Thursday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஓர் உயிரைக் காப்பாற்றிய நடிகை ஹன்சிகா!- இந்த மனிதநேயம் நம்மில் எத்த‍னை பேருக்கு இருக்கு, சொல்லுங்க‌?

நடிகை ஹன்ஸிகா, நேற்று இரவு இவர் மும்பையில் இருந்து விமானம் மூலம் படப்பிடிப்புக்காக மதுரைக்கு வந் தார். அவருடன் அவர் தாயார் மோனாவும் வந்தார். மோனா, ஒரு டாக்டர். மதுரை விமான நிலையத்தில் இருவரும்  இறங்கிய போது, அவர்களை வரவேற்ற தயாரிப்பு நிர்வாகி, இப்போதைக்கு படப்பிடிப்பு இல் லை.ஓட்டலில் போய் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஹன்சிகாவு ம், அவருடைய தாயார் மோனாவும் காரில் ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். வ ழியில், ரோட்டின் எதிர்புறத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண், ஏதோ ஒரு வாகன த்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார். அவரைப்பார் த்த ஹன்சிகா மோத்வானி, காரை நிறுத்தும்படி கூறினார்.

ஆனால் எதற்கு வம்பு? என்று காரை நிறுத்தாமல் சென்றார் தயாரிப்பு நிர்வாகி.ஆனால் ஹன்சிகா உரத்த குரலில் சத்தம் போட்டு காரை நிறுத் தும்படி கூறினார்.

பின்னர் காரை நிறுத்தியதும் ஹன்சிகாவும், அவருடைய தாயாரும் ரோட்டை கடந்து எதிர் புறம் சென்றார்கள். ரத்த வெள்ளத்தில் உயிரு க்கு போராடிக் கொண்டிருந்தவரை ஹன்சிகா வின் தாயார் பரிசோதித்தார். அவருக்கு நாடித் துடிப்பு இருந்ததால், உடனடியாக 108 ஆம்புல ன்சுக்கு போன் செய்தார். அதற்குள் அங்கே கூட்டம் கூடிய து. ஹன்சிகாவை அடையாளம் கண்டு கொண்டா ர்கள். ஆம்புலன்ஸ் வ‌ந்ததும், அடிபட்டு கிடந்தவ ரை தூக்கி ஆம்புலன்சுக்குள் கிடத்தினார்கள். ஹன்சிகாவின் தாயார் ஆம்புலன்சில் ஏறிக்கொண்டார். அந்த ஆம்புல ன்சை, ஹன்சிகா காரில் பின் தொடர்ந்தார். அருகில் உள்ள ஒரு மருத்து வ மனையின் அவசர சிகிச்சை பிரிவில், அந்த முதியவரை அனுமதித் தார்கள். அவருடைய சட்டைப் பையில் இருந்த செல்மூலம் உறவினர் களுக்கு தகவல் தெரிவித் தார்கள். அடிபட்டு கிடந்த வரின் மனைவி அலறிய டித்துக் கொண்டு வந்தார். ஹன்சிகாவுக்கும், அவரு டைய  தாயாருக்கும் நன் றி தெரிவித்தார். அவருக் கு ஆறுதல் கூறிய ஹன்சிகா கணிசமான பண உதவியும் செய்துவிட்டு , அங்கிருந்து புறப்பட் டார். நல்ல மனம் வாழ்க ……!

தகவல் தந்தவர்கள் Rafiudeen Abdul Hameed Skm Habibulla & seasonsnidur

One Comment

Leave a Reply