந்துவுக்கும், சி.பி.ஐ நல்லகண்ணு தலைமையில் திருமணம் நடைபெற் றது.

ஒரு நூலக அலமாரிபோல அலங்கரிக்கப்பட்ட அற்புத மேடையில் திரு மண நிகழ்வை தொகுத்தார் ச.தமிழ்செல்வன். நல்லக்கண்ணு தாலி எடுத்து பிரேமிடம் தர, அவர் சிந்துவின் கழுத்தில் கட்டினார்.

மணப்பெண் கட்டிய தாலி

நிகழ்ச்சியைத்தொகுத்த ச.தமிழ் செல்வன், தாலி என்பது பெண்ணடி மை சின்னம் ஆனால் ஒரேயடியாக சமூகத்தை மாற்றிவிடுவது சற்று சிரமம். எனவே அதேசமயம் ஆணு க்கு பெண் சமம் என்ற அடிப்படையி ல் மணமகனுக்கு தற்போது சிந்து தாலி சூட்டுவார் என கூற, பிரேம் ஆனந்த் கழுத்தில் சிந்து ஒரு செயினை கட்டினார். பின் மணமக்களை ஒருவருக்கு ஒருவர் தலையில் கொட்டிக்கொள்ள சொன்னார்.

கை குலுக்கி வாழ்த்து

பின் இருவரும் அதை ஒருவருக்கொரு வர் மாறி மாறி தேய்த்து கொள்ள சொல் லி பின் சிரித்தபடி கைகுலுக்க சொல்ல அப்படியே செய்தனர் மணமக்கள்.

பின் பேசிய ச.தமிழ்செல்வன் ‘ஒவ்வொரு திருமணத்தின் போதும் பழைய சடங்குக ளை உடைத்து புதிய சடங்குகளை அறி முகம் செய்து வருகிறோம் அப்படிப்பட்ட ஒரு சடங்குதான் இது.

தாம்பூலப்பையில் நூல்கள்

தாம்பூல பையாக அனைவருக்கும் மூன்று நூல்கள் பரிசளிக்கப்பட்டது. இந்த வித்தியா ச திருமணம், வந்தவர்கள் நெஞ்சில் சமத் துவ விதையை விதைப்பதாக இருந்தது.

சாதி மறுப்பு திருமணம்

பிரேம் ஆனந்தின் கொள்ளு தாத்தா மதுர கவி பாஸ்கரதாஸ். தமிழ் சினி மாவில் முத ன் முதலில் வெளிவந்த திரைப்பாடலை இய ற்றியவர். மிக பிரபல எழுத்தாளர், பாடலாசி ரியர் சுதந்திர போராட்ட தியாகி. பெரியப் பா எழுத்தாளர் ச.தமிழ்செல்வன். ஒரு சித்தப்பா எழுத்தாளர் கோணங்கி. கடைசி சித்தப்பா சங்கீத அகாடமியில் தேசிய விருது வாங்கிய ச.முருக பூபதி. இவர்களின் பின்னணியில் வந்த பிரேம் ஆனந்த் கொள்கைக்கு ஏற்ப சாதிமறுப்பு காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்

(படித்த செய்தி)

Leave a Reply