Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆன்மீகம் தொடர்பான சில‌ அபூர்வத் தகவல்கள்

1. மணமுடிப்பார் மச்சக்கார முருகன்

சென்னை – போரூர் தோட்டம் தொழிற்பேட்டை அருகே உள்ளது வான கரம். இங்குள்ள மச்சக்கார பால முருகன் கோயில் வெகு பிரசித்தம். இத்தல முருகனின் கன்னத்தில் சிவந்த மச்சம் இருப்பதால் இவருக்கு இந்த பெயர். இவரை வணங்கி திருமணத் தடை நீங்கி, மணமுடித்தவர் கள் விவரம் ஒரு பேரேடு முழுக்க விரவிக் கிடக்கிறது. இத்தலத்தில் பைரவர் தம்பதி சமேதராய் வீற்றிருப்பதால் அஷ்டமி திதியன்று இங்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டால் பிரிந்த தம்பதியர் ஒன்றிணை வார்கள். கடன் பிரச்னைகளும் தீர்கிறது.

2. பூலோகத்தில் ஒரு தேவலோகம்!

சென்னை-எழும்பூர் கெங்குரெட்டி சாலையில் உள்ள செல்வ விநாயகர் கோயிலுக்குள் சென்றால் இந்தத் தகவலின் தலைப்பை நேரடியாக உணரலாம்.  உள்ளே  விநாயகரில் தொடங்கி, சரஸ்வதி, கஜலட்சுமி, நாகலிங்கேஸ்வரர், பால தண்டாயுதபாணி, கிருஷ்ணன், துர்க்கை, பிர தோஷநாயகர், தட்சிணா மூர்த்தி என  அனைவரும் இருக்கிறார்கள். அப் பகுதி மக்களை வெள்ளத்திலிருந்து காப்பாற்றியவர் இந்த விநாயகர். இவரை வணங்க செல்வம் பெருகும். இங்கு மாதத்தின்  அத்தனை நாளும் விசேஷம்தான்! 

3. வெற்றிலை மாலை தரும் மணமாலை

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில் சென் னையின் நுழைவாயிலான கிண்டியில், எம்.கே.என் சாலையில், மாங் குளம்  அருகில் உள்ளது. வியாசராஜரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆஞ் சநேயர் சென்னையின் நுழைவாயிலில் இருப்பதால் இவரை நகரின் காவல் தெய்வம் என்றும் சொல்லலாம். இந்த அனுமனை ராணி மங்க ம்மாள் வழிபட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு வெண்ணைக்காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் தீராத நோய் தீரும். கல்யாண வரம் வேண்டுவோர் ஒன்பது வியாழக்கிழமை இவருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வலம் வர கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம்! 

4. கோயமுத்தூரிலும் ஒரு சிருங்கேரி

சிருங்கேரியைப் போலவே கோயமுத்தூரிலும் சாரதாதேவிக்கு ஆலய ம் ஒன்று உள்ளது. சிருங்கேரி மடத்தின் சாரதாம்பாள் அன்னைக்கு மேற் கொள்ளப்படும் பூஜை முறைகள் போன்றே இங்கும் நடைபெறுவ து குறிப்பிடத்தக்கது. கருவறையில் அருளும் சாரதா தேவியின் திரு மேனி ஐம்பொன்னால் ஆனது. பின் வலக்கைகளில் கமண்டலத்தையு ம் சின் முத்திரையையும் பின் இடக்கைகளில் ஜபமாலையையும் புத்த கத்தையும் ஏந்தி அமர்ந்த நிலையில் சாந்த சொரூபிணியாக அருள் பாலி க்கிறாள் அம்மன். கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

சிருங்கேரி சென்று வழிபட இயலாதவர்களுக்கு இக்கோயில் ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம். இக்கோயிலில் சாரதாம்பாள் சரஸ்வதி வடிவமாக அருள் பாலிக்கின்றாள். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பத ற்கு முன்பாக இங்கு வித்யாரம்ப பூஜைகளில் கலந்துகொண்டால், அவ ர்கள் நன்றாக படிப்பார்கள் என்பது நம்பிக்கை! வருடா வருடம் நடை பெறும் இப்பூஜையில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள். அன்னை சாரதைக்கு வெள்ளைத் தாமரை மலர்கள் சமர்ப்பித்து வேண் டிக்கொள்ள, கல்வி தொடர்பான வேண்டுதல்கள் யாவும் உடனே நிறை வேறுகிறது என்பது பக்தர்களின் அனுபவபூர்வமான நம்பிக்கை.

5. படிப் பாயசம் ஏற்கும் பால முருகன்

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற புகழுடையது ஆய்க்குடி பாலசுப்ரம ணிய சுவாமி திருக்கோயில். முற்காலத்தில் மல்லபுரம் என்ற இடத்திலி ருந்த குளத்தை தூர்வாரிய போது மூலவரான பாலசுப்ரமணிய சுவாமி யின் திருவுருவம் கண்டெடுக்கப்பட்டது; பின்னர் அந்த சிலையானது முருக பக்தரான சித்தர் ஒருவரின் சமாதிக்கு மேலே வைக்கப்பட்டு தற் போதுள்ள கோயில் எழுப்பப்பட்டது என்கிறார்கள்.

சிவன், சக்தி, சூரியன், விஷ்ணு, விநாயகர் ஆகிய ஐந்து இறைசக்தியும் இக்கோயிலில் உள்ள அரசு, வேம்பு, மாவிலிங்கம், மாதுளை, கருவேப் பிலை ஆகிய ஐந்து மரங்களில் எழுந்தருளியிருக்கிறார்கள். அந்த மரங் களின்கீழ் மூலவரான பாலசுப்ரமணியசுவாமி மயில் வாகனத்திற்கு அருகில் குழந்தை வடிவில் வீற்றிருக்கிறார். குழந்தைப்பேறு வேண்டு வோர் இங்கு வழிபட்டால் விரைவில் மழலைப்பேறு கிட்டும். வேண்டி க்கொண்ட செயல்கள் நிறைவேறிய பிறகு, பாயசத்தை நிவேதனமாகப் படைத்து, அதனை கோயிலுக்கு அருகில் ஓடும் அனுமன் நதிக்கரையி ல் உள்ள படியில் ஊற்றி, சிறுவர்களை அருந்தச் சொல்கிறார்கள். இத னை படிப்பாயச நிவே தனம் என்கிறார்கள். சிறுவர்கள் உருவில் முருக னே வந்து பாயச நிவேதனத்தை ஏற்பதாக ஐதீகம்

6. கவலைகள் களையும் கந்தவேள்

கந்தன்குடி குமரன் கோயில், கிழக்கு நோக்கியது. தெய்வானைக்கு தெற் கு நோக்கிய தனிச்சந்நதி. நின்ற கோலத்தில் கைகளில் கிளியோடு, தவம் முடித்த அருட்களை முகத்துடன் பொலிகிறாள். சிறு உருவினளா னாலும் நின்று பார்க்க வைக்கும் தெய்வீக வசீகரம் கொண்டுள்ளாள். இவளை தரிசித்தாலே போதும் திருமணம் கைகூடும் என்பது நிதர்சன ம். அர்த்தமண்டபத்தை அடுத்து கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை யுடன் சுப்பிர மணியசுவாமி வீற்றிருக்கிறார். சொந்த ஊருக்கு வரும் தலைமகனை அன்பாக உபசரிக்கும் பாங்கில் கந்தனை சகல உபசார ங்களோடும் அமர்வித்துள்ளனர்.

சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு, வெள்ளிக் கவசம், தங்கக் கவசம் என வே ளைக்கொரு அபிஷேகமும் அலங்காரமுமாக செய்து மகிழ்கிறார்கள். கருவறையை நோக்கும்போது ஆனந்த ஊற்று அகத்தில் கொப்பளிக்கி றது. நாள்பட்ட துயரங்கள் எல்லாம் தூசாகப் பறந்து போகின்றன. வள்ளி யும், தெய்வானையும் கந்தனின் ஆட்கொள்ளும் அதிசயத்துக்கு அந்தர ங்க சாட்சியாகக் காட்சி தருகிறார்கள். இந்த கந்தவேளை அருணகிரி நாதர் பரவசமாகப் போற்றித் திருப்புகழ் பாடியுள்ளார். கும்பகோணம் – காரைக்கால்; மயிலாடுதுறை-காரைக்கால் பேருந்து வழித்தடத்தில் கொல்லாபுரத்தை அடுத்து கந்தன்குடியை அடையலாம்.

7. வெற்றிலை மாலை தரும் மணமாலை

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீர ஆஞ்சநேயர் கோயில் சென் னையின் நுழைவாயிலான கிண்டியில், எம்.கே.என் சாலையில், மாங்கு ளம் அருகில் உள்ளது. வியாசராஜரால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த ஆஞ்ச நேயர் சென்னையின் நுழைவாயிலில் இருப்பதால் இவரை நகரின் காவ ல் தெய்வம் என்றும் சொல்லலாம். இந்த அனுமனை ராணி மங்கம்மா ள் வழிபட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு வெண்ணைக்காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் தீராத நோய் தீரும். கல்யாண வரம் வேண்டு வோர் ஒன்பது வியாழக்கிழமை இவருக்கு வெற்றிலை மாலை அணி வித்து வலம் வர கெட்டிமேளம் கொட்டுவது நிச்சயம்!

8. அது என்ன யமம்?

‘யமம்’ என்பது ஐந்து வகைப்படுகிறது.

1. கொல்லாதிருக்கும் அஹிம்சை, 2. சத்தியமெனும் பொய் அகற்றல்,3. அஸ்தேயம் என்கிற திருடாமை, 4. புலனடக்க மென்னும் பிரம்மச்சர் யம், 5. அலங்கிரகம் என்று சொல்லப்படும் தேவையற்ற சொத்துகளை சேர்த்துக் கொள்ளாத எளிமை.

9. தத்தாத்ரேயரின் சிறப்பு

மந்திரோபதேசம் பெற்ற மற்ற எல்லோரையும்விட பகவான் தத்தாத் ரேயர் மாறுபடுகிறார் எப்படி? அவர் மண், தண்ணீர், மலைப்பாம்பு இவற் றின் மூலமும் மந்திரோபதேசம் பெற்றுள்ளார்

10. வைணவத்தில் இடம்பெறும் மும்முறை மோகம்

நம்மாழ்வார் பகவத் பெருமைகளை பாசுரத்தில் கூறிவருகையில் -‘‘எத் திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவு’’ என குறிப்பிட்டபோ தும் ‘பிறந்தவாறு’ என எழுதிய நேரத்திலும் ‘கண்கள் சிவந்து’ என பாடிய காலத்தும் மூன்று முறைகள் பகவானை மோகித்து விட்டாராம். ஒவ் வொரு முறையும் ஆழ்வார் கொண்ட மோகத்தை நீக்க ஆறு மாதங்கள் ஆனதாம்!

நன்றி தினகரன்

Leave a Reply

%d bloggers like this: