Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா

உங்களது குழந்தைக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கிறதா, இதை பற்றி கவலை படும் பெற்றோர்களா நீங்கள்,உங்களது கவலைக்கு முடி வு கட்ட இதோ சில டிப்ஸ்.

விரல் சூப்பும் குழந்தைகளின் விரல் களில் வேப்பெண்ணெய் தடவுதல், பேண்டேஜ் போடுதல் போன்ற வன்முறையான செயல்களைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். இது உங்களுக்கும் உங்கள் குழந் தைக்கும் இடை வெளியை துவக்கத்திலே யே அதிகரித்து விடும்.

விரல்களைச் சூப்பும் குழந்தைகளுக்கு அந்த விரல்களுக்கு ஏதாவது வேலை இரு க்கும்படி ஓவியம் வரைதல், புத்தகங்களை ப் படிக்க வைத்தல் போன்ற மாற்று வழிகளி ல் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் சிறிது சிறிதாக இப்பழக்கத்தை விட்டு விடுவார்கள்.

சில குழந்தைகள் இரவில் தூக்கத்தின் போ து கை சூப்பும். இந்நிலையில் பெற்றோர் விரல்களை எடுத்து விட வேண்டும். இதுபோல் தூங்கும்போது குழ ந்தைகளின் கையில் ஏதாவது ஒரு விளையாட்டுப் பொம்மையைக் கொடுத்தால், அந்தப் பொம்மையைப் பிடித்துக் கொண்டிருக்கி றோம் என்கிற கவனத்தில் விரல் சூப்பாமல் இருக்கும்.

விரல் சூப்பும் குழந்தைகளிடம் அந்தப் பழக் கத்தை மாற்றுவதற்காக, அந்த விரல்களி ல் சூடு போடுவது, குழந்தைகளை அடிப்பது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை விட குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரிடம் காண்பித்துச் சிகிச்சை பெறுவதே சிறந்தது.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: