Tuesday, December 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“சிரியா”வை அமெரிக்கா வீழ்த்த நினைப்பது ஏன்?

சிரியா’ என்ற நாட்டைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. ஆனால், சில நாட்களுக்கு முன் ரசாய னக் குண்டு தாக்குதலி ல் 600 குழந்தைகள் உள் பட சுமார் 1,429 பேர் கொலை செய்யப்பட்ட காட் சிகள்தான் உலகின் கவனத்தை சிரியா மீது திருப்பியது!
 
இப்படி ஒரு ‘சம்பவத்துக்காக’ காத்திருந்த அமெரிக்கா, ‘இதை எங்களா ல் பொறுத்துக்கொள்ள முடியாது. சிரியாமீது போர்தொடுப்பது நிச்சயம்’ என்று வெளிப்படையாக அறிவித்து, அதற்கான ஆயத்தங்க ளையும் தொடங்கி விட்டது. மறுபுறம், ‘சிரியா மீது தாக்குதல் நடத்தினால் நாங் கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்கிறது ரஷ்யா. சிரியாவை முன் வைத்து மூன்றாம் உலகப் போருக்கான அறிகுறிகள் தென் படும் வேளையில், அந்த நாட்டை இன்னோர் ஆஃப்கானிஸ் தானாக மாற்றுவதே அமெரிக் காவின் எண்ணமாக இருக்கிறது. எண் ணெய் வளம் மிக்க சிரியா, பற்றி எரிவ தன் காரணம்தான் என்ன?
 
மத்தியக் கிழக்கு நாடுகள் சூழ அமைந்திருக்கும் சிரியா, ஒரு மேற்காசிய நாடு. இதன் அதிபர் பஷர்-அல்-ஆசாத். 1971-ம் ஆண்டு முதல் இப்போது வரை இவரது குடும்பத்தினர்தான் அதிபர் பத வியை அலங்கரித்து வருகின்றனர். ராணுவப் புரட்சியின் மூலம் அதிகாரத் தைக் கைப்பற்றிய இவரது குடும்பத்தி னர், இன்றுவரை அதைத் தக்கவைத்து க்கொண்டுள்ளனர். இஸ்ரேல்-பாலஸ்தீ ன பிரச்னையில், பெரும்பாலான அரபு நாடுகள் இஸ்ரேலுக்குத் தோள்கொடுத்து அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டில் இருக்க, சிரியாவோ, ‘இஸ்ரேல், எங்கள் எதிரி’ என்று வெளிப் படையாக அறிவித்துள்ளது. இதேபோல அறிவித்த ஈரான் நாட்டுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளது. இதனால் அரபு லகின் மற்ற நாடுகளில் இருந் து சிரியா தனித்து நிற்கிறது.
 
இது ஒருபுறம் இருக்க, உள் நாட்டில் அதிபர் ஆசாத்தின் 42 ஆண்டுகால ஆட்சி, சர்வாதிகாரமாக மாறிவிட்டதால் மக்களிடையே வெறுப்பு உணர்வு தொடர்ந்து அதிகரித் து வந்தது. இந்த நிலையில் தான் 2011, ஜூலை மாதத் தில் ‘சிரிய சுதந்திரப் படை’ என்ற குழு உருவானது. இவ ர்கள் அரசை எதிர்த்து ஆயுத வழியில் போராடினார்கள். சவுதி அரேபியா, கத்தார், து ருக்கி போன்ற இஸ் லாமிய நாடுகளும் அமெரிக்காவும் இந்தச் சுதந்திரப் படைக்கு ஆயுத மற்றும் நிதி உதவி அளித்தனர். சிரி யாவில் போராடுவது முழுக்க முழுக்க மக்கள் இல்லை. அவர்களை விட அதிக எண்ணிக்கையில் அமெரிக்காவால் பயிற்றுவி க்கப்பட்ட ஆயுததாரிகளும் மத தீவிரவாத இயக்கங்களு மே ஊடுருவியுள்ளன. இந்த ப் போராட்டக் காரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஜோ ர்டானில் ஒரு முகாமையே அமைத்துள்ளது அமெரிக்கா. இந்த பலத்தின் காரணமாக வே கடந்த மூன்றே ஆண்டுகளில் சிரியாவின் பல பகுதிகளை புரட்சிப் ப டைகைப் பற்றியது.
 
தனது செல்வாக்கு எல்லை மிக வேகமாகச் சுருங்கிவருவதைக் கண்ட அதிபர் ஆசாத், கடந்த ஆக ஸ்ட் 21-ம் தேதி கடுமையான தாக்குதல் ஒன்றை நடத்த ராணு வத்துக்கு உத்தரவிட்டார். ‘ரசாய ன ஆயுதங்களால் நிக ழ்த்தப்பட்ட அந்தத் தாக்குதலில், மொத்தம் 1,429 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 600 பேர் குழந்தைகள்’ என்கிறது அமெரிக்கா. இது தொடர்பாக வெளியிடப்பட்ட காட்சிகள், மனதைப் பதைபதைக்க வைக்கின்றன. ஆனால் அதிபர் ஆசாத், ‘நாங்க ள் அப்படி ஒரு ரசாயன தாக்கு தலை நடத்தவே இல்லை’ என்று திட்டவட்டமாகக் கூறு கிறார். இதைத் தொ டர்ந்தே சிரியா மீது தாக்குதல் நடத்து வதற்கான வேலைகளை அமெரிக்கா தொடங்கிவிட்டது . ஃப்ரான்ஸ் இதற்கு ஆதரவாக உள்ளது. சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா நேரடியாகக் களம் இறங்கியுள் ளது. இதனாலேயே இன்னோர் உலகப்போருக்கான அபாயம் தென்படு கிறது.
 
சிரியாவில் புரட்சிப்படை மட்டுமே கலகத்தி ல் ஈடுபடவில்லை. அங்கு ‘ஜபாத் அல் நுஸ் ரா’ என்ற இஸ்லாமிய மத தீவிரவாத அமை ப்பும் அரசுக்கு எதிரான தாக்குதலில் முக்கிய மான பங்காற்றுகிறது. அல்கொய்தா பாணி யிலான இந்தஅமைப்புக்கு, அமெரிக்கா ஆசி உண்டு என்பது ஒரு முக்கியமான செய்தி.
 
சரி, அமெரிக்கா ஏன் சிரிய அரசை வீழ்த்த நினைக்கிறது? ஏனெனில், மத் தியக் கிழக்கில் தனது விசுவாசி யாக இருக்கும் இஸ்ரேலுக்கு சிரியா எதிரி. அத்துடன் அமெரி க்காவின் நீண்டநாள் எதிரியா ன ஈரானுடன், சிரியா நட்பாக இருக்கிறது. இந்த இரண்டு பே ரையும் ஒழித்துக்கட்டுவதன் மூலம் மத்தியக் கிழக்கை முழு மையாகத் தனது கட்டுப்பாட்டு க்குள் கொண் டு வரலாம். முதலில் சிரியாவில் இருக்கும் சர்வாதிகாரத் தலைமையை அகற்றி, அங்கு ஒரு பொம்மை அரசைக் கொண்டு வந்து விட்டால் அது நடந்துவிடும். அதன் பிறகு ஈரான் தனித்துவிடப்படும்; அதை வீழ்த்துவதும் எளிது. இதுவே அமெரிக்காவின் திட்டம் என்பது, சர்வ தேச அரசியல் பார்வையாளர்கள் கருத் து. அமெரிக்காவில் இந்தத் திட்டத்துக் கு சிரியாவின் சர்வாதிகாரத் தலைமை யும், அதன் மனிதாபிமான மற்றத் தாக் குதல்களும் ஓர் அடிப்படையை உரு வாக்கித் தருகின்றன.
 
சிரியாவை முன்வைத்து உலகின் பல நாடுகளில் இருந்து உதிர்க்கப்படும் சவ டால்களும் எச்சரிக்கைகளும், எஞ்சியி ருக்கும் சிரிய மக்களை உயிரோடு கொ ன்றுகொண்டிருக்கின்றன! 
படித்த‍ செய்தி

Leave a Reply