Tuesday, October 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு – கைகள் சுத்தமும் ஆரோக்கியமும்!

முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத் தொடர்புகொள்ள உதவு கின்றன. ஒருவரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும் போது வணக்கம் செய்கிறோம். நம் உணர்வுகளை, அன்பை வெளிப்படுத் த உதவும் முக்கியமான பணியை கை கள் செய்கின்றன. அதிகளவில் வெயி ல், தூசால் பாதிக்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக் கியமாக வைத்திருப்பதில், நாம் அதிக ம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை” என்கிற அழகு க்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கி யமாகவும் வைத்திருக்க வழி சொல்கி றார்.

”ஒருவரின் சுத்தத்தை சட்டெனப் பறைசாற்றுவது கைகள்தான். நம் பாரம்பரிய வழக்கமான மஞ்சள் தேய் த்துக் குளிப்பது மறைந்துவிட்ட நிலையில், பெண்களின் கைகளில் ரோமம் வளர்ந்துவிடுகிறது. இதுவே அழகைக் குறைக்கலாம். உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்க, சிறந்த வழி ‘வாக் ஸிங்’ முறை மட்டுமே. இது முடி யை வேரிலிருந்து அகற்றிவிடும். அடுத்து, சீக்கிரம் வளராமல் தடுக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்ளலாம். முக்கிய மாக, 16 வயதுக்கு மேல்தான் வாக்ஸிங் செய்துகொள்ள வேண்டும்.

அக்குள்

அதிகம் வியர்க்கக்கூடிய மிகவும் மென் மையான பகுதி. இதனால், வியர்வையுட ன் தூசி, அழுக்கு சேர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படலாம். எனவே, இந்த முடியை அகற் றிவிடுவது நல்லது. இந்த முடியை அகற் ற ஷேவ் செய்வது சரியல்ல. அந்த இடம் கறுப்பாகி அலர்ஜியை ஏற்படுத் தி விடும். க்ரீம்களைத் தடவி முடியை அகற்றுவது ம் நிரந்தரத் தீர்வல்ல. அக்குள் முடியை வாக்ஸிங் செய்து கவனத்துடன் அகற்ற லம். அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கறுமையைப் போக்க, எலுமிச்சைப் பழச் சாற்றில் பால் கலந்து அந்தப்பகுதிகளில் தடவி, சிறிதுநேரம் ஊறியபின் கழுவினா ல், நல்ல பலன் கிடைக்கும்.

கை

கைமுட்டி பகுதி டேபிளில் அழுத்தப்படும்போ து, மிகவும் கறுத்து சொரசொரப்பாகி விடுகிற து. சர்க்கரையை தேங்காய் எண்ணெய் அல்ல து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தினமும் கை முட்டிகளில் மென்மையாகத் தேய்க்க வே ண்டும். எண்ணெய்க்குப்பதிலாக எலுமிச்சைப் பழத்தையும் பயன்படுத்தலாம். இதனால், முட் டிப் பகுதியில் கறுமை மறையும். நீண்ட நேரம் ஏ.சி அறையில் இருந்தாலு ம், கைகளில் ஈரப் பதம் குறைந்து தோல் வறண்டு போகலாம். இதைச் சரி செய்ய, குளித்த வுடன் மாய்ஸ்ச்சரைஸ ரைப் பயன்படுத்து வது நல்லது. வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளில் உறை அணிந்து கொள்ள லாம். இது தூசி, நோய்த் தொற்று, வியர்வை, டிடர் ஜென்ட் பாதிப்பு போன்றவை நேரடியா கத் தாக்குவதைத் தவிர்க்கும்.

நகங்கள்

பெரும்பாலும் நாம் கைகளால்தான் உணவு அருந்துகிறோம். நகங்களி ல் அழுக்கு இருந்தால், சாப்பாட்டுட ன் அழுக்கும் சேர்ந்து கிருமித் தொற் று ஏற்பட்டு, நோய்கள் வர வாய்ப்பு கள் அதிகம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கமும் இருக்கும். எனவே, பெரி ய நகங்களை வளர்த்தாலும், அதை அடிக்கடி கழுவி, நக இடுக்குகளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைத் திருக்க வேண்டும். வீட்டு வேலைக ள் செய்யும்போதும் பாத்திரம் தேய்க் கும் போதும் அல்லது துணி துவைக்கும்போதும் நகங்கள் தேய்ந்து உடைந்துபோகலாம். இதைச் சரிசெய்ய, நகங்களைச் சுத்தமாகக் கழுவி அதைப் பாதுகாக்க ‘பாடி லோஷன்’ தடவலாம்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: