Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள்.

அகத்தியர் பெருமான் நமக்காக‌ அருளிய சூரணங்கள்.

தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடு ப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலி த்து எடுப்பதை யே சூரணமாக்குதல் என்கிறோம். சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்கின் றன. இவற்றில் திரிகடுகம் எனப் படும் ” சுக்கு”, “மிளகு”, “திப்பிலி” சூரணங்களை மாமருந்துகள் என்றால் மிகை இல்லை.

இந்த‌ “சுக்கு”, “மிளகு”, “திப்பிலி” சூரணங் களின் மருத்துவ குணங்களை தனித்தனியாக பார்க்கலாம். இந்த தகவல் அகத்தியர் அருளிய “அகத்தி யர் பரிபூரணம்”  என்ற நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது. அந்த பாட ல்கள் பின்வருமாறு…

சுக்குச் சூரணம்

பாரேநீ யின்னமொரு சூட்சங் கேளு
பாங்கான சுக்குதனைச்சூர ணமே பண்ணி
காரேநீ கரும்புச்சர்க்க ரையவ் வீதங்
கலந்துமே யிருவேளை யேழு நாளுஞ்
சேரேநீ தின்றுவர வாய்வு தீருந்
திறமான தீபன முண்டா மப்பா
ஊரெல்லா மருந்திருக்கக் காட்டிற் போய்நீ
உலுத்தரைப் போலலையாதே உண்மை கேளே.

சுக்கைச்சூரணம் செய்து, அந்த எடைக்கு சமமாக கரும்புச்சர்க்கரையை கலந்து சேமித்துக்கொள்ள வேண்டுமாம். இம்மருந்தை ஏழுநாள் காலை மாலை உண்டு வர வாய்வு தீருவதுடன், பசியும் உண்டாகுமாம்.

திப்பிலி சூரணம்

உண்மையென்ற திப்பிலையைசூர ணமே செய்து
உகமையுடன் றேனிலேகு ழைத்துத் தின்ன
வண்மையுடன் புகைந்திருமுஞ் சேத்தும நோய்தான்
மாறியே பசியுண்டாம ருவிப் பாரு

திப்பிலியை சூரணம் செய்து தேனில் குழைத்துச் சாப்பிட புகைந்து இரு மும் இருமலும், சிலேத்தும நோய்களும் குணமடைந்து பசி உண்டாகு மாம்.

மிளகு சூரணம்

நன்மையுடன் மிளதகுதனைசூர ணமே செய்து
நலமான பசுநெய்யிற் சீனி கூட்டி
தன்மையுடன் மூன்றுநாள் அந்தி சந்தி
தானருந்த சளியிருமத வறிப் போமே.

மிளகினை சூரணம் செய்து அதனுடன் பசுநெய்யும், சீனியும் சேர்த்து மூன்றுநாள் காலை மாலை சாப்பிட சளி இருமல் ஆகியவை நீங்குமா ம்.

நன்றி – சித்தர்கள் இராச்சியம்

Leave a Reply