Monday, February 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சரும அரிப்பிலிருந்து விடுபட சில எளிய வைத்தியக்குறிப்புகள்

கொசுக்களை விரட்டுவதற்கு சருமத்தில் க்ரீம்களை தடவுவ தால், ஒரு வேளை இன்னும் அதி கமாக கொசுக் கடிக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட லாம். குறிப்பாக வெப்பம் அதிகமாக இருக்கும் சமயத்தில் தூங்குவதற்கு முயற் சிக்கும் போது, சரும அரிப்பு காரணமாக நாம் சொரிய ஆரம்பி க்கி றோம். உடனடியாக அரிப்பி லிருந்து சுகம் கிடைப்பதற்கு, பாதிக்கப்பட்ட பகுதியை சொரிவதால், அந்த இடத்தில் இன்னும் வீக்கம் அதிகமாகிறது. இதனால் மேலும் சரு மத்தில் அரிப்பு அதிகமாகி இரத்தம் வரும் வரை சொரியும் சமயத்தில், அழுக்கான விரல் நகங்களால் சருமத் தில் கீறல் ஏற்பட்டு, நோய்த்தொ ற்று ஏற்படுவ தற்கான ஆபத்து உருவாகு ம்.

ஆகவே கொசு கடிக்கும் போது, எரிச்ச லை உண்டாக்கும் அரிப்பி லிருந்து விடுதலை பெற இதோ சில ஆரோக் கியமான வழிமுறைகள் உள்ளன. இவை அதிகமாக நாட்டு மருத்துவ ர்களால் பயன்படுத்தப்படுகின்ற நாட்டு வை த்தியக் குறிப்புகள் ஆகும். இவற்றில் அறிவி யல் ரீதியான ஆதாரங்களும் அடங்கியுள்ள ன. மேலும் இந்த வழிமுறைகளைப் பின் பற்றி பலரும் பயனடைந்துள்ளனர். ஆகவே கொசுக்கடியால் அவஸ் தைப்படுவதற்குப் பதிலாக, இவற்றை பின்பற்றுவதன் மூலம் சுகம் பெறலாம்.

ஆல்கஹால்

பீர் அல்லது மற்ற மதுவை அருந்து வதால், சருமத்தில் ஏற்படும் அரிப் பை மறந்துவிடலாம். ஆனால் இந்த வகையான ஆல்கஹாலைப் பற்றி இங்கு பேசவில்லை. முதலுதவி பெட்டியிலிருந்து கொஞ்சம் ஆல்க ஹாலை எடுத்து, கொசுக்கடியால் பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்த்து சுத்தம் செய்வதால், அரிப்புத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற முடியும். ஒருவேளை ஆல்கஹால் இல்லாவிட்டால், சோப்புத் தண்ணீ ரால் கழுவுவதன் மூலம் பயன் பெற முடியும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ஆன்டி-இச், ஆன்டி-பயோட்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபயல் ஆகும். ஆகவே எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற் றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுவத ன் மூலம், அரிப்பைக் குறைத்து தொற்று ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் இதை வீட்டின் உள்ளே பயன்படுத்துங்கள். ஏனென்றால் இதனை தேய்த்துக் கொண் டு, வெயிலில் சென்றால், சூரியக் கதிர்க ளின் தாக்கத்தால், சருமத்தில் புண்கள் ஏற்பட்ட வாய்ப்பு உண்டு.

ஐஸ் கட்டி

சரும அரிப்பு காரணமாக ஏற்படக்கூடிய வீக்கம் மற்றும் சரும மதப்பு தன்மையைக் குறைப்பதற்கு ஐஸ் கட்டி பெரிதும் உதவு ம். அதிலும் கொசுக்கடி அதிகமாக இருக்கு ம் சமயத்தில், மிகவும் குளிர்ச்சியான தண் ணீரில் குளியுங்கள் அல்லது குளிர்ச்சி நிறைந்த தண்ணீருள்ள குளத்தில் மூழ்கிக் குளியுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் விட்ச் ஹாசில்

செலவில்லாத கொசுக்கடித் தீர்வுக்கு, இந்த இரண்டு பொருட்களையும் சேர்த் து பேஸ்ட் செய்து, கொசுக்கடி ஏற்பட்ட பகுதியில் தடவி, 15 நிமிட ங்கள் உலர விடவும். இதனால் பேக்கிங் சோடாவி ல் உள்ள ஒரு காரத் தன்மையான (அ ல்கலைன்) பதார்த்தம் இருப்பதால், இது சருமத்தின் பிஎச் அளவை நடுநி லைப்படுத்த உதவி, வீக்கம் குறைய வாய்ப்புண்டு. விட்ச் ஹாசில் கிடைக்காவிட்டால், அதற்குப் பதிலாக தண்ணீர் பயன் படுத்தலாம்.

டீ-ட்ரீ ஆயில்

இது வீக்கத்தைக் குறைக்கும் ஒரு இயற்கை மருந்து என்பதால், பரு மற்றும் சருமத்தில் ஏற்படும் நச்சுப் படலம் ஆகியவற்றுக்கு சிறந்தது. அதிலும் சொரிவதால் ஏற்படக்கூ டிய வீக்கத்தைக் குறைப்பதற்கும், நோய்த்தொற்றுகளைத் தடுப்பதற் கும் இந்த எண்ணெய் உதவும்.

டூத் பேஸ்ட்

கொசுக்கடியால் சருமத்தில் சிறு சிறு வெள்ளைக் கொப்புளங்கள் ஏற்பட் டால், அதன்மீது கொஞ்சம் டூத் பேஸ் ட் தடவுங்கள். இதனால் அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக் கும்.

உப்பு

கொசுக்கடியிலிருந்து சீக்கிரம் நிவாரணம் பெறுவத ற்கு, உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து, பாதிக்கப் பட்ட இடத்தில் லேசாக தடவுங்கள். அரிப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஒருவேளை கடற்கரைக்கு அருகில் இருந்தால், உப்பு நீரில் நீச்ச லடியுங்கள், சிறந்த பலனைப் பெறுவீர்கள்.

கற்றாழை

சொரியும் போது சருமத்தில் கீறல்கள் ஏற் பட்டு வலி உண்டாகும். ஆனால் கற்றா ழையில் உள்ள குளிர்விக்கும் தன்மை, இந்த வேதனையிலிருந்து சுகம் பெற உத வும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

குளியல் தொட்டி நீரில், சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குளிப்பதா ல், வெயிலால் ஏற்படும் எரிச்சல் குறைவது மட்டுமன்றி, இதில் இருக் கும் ஒருவகை ஆசிட் சரும அரிப்பைத் தணிப்பதற்கும் வழி செய்யும். ஒருவேளை தண்ணீரில் கலந்து குளிக்க முடி யாவிட்டால், ஒரு காட்டன் உருண்டையில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை நனைத்து, பாதி க்கப்பட்ட இடத்தில் நேரடியாக தடவுவதால் பயன் பெறுவீர்கள்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோலில் உள்ள இனிப்புப் பகுதி கொசுக்கடியிலிருந்து நிவாரணம் பெற உதவு ம். எனவே வாழைப்பழத் தோலின் உள்பகுதி யை பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்ப்பதால் சுகம் பெறுவீர்கள்.

எச்சில்

விரலில் சிறிதுஎச்சிலைத்தொட்டு, அதை கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் லேசாக தடவி உலர விட் டாலும் சுகம் கிடைக்கும்.

உள்ளங்கையால் லேசாக அடித்தல்

இது கொஞ்சம் வழக்கத்தி ற்கு மாறானதாகத் தோன் றலாம். ஆனால், கொசுக்க டி ஏற்பட்ட இடத்தில் லேசாக அடிக்கும் போது, மூளை நரம்புக ளுக்கு வலி எது? அரிப்பு எது? என்ற குழப்பம் ஏற்படுவதால், அரிப்பிலிருத்து சுகம் பெற முடியும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: